Advertisment

Home Cooking Show வெற்றியின் காரணம் - Hema Subramanian

author-image
Devayani
New Update
Hema

மக்களின் வாழ்க்கை முறை மாறிவரும் நிலையில் டிஜிட்டல் இந்த மாற்றத்திற்கு பெரிய பங்கு வகிக்கிறது. இப்பொழுதெல்லாம் சமையல் என்றாலே பெரும்பாலான மக்கள் YouTube பார்த்து தான் செய்கின்றனர். விதவிதமான உணவை பார்த்து சமைக்க கற்றுக் கொள்கின்றனர். இந்த மாதிரி பல வகையான உணவுகளை சமைத்து மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் செயல் முறையை கூறி வீடியோக்களை பதிவேற்றுகிறார் ஹேமா சுப்ரமணியன்(Hema Subramanian).

Advertisment

ஹேமா சுப்ரமணியனின் ஹோம் குக்கிங் ஷோ ஆங்கிலம் (Home Cooking Show) , தமிழ் (Home Cooking Tamil), தெலுங்கு(Home Cooking Telugu) என மூன்று மொழிகளிலும் சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தொடங்கிய இந்த சேனல் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடங்கப்பட்டது.

ஹோம் குக்கிங் ஷோவின்(Home Cooking Show) தனித்துவம்:

இந்த சேனலின் தனித்துவம் என்னவென்றால் ஒரு உணவின் செயல்முறையை மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் எடுத்துரைப்பது. மற்றும் இவர்களின் YouTube சேனல் பற்றிய இன்னொரு சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு சமையல் வீடியோவும் 10 நிமிடத்திற்கு மேல் இருக்காது. எனவே, புதிதாக சமைக்க நினைப்போர் முதல் சமையலில் தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் இதிலிருந்து எளிதாக கற்றுக் கொள்ளலாம்.

HCT

Advertisment

ஹோம் குக்கிங் ஷோ(Home Cooking Show) எப்படி தொடங்கியது?

சினிமா விகடனிடம் அளித்த நேர்காணலின்போது ஹோம் குக்கிங் ஷோ (Home Cooking Show) எப்படி தொடங்கியது என்று கேட்டபோது ஹேமா அதற்கு முதலில் அவருக்கு சமைக்கத் தெரியாது என்றும் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவிற்கு சென்ற பிறகு சமைக்க கற்று கொண்டதாக கூறினார். அப்போது சமையல் மீது அவருக்கு ஆர்வம் வந்து, புதிதாக உணவுகளை செய்து பார்த்தார். இந்தியா திரும்பிய பிறகு ஒரு கம்பெனிக்காக சமையல் கன்டென்ட்டை உருவாக்க தொடங்கினார் என்றும் இந்த வாய்ப்பு அவர் கணவரின் மூலமாக வந்தது என்றும் அவர் கூறினார். 

இரண்டு வருடங்கள் அந்த கம்பெனிக்காக கன்டென்ட் கிரியேட் செய்த பிறகு சொந்தமாக ஒரு YouTube சேனல் தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு ஆங்கிலத்தில் ஹோம் குக்கிங் ஷோ(Home Cooking Show) என்று ஒரு YouTube சேனலை தொடங்கினார்.

ஹோம் குக்கிங் ஷோவின்(Home Cooking Show) பெயர் காரணம்:

ஹோம் குக்கிங் என்றால் வீட்டு சமையல். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையாக சமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஹோம் குக்கிங் என்ற பெயரை வைத்ததாக கூறினார். எனவே, அந்த பெயருக்கு ஏற்ற மாதிரி செயல்முறைகளை எளிதாக மாற்றி எல்லா மக்களுக்கும் புரியும் வகையில் வீடியோக்களை பதிவிட தொடங்கினார்.

Advertisment

hc food

இப்படி தொடங்கப்பட்ட ஹோம் குக்கிங்(Home Cooking) சேனல் தற்போது பத்து வருடங்களை கடந்து வெற்றிகரமாக முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சிறிதாக ஒரு கேமராவுடன் தொடங்கிய இந்த பயணம் தற்போது அதற்காகவே ஒரு தனி ஸ்டுடியோ(studio) அமைத்து, பல கேமராக்களை வைத்து வெவ்வேறு திசையில் இருந்து எடுத்து வருகின்றனர். இதற்கென்று ஒரு குழு அமைத்து தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது.

