மக்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் சமூக ஊடகங்களின் நோக்கம் மற்றும் பயன்பாடு விரிவடைந்துள்ளது. தற்பொழுது போழுதுபோக்கு, வணிகம், செய்தி இப்படி அனைத்திற்கும் மக்கள் சமூக வலைதளங்களை தான் பார்க்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி 2021ஆம் ஆண்டில் 4.26 பில்லியனுக்கும் அதிகமான தனி நபர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என்றும் மேலும், அந்த எண்ணிக்கை 2027 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 6 பில்லியன் ஆக உயரும் என்று கூறப்படுகிறது.
சமூக ஊடகம் பிரபலம் அடைந்த வருவதால் கன்டென்ட் கிரியேட்டர்களின் (content creator) முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அதேபோல் மார்க்கெட்டிங்யை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கின்றனர். ஏனெனில், அனைவரும் சமூக வலைத்தளங்களில் இருப்பதால் மக்கள் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு அந்த பொருளை வாங்கி, பயன்படுத்தி ஒருவர் கூறும் கருத்துகளை பார்த்த பிறகு தான் அந்த பொருளை வாங்கலாமா வேண்டாமா என முடிவு செய்கின்றனர். ஒரு கணக்கெடுப்பின்படி மைக்ரோ இன்புளுவன்சரின் ஒரு பதிவிட்டை பார்த்து பொருட்களை வாங்கியவர்கள் 24.7 சதவீதமாக உள்ளது. அதேபோல் 45.4 சதவீதம் பேர் இன்ஃப்ளூயன்சர் (influencer) கூறுவதை முயற்சி செய்து பார்த்ததாகவும் கூறியுள்ளனர். இந்த காரணத்தினால் பிராண்டுகள் அதிக அளவில் மக்களிடம் செல்வதற்காகவும், பிராண்டுகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இன்ஃப்ளூயன்சர்களுடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். இப்படி பிராண்டுகளும், இன்ஃப்ளூயன்சர்களும் சேர்ந்து உழைக்கும் பொழுது அது இருவருக்குமே நன்மையை அளிக்கிறது.
பிராண்ட் (brand) அங்கீகாரம்:
ஒரு இன்ஃப்ளூயன்சர் அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் பற்றியும் அவர்களின் ஆடியன்ஸ் பற்றியும் முழுமையாக புரிந்து வைத்திருப்பர். எனவே, ஒரு பிராண்ட் அவர்களிடம் வரும்பொழுது அவர்கள் அந்த பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த முடியும். இதன் மூலம் பிராண்டுகளுக்கும் விற்பனை அதிக அளவில் நடக்கும். இன்ஃப்ளூயன்சர்களுக்கும் பிராண்டுகள் சம்பளம் வழங்குவதுண்டு. ஒவ்வொரு இன்ஃப்ளூயன்சருக்கும் ஒவ்வொரு தனித்துவ பாணி இருக்கும். அந்த திறமையை வைத்து அவர்களால் மக்களிடம் ஒரு நல்ல உறவை உருவாக்க முடியும். பார்வையாளர்களும் அவர்கள் கூறுவதை அவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ள முடியும்.
பொருட்கள் பற்றிய கருத்து:
இன்ஃப்ளூயன்சர் பாரபட்சமில்லாமல் நியாயமான கருத்தை தருகிறார்கள் என மக்கள் நம்புகின்றனர். அதுவே பார்வையாளர்களின் பார்வையில் அவர்களை நம்பகத்தன்மை உடையவர்களாக காண்பிக்கிறது. ஒரு பொருளை முழுமையாக அதன் பயன்பாடு, அதன் எதிர்பார்ப்புகள், அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என மக்கள் மனதில் இருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள் பதில் வழங்குவதால், இந்த அனைத்து தகவல்களையும் கேட்ட பிறகு தான் நுகர்வோர் அதை வாங்க முடிவெடுக்கின்றனர்.
தாக்கம்:
கன்டென்ட் கிரியேட்டர்ஸ் மேல் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் அவர்கள் தனிப்பட்ட அளவில் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்ததால் தான் இன்ஃப்ளூயன்சரை பின் தொடர்கின்றனர். இன்ஃப்ளூயன்சர் மக்களிடம் செல்வாக்கு பெற அவர்களின் தாய்மொழியில் பேசுவது, பேச்சு வழக்கில் கன்டென்ட் கிரியேட் செய்வது இது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்து வருகின்றனர். எனவே, ஒரு சில பொருட்கள் வாங்குவதற்கு முன் மக்கள் அவர்களின் ஆலோசனையை பார்ப்பதுண்டு. மறுபுறம் பிராண்டுகள் இதை நிச்சயமாக தங்கள் நன்மைக்காக பயன்படுத்த முடியும். இது விற்பனைகளை அதிகரிக்க உதவும் மற்றும் பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும்.
மலிவு விலை:
இன்ஃப்ளூயன்சர் பரந்த பார்வையாளர்களை ஈர்க்கும் கன்டென்டை தயாரிக்கின்றனர். அதை உறுதி செய்ய மலிவு விலையில் உள்ள நல்ல தரமான பொருட்களை மற்றும் சேவைகளை மக்களுக்கு பரிந்துரைக்கின்றனர். அதுவே பார்வையாளர்களை வாங்க தூண்டுகிறது. அது மட்டும் இன்றி மக்கள் அவர்களை தொடர்ந்து பின் தொடர்வதையும் இதன் மூலம் உறுதி செய்ய முடியும்.
கன்டென்ட் கிரியேட்டர்களின் எதிர்காலம்:
மக்கள் டிஜிட்டல் மயமாகி வருவதால் காலப்போக்கில் சமூக ஊடகங்களின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அதன் விளைவாக கன்டென்ட் கிரியேட்டர்களின் மூலம் மார்க்கெட்டிங் அடுத்த நிலையை அடையும். தற்போது இருப்பதை விட இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. உண்மையில், இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங் ஒரு பயனுள்ள உத்தியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இது பொதுமக்களை ஈடுபடுத்துகிறது, அவர்களுடன் உறவுகளை உருவாக்குகிறது, வணிகங்களின் இருப்பு மற்றும் அவர்களின் தயாரிப்புகளின் மதிப்பைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்கிறது மற்றும் இறுதியில் அவர்களின் வாங்குதல் முடிவுகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகளில் வாடிக்கையாளர் ஆர்வத்தை அதிகரிக்கவும், நீண்ட கால நன்மைகளை இலக்காகக் கொள்ளவும் இன்ஃப்ளூயன்சர்ளுடன் ஒத்துழைப்பதைக் காணலாம்.