பிக் பாஸ் சீசன் 6 ஃபைனலிஸ்ட் (Bigg Boss 6 finalists)

Devayani
16 Jan 2023
பிக் பாஸ் சீசன் 6 ஃபைனலிஸ்ட் (Bigg Boss 6 finalists)

பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் முடிவை நெருங்கி உள்ள நிலையில், கடந்த வாரம் தான் பைனல் எலிமினேஷன் வரமாக இருந்தது. ஜி.பி முத்து, சாந்தி, அசல் கோலார், ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரட்சிதா இவர்களை அடுத்து தற்போது போன வாரம் எடிகே அவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். எனவே அஸீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், நந்தினி, அமுதவாணன் ஆகிய ஆறு பேரும் இறுதி போட்டியாளராக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதைத் தவிர கடந்த வாரம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சிறப்பான வாரமாக இருந்தது‌. ஏனென்றால், எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களும் மீண்டும் வீட்டிற்கு வந்தனர். வீட்டில் இருந்த போட்டியாளர்களுக்கு ஏராளமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. குறிப்பாக சாக்ரிஃபைஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஏதாவது ஒன்றை சாக்ரிஃபைஸ் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு முடியை வெட்டுவது, பிடித்த காலனியை பெயிண்டில் நினைப்பது, மற்றவர்களின் உடைய அணிந்து கொள்வது, இதுபோன்று ஒவ்வொரு போட்டியாளருக்கும் எது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ அதை டாஸ்காக வழங்கினார். அனைத்து போட்டியாளர்களும் தங்களால் முடிந்தவரை நன்றாக செயல்பட்டாலும் வழக்கம்போல் சில பிரச்சனைகளும் நடந்தது.

வார இறுதியில் கமலஹாசன் வந்த பிறகு போட்டியாளர்களிடம் நிறைய கேள்விகளை கேட்டார் மற்றும் இந்த சீசனில் யார் "Best Find" என்று நினைக்கிறீர்கள் என்று அனைத்து போட்டியாளர்களிடமும் கேட்டபோது ஷிவினுக்கு ஒன்பது வாக்குகளும், தனலட்சுமிக்கு 5 வாக்குகளும் வந்தது. விக்ரமன் கூறிய வார்த்தைகளை கேட்டு ஷிவின் சிறிது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

shivin

பிறகு அஸீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் எலிமினேஷனில் இருந்து சேவ் செய்யப்பட்டனர். ஏற்கனவே அமுதவாணன் டிக்கெட் டூ ஃபினாலே வென்றதால் அவர் ஏற்கனவே பைனல்சருக்கு சென்று விட்டார். மீதி உள்ள எடிகே, மைனா மற்றும் கதிரவண்ணில் கமலஹாசன் அனைவரையும் பானையை அடிக்கச் சொன்னார். அதில் மைனாவுக்கும், கதிரவனுக்கும் வெள்ளை ரோஜாக்கள் கிடைத்தது, ஏடிகேவிற்க்கு சிவப்பு ரோஜாக்கள் கிடைத்த நிலையில் கமலஹாசன் எடிகே தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்பதை அறிவித்தார்.
ஏடிகே வெளியே செல்லும்போது பிக் பாஸ் அவருக்கு "வெல் பிளேட்' என்று வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார். மேலும் சாக்ரிஃபைஸ் டாஸ்க்கில் ஏடிகேவுக்கு அவரது முடியை ஜீனியை போல் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறிய போது அவர் அதை செய்தார். ஏடிகே வெளிய வந்தவுடன் கமலஹாசன் அவரது குல்லாவை ஏடிகேவிற்க்கு பரிசாக வழங்கினார்.

போட்டியின் இறுதி நாட்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சிறந்த போட்டியாளர்களையும் வெளியேற்றி தான் ஆக வேண்டும்‌. ஆனாலும் இந்த தடைகள் அனைத்தையும் கடந்து கடைசியாக ஆறு போட்டியாளர்கள் இறுதி வாரத்திற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். 

big boss

இந்த முறை பிக் பாஸ் ஆரம்பித்தபோது ஜிபி முத்துவினால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது மற்றும் இந்த பிக் பாஸ் ஆறு சீசனுக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஒரு வாரத்திலேயே ஜி.பி முத்து வெளியேறிய பிறகு அவரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டும் இன்றி இதுபோன்று பல திருப்பங்கள் இந்த முறை பிக் பாஸில் நடந்து வருகிறது. அதில் குறிப்பாக ரட்சிதா மற்றும் தனலட்சுமி வெளியேறியது அனைவரையும் ஆச்சரியத்தில் நிரப்பியது. பலர் ஓட்டு முறை சரியில்லை என்றும் அவர்களின் சேனலில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இப்படி பல திருப்பங்களையும், அதிர்ச்சிகளையும் கொடுத்த பிக் பாஸ் சீசன் 6 இறுதிச்சுற்று ஜனவரி 22 விஜய் டெலிவிஷனில் ஒளிபரப்பாக உள்ளது.

Read The Next Article