நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தை வம்சி பைடிபைலி இயக்குகிறார் மற்றும் தில் ராஜு தயாரித்துள்ளார். இது ஒரு வணிக க் குடும்பத்தின் கதையாகவும், குடும்பத்துடன் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு படமாகவும் தெரிகிறது.
நடிகர் விஜய்யின் இந்த ஆண்டின் முதல் திரைப்படமாக இது இருக்கும். அவர் கடைசியாக நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 2022 திரைக்கு வந்தது. வாரிசு திரைப்படத்தின் டிரெய்லரை விஜய்யும் அவரது படக்குழுவினரும் சேர்ந்து வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பதிவிட்டு வருகின்றனர்.
டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களையும், 1.8 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. அஜித் குமார் நடித்து போனி கபூரின் தயாரிப்பில் வெளியாக உள்ள துணிவு திரைப்படத்துடன் இத்திரைப்படம் மோதுவதால், இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே பெரிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் நிறைந்து இருக்கிறது. கருத்து பிரிவில் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பார்வையாளர்களும், விமர்சகர்களும் படத்தில் புதிதாக எதுவும் இல்லாதது போல் தோன்றுகிறது என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
வாரிசு டிரெய்லர்:
டிரெய்லர் தொடங்கிய உடனே சரத்குமார், ஜெயசுதா, அவர்களது மகன்கள் மற்றும் அவர்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு கூட்டு குடும்ப காட்சிகளுடன் ஆரம்பிக்கிறது. விஜய் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவராகவும், வேடிக்கையான, அன்பான மனிதராக இருப்பது போல் அறிமுகப்படுத்தப்படுகிறார். மேலும் அவர் குடும்பத் தொழிலில் ஈடுபடாமல் இருப்பதும் டிரெய்லரின் மூலம் தெரிய வருகிறது. மிகப்பெரிய வணிக சாம்ராஜ்யத்தை வைத்திருக்கும் விஜய்யின் தந்தையாக சரத்குமாரும், அவருக்கு போட்டி தொழில் அதிபராக பிரகாஷ்ராஜ் வில்லனாகவும் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ் சரத்குமாரின் வணிகத்தை குறி வைக்கும் போது விஜய் முன்னிலை வகிக்கிறார் என்று தெரிகிறது.
சில பிரச்சனைகளால் விஜய்யின் குடும்பம் உடைகிறது போலும், மேலும் அவரது குடும்பத்தை ஒன்றிணைத்து அவரின் வணிக சாம்ராஜ்யத்தை காப்பாற்றுவது விஜய்யின் கையில் உள்ளது போலவும் டிரெய்லரின் காட்சிகள் மூலம் கணிக்க முடிகிறது.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகனின் காதலியாக நடிக்கிறார். மேலும் டிரெய்லரை பார்த்த பிறகு அவருக்கு வலுவான கதாபாத்திரம் இல்லை என்று தெரிகிறது. குடும்ப உணர்வு பற்றிய உரையாடல்களுடன் டிரெய்லர் முடிவடைகிறது. எனவே, இப்படம் ஒரு பொதுவான வணிக குடும்ப பொழுதுபோக்கு படமாக தோன்றுகிறது.
வாரிசு கதை மற்றும் நடிகர்கள்:
கதை:
படத்தின் டிரெய்லர்வெளியாகியுள்ள நிலையில் முழு படத்தின் கதையையும் டிரெய்லரின் மூலம் நம்மால் ஓரளவுக்கு கணிக்க முடிகிறது. ஒரு பணக்கார குடும்பத்தின் கதையை சொல்லுவது போல் தெரிகிறது. மேலும் விஜய் இளைய மகனாக இருப்பதாகவும், அவருக்கு இரண்டு அண்ணன்கள் இருப்பதாகவும் டிரெய்லரின் மூலம் தெரிய வருகிறது. வியாபார சாம்ராஜ்யத்தை நடத்தும் தந்தையாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். ஒரு போட்டியாளர் சரத்குமாரின் குடும்பத்தையும், வணிகத்தையும் குறிவைக்கிறார். மேலும் குடும்பத்தை ஒன்றிணைப்பதும், வணிகத்தை பாதுகாப்பதும் விஜய்யின் கையில் உள்ளது.
நடிகர்கள்:
விஜய் கதையின் கதாநாயகனாக நடிக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், பிரபு, குஷ்பூ உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் யோகி பாபு, சங்கீதா கிரேஷ், சம்யுக்தா, VTV கணேஷ், ஸ்ரீமன், கணேஷ் வெங்கட்ராமன், சுமன், ஜான், விஜய் மற்றும் சதீஷ் ஆகியோரும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் எஸ்.தாமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், ரஞ்சிதமே பாடல் வெளியான போது அதை ரசிகர்கள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியாகும் நாள்:
இந்த படம் ஜனவரி 11, 2023 அன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது. வாரிசு திரைப்படம், அஜித்தின் துணிவு திரைப்படத்துடன் ஒரே நாளில் வெளியாவதால், இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் இருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படம் ஒரே நாளில் வெளியாவதால், திரையரங்குகளை சமமாக பிரித்து இரண்டு திரைப்படங்களையும் வெளியிடும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Suggested reading: அஜித்தின் துணிவு படத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது