இன்னைக்கு என்ன சமையல் (Innaiku Enna Samayal) சுனிதாவின் பயணம்

Devayani
08 Feb 2023
இன்னைக்கு என்ன சமையல் (Innaiku Enna Samayal) சுனிதாவின் பயணம்

டிஜிட்டல் உலகில் பலர் அவர்களின் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அப்படி YouTubeல் தன் சமையல் திறமையை காட்டி பல மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் சுனிதா. YouTubeல் தமிழ்(Innaiku Enna Samayal), ஆங்கிலம்(Living Flavours with Sunitha) என இரு மொழிகளிலும் சுனிதா சேனல் வைத்துள்ளார். இவரைப் பற்றியும், இவர் கடந்து வந்த பாதை பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

YouTube சேனல் ஆரம்பித்த கதை:

சிறுவயதில் இருந்தே அவர் தந்தை சமைப்பதை பார்த்து வளர்ந்த சுனிதா, அதில் ஆர்வம் கொண்டு சமைக்க தொடங்கி உள்ளார். படித்து முடித்துவிட்டு ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில்(MNC) வேலை செய்து வந்தார். பிறகு திருமணம் ஆகி, குழந்தை பிறந்தவுடன் குழந்தையை பார்த்துக்கொண்டு, குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது, அப்பொழுதுதான் அவரின் YouTube பயணம் தொடங்கியது. மகப்பேற்று விடுப்பில்(Maternity leave) இருந்தபோது நிறைய YouTube சேனல்களை இவர் பார்த்துள்ளார். பிறகு தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை வைத்து YouTube சேனல் தொடங்கலாம் என நினைத்தபோது, அவரின் ஆர்வம் சமையலில் இருந்ததால் அதை வைத்து வீடியோக்கள் பதிவிடலாம் என்று முடிவெடுத்தார். 

Innaiku Enna Samayal

ஆரம்பகால சவால்கள்:

இரண்டு மாதங்களுக்கு வீடியோக்களை எப்படி எடுப்பது, எது நன்றாக இருக்கிறது என பரிசோதித்த பிறகு தான் YouTubeயில் பதிவிட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் வீடியோக்கள் எடுப்பது, சேனல் எப்படி தொடங்குவது என எதுவும் தெரியாமல் இருந்தபோது YouTubeலேயே அனைத்தையும் பார்த்து அவரும், அவர் கணவர் ராம் அவர்களும் கற்றுக் கொண்டு இதை தொடங்கியுள்ளனர். சுனிதா அந்த கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே YouTubeல் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். பிறகு முழு நேரமாக YouTubeல் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் சில பார்வையாளர்களையே பெற்றது. அதுவும் பெரும்பாலும் குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து வந்தவை ஆகும். ஒரு முறை கிச்சன் ஆர்கனைசேஷன்(kitchn organisation) என்ற வீடியோவை பதிவிட்ட பிறகு பார்வையாளர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர். எனவே, பார்வையாளர்களுக்கு இதுபோன்ற வீடியோக்கள் பிடிக்கிறது என்று அறிந்து கொண்டு சமையலுடன் சேர்த்து இது போன்ற வீடியோக்களையும் பதிவிட தொடங்கினார். 

sunitha samayal

இவர் சேனலின் தனித்துவம்:

வெறும் சமைப்பதை மட்டும் காட்டாமல் அதற்கான பொருள் வாங்குவதிலிருந்து, எப்படி எல்லாம் அதை தயார் செய்கிறார்கள் என்பதையும் விளக்கத்துடன் பதிவிட தொடங்கினார். இவர் சமையல் வீடியோக்கள் மட்டுமின்றி பியூட்டி டிப்ஸ், லைஃப் ஸ்டைல், ஆர்கனைசேஷன் போன்ற அனைத்தையும் ஒரே வீடியோவில் பதிவிடுவதால், வெவ்வேறு விருப்பங்களை கொண்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.

சுனிதாவின் ஆதரவாளர்:

இந்தப் பயணத்தில் தனக்கு ஆதரவாக இருந்தது அவர் கணவர் ராம் என்பதை பல முறை இவர் நேர்காணலில் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இவரும், இவர் கணவரும் வீடியோக்கள் எப்படி எடுப்பது, எடிட் செய்வது போன்ற அனைத்தையும் YouTube சேனல் பார்த்து தான் கற்றுக்கொண்டனர். எனவே, சமைப்பது போன்ற மற்ற விஷயங்களை சுனிதா பார்த்துக் கொள்கிறார், கேமராவை கையாள்வது போன்ற விஷயங்களை அவரது கணவர் பார்த்துக் கொள்கிறார்.

எதிர்மறையான கருத்துக்களை எப்படி எதிர்கொள்கிறார்?

நாம் சமூக வலைத்தளங்களில் ஏதாவது பற்றி விடுகிறோம் என்றாலேயே பல எதிர்மறையான கருத்துக்கள் வரும். அப்படி இவருக்கு எதிர்மறையான கருத்துக்களும் வந்திருக்கிறது. குறிப்பாக நம் ஊரில் உடலை வைத்தும், நிறத்தை வைத்தும் ஒருவரை கிண்டல் செய்வது என்பது நம் அனைவரும் அனுபவித்திருப்போம். அப்படி இவரும் நிறத்தை வைத்து விமர்சனங்களை எதிர்கொண்டு உள்ளார். ஆனால் அதை எதிர்கொள்ள பழகிக்கொண்டு, தன்னை வளர்க்கும் விதமாக வரும் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, மற்ற கருத்துக்களை நிராகரித்து விடுகிறார். 

masterchef sunitha innaiku enna samayal⁠⁠⁠⁠⁠⁠⁠

YouTubeல் வாரத்திற்கு மூன்று, நான்கு வீடியோக்கள் பதிவிடும் போது அதற்காக நாம் நிறைய உழைக்க வேண்டும். ஏனென்றால், ஒரே விஷயத்தை காண்பித்தால் மக்கள் அதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதனால் இவர் ஒவ்வொரு வீடியோவிலும் புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும். அதுவும் சமையல் என்பதால் அதற்கான நேரமும் நிறைய எடுக்கக்கூடும். அதேபோல் அதை முன்கூட்டியே செய்து பார்த்து மக்களுக்கு அதை தெளிவாக கூற தயாராக இருக்க வேண்டும். இவருக்கு தெரியாத விஷயத்தை கூட மக்கள் கேட்டால் அதனை கற்றுக் கொண்டு அவர்களுக்காக அதை செய்து காட்டுகிறார்.

ஆரம்பித்த ஆறு, ஏழு மாதத்தில் அவருக்கு பெரிதாக எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. ஆனால், அதன் பிறகு அவரின் பதிவுகள் மக்களை சென்றடைந்தது. அது தற்பொழுது 7.6 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வரை வளர்ந்துள்ளது.

மேலும் இவர் பல விருதுகளை வென்றுள்ளார் மற்றும் மாஸ்டர் செஃப் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு டாப் ஏழு போட்டியாளர்களும் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Suggested Reading: Home Cooking Show வெற்றியின் காரணம் - Hema Subramanian

Suggested Reading: குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?

அடுத்த கட்டுரை