Advertisment

வருங்கால தந்தை பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

author-image
Devayani
New Update
kanaa

இன்றைய தந்தைகளும், வருங்கால தந்தைகளும் நினைத்தால் இந்த சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். நல்ல பெற்றோர்கள் என்பதன் அர்த்தம் என்ன? வருங்கால பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு சிறந்தவர்களாக இருக்க விரும்புகின்றனர், அவர்களை பார்த்து குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர், குழந்தைகள் எந்த ஒரு பயமும் இல்லாமல் ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால் தங்களை அணுக வேண்டும் என்றும், அவர்களுக்கு இந்த உலகத்தை சிறந்த முறையில் காட்ட வேண்டும் என்றும் விரும்புகின்றனர். தங்களை மேம்படுத்திக் கொள்ள நினைக்கும் பெற்றோர்களுக்கு இந்த கேள்வி மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

Advertisment



நல்ல பெற்றோர் என்ற வார்த்தையை கேட்டால் என நினைவிற்கு வரும்? ஒரு அப்பா வெளியே சென்று வேலை பார்த்து குடும்பத்தின் பண செலவுகளை ஏற்றுக் கொள்ளுதல், குடும்பத்தை பாதுகாப்பவராக இருத்தல். ஒரு அம்மா, வீட்டை பராமரித்து குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல். காலம் காலமாக இதைத்தான் அனைவரும் சிறந்த பெற்றோர்கள் என்று கூறினர். 

ஆனால், இன்று இருக்கும் சூழ்நிலைக்கு வீட்டில் ஒருவர் வேலைக்கு சென்று குடும்ப செலவுகளை பார்ப்பது கடினம். அது மட்டும் இன்றி பெண்களும் அவர்கள் உரிமைக்காக குரல் எழுப்ப தொடங்கிவிட்டனர். பல ஆண்களும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று சமூக விதிமுறைகளை முறியடிக்க தொடங்கிவிட்டனர். ஆண்களைப் போல பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கிவிட்டது போல ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கு கொள்கின்றனர். வருங்கால தந்தைகளும் ஆணாதிக்கத்தை விட்டு வெளியே வந்து சமூகத்தில் சமத்துவத்தை பரப்ப உதவ வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து தான் கற்றுக் கொள்கின்றனர். எனவே, பெற்றோர்கள் அவர்களின் ஒவ்வொரு செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.



பியூ ஆராய்ச்சி மையத்தின் படி கடந்த அரை நூற்றாண்டில் தந்தைகள் குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளில் செலவிடும் நேரம் கணிசமாக அதிகரித்துள்ளது. 1965இல் வாரத்திற்கு 6.5 மணி நேரமாக இருந்தது 2011ல் 17 மணி நேரமாக அதிகரித்துள்ளது. அதேபோல் 2000 அம்மாக்கள் மற்றும் அப்பாக்களிடம் மற்றொரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆராய்ச்சியில் சுமார் 75 சதவீத அப்பாக்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதே தங்கள் முதன்மையான கடமை எனக் கூறியுள்ளனர்.

Advertisment

 

ஒரு பெண் கூறிய தனிப்பட்ட குறிப்பை பார்ப்போம். "என் தந்தை தனது முக்கியமான கடமைகளில் இருந்து பின்வாங்கி இதுவரை நான் பார்த்ததில்லை. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் தேவைப்படும் இடங்களில் எல்லாம் அவர் என்னுடன் இருந்தார். ஒரு சிறிய குடும்ப நிகழ்ச்சியையும் அவர் தவறவிட்டதில்லை. அதேபோல எனது பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு, விளையாட்டுப் போட்டிகள், நான் பங்கு பெற்ற நிகழ்ச்சிகள் இவை எதையும் அவர் தவறவிட்டதில்லை. முக்கியமாக வீட்டு வேலைகளில் பங்கு கொள்வார். மேலும் மாதவிடாய் பற்றியும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் என்னால் அவருடன் பேச முடியும். 

என் தந்தை என்னை சுதந்திரமாக இருக்க வேண்டும், யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது, சொந்த காலில் நிற்க வேண்டும் என கூறுவார். நான் எப்பொழுதும் அவரை ஒரு முன் உதாரணமாகவே பார்க்கிறேன்". 



இப்படி ஒரு சூழ்நிலையில் வாழும் குழந்தைகள் பாலின பாகுபாடு இன்றி இவர் பெரியவர், இவர் தாழ்ந்தவர் என்ற எண்ணம் இன்றி வளருகின்றனர். நாம் இப்பொழுது இருக்கும் சமுதாயத்தில் முன்பை விட நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கு. இவரைப் போன்ற ஆண்களால், தந்தைகளால் மட்டுமே வரவிருக்கும் தலைமுறைக்கு பாலின விதிமுறைகளில் இருந்து விடுபட்டு சமத்துவத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட சமூகத்தை உருவாக்க முடியும். தற்போதைய தந்தைகளும் இந்த மாற்றத்தில் பெரிய பங்கு வகிக்கின்றனர். இந்த மாற்றத்தால் ஆண், பெண் இருவரும் சுதந்திரமாக சம உரிமைகளைக் கொண்டு வாழ முடியும். ஆனால் பின்வரும் தலைமுறையின் தந்தைகள் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து தான் சமூகத்தில் முழுமையான சமத்துவத்தை கொண்டு வர முடியும்.



அதுவும் ஆண் பிள்ளைகளுக்கு தந்தையாக இருக்கும் ஒருவர் பிள்ளைகளுக்கு நச்சு வாய்ந்த ஆணாதிக்கத்தை விட்டு சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு நல்ல தந்தையாக அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். வீட்டில் உங்கள் அம்மா, மனைவி, சகோதரி என அனைவரிடமும் நீங்கள் நடந்து கொள்வதை வைத்து தான் பிள்ளைகள் கற்றுக் கொள்வார்கள். பெண் பிள்ளைகளை பெரும் அப்பாக்கள், அவர்களை இந்தப் பாலின பாகுபாடுகளில் இருந்து விலக்கி வைத்து சுதந்திரமாக அவர்களுக்கு பிடித்ததை செய்வதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். எனவே இந்த சமூகத்தின் மாற்றம் தந்தைகளின் கையில் உள்ளது.

குழந்தை வளர்ப்பு தந்தை
Advertisment