வெற்றியின் காரணம்:

இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய கடின உழைப்பு. ஏனென்றால் சமையல் வீடியோக்கள் எடுப்பது எளிதல்ல. ஒரு வீடியோ எடுப்பதற்கு முன்பு அதற்காக தயார் செய்ய வேண்டும். முன்பே அந்த உணவை சமைத்து பார்த்து, அதை எவ்வளவு எளிமையாக மக்களுக்கு சொல்லலாம் என்பதையும் யோசிக்க வேண்டும். வீடியோக்களை எப்படி எடுக்க போகிறோம், அதை எடிட்(edit) செய்த பிறகு எப்படி இருக்க வேண்டும் என்பதை எல்லாம் முன்பே தீர்மானித்து வைக்க வேண்டும்.

Advertisment

வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் செய்யும் உணவுகளின் பொருட்கள் எளிதாக கடையில் கிடைக்குமாறு அல்லது வீட்டில் ஏற்கனவே இருக்கும் பொருட்களை வைத்து செய்வது தான். பலமுறை எந்த உணவை செய்ய வேண்டும் என்பதை அவர் தேர்ந்தெடுப்பார். அதற்காக அந்த உணவை பலமுறை முன்பே செய்து பார்த்து, அது எப்படி இருக்கிறது என்பதை தீர்மானிக்கிறார். மேலும் மக்கள் அவரிடம் கேட்கும் உணவுகளையும் மக்களுக்காக கற்றுக்கொண்டு, அதை அவர்களுக்கு செய்து காண்பிக்கிறார். 

அவர் நிறைய புதிய உணவுகளை எப்படி செய்வது என பரிசோதித்துப் பார்க்கிறார். முதலில் அவர் கணவர் மற்றும் மகனுக்கு தருகிறார். அவர்கள் அதை உண்டு பார்த்து உண்மையாக அது எப்படி இருக்கிறது என்று கூறுவர். ஒருவேளை அது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதையும் அவர்கள் வெளிப்படையாக கூறுவர் என்று அவர் கூறினார்.

hc cake

Advertisment

தற்போது அவரின் குழுவில் 10 பேர் இருக்கின்றனர். அதில் கேமரா, எடிட்டர் மற்றும் மூன்று சேனல்களையும் பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக்கின்றனர். அனைத்தையும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்த பிறகு தான் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். ஆங்கிலத்தில் எடுக்கும் வீடியோக்களை தமிழ் மற்றும் தெலுங்கு சேனலுக்காக வாய்ஸ் ஓவர்(voice over) செய்து அதனை பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோன்று இல்லத்தரசிகள் அவர்களின் சமையல் திறமையை காட்ட நினைத்தால் அவர்களுக்காக ஹேமா சுப்ரமணியன் கூறும் ஆலோசனை:

யாருக்காவது இந்த மாதிரியான இன்ட்ரஸ்ட்(interest) இருந்தால் முதலில் அவர்களுடைய 100% உழைப்பை தர வேண்டும். பிறகு அதற்காக கடின உழைப்பு செய்ய வேண்டும். அவர்கள் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும், இது முடியுமா? முடியாதா? என்று சந்தேகம் அவர்களுக்கு இருக்கக் கூடாது. கண்டிப்பாக பணரீதியாக அவர்களுக்கு ஆதரவு தேவைப்படும்.

குறிப்பாக குடும்பத்தின் ஆதரவு தேவைப்படும். ஒரு இல்லத்தரசி குடும்பத்தையும், வேலையையும் சமமாக பார்த்துக் கொள்ள வேண்டுமெனில் அதற்கு குடும்பத்தின் ஆதரவு மிகவும் முக்கியம் என்று அவர் சொல்கிறார். அதேபோல் ஒரு இரண்டு, மூன்று வீடியோக்களை பதிவேற்றிவிட்டு வெற்றி கிடைக்கவில்லை என்று நினைக்க கூடாது. வெற்றி ஒரு இரவில் கிடைத்து விடாது. அதற்கு நாம் நிறைய கடின உழைப்பு செய்ய வேண்டும். அவர்களுக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் அவர்களை தேடி வந்து அவர்களின் வீடியோக்களை பார்ப்பார்கள் என்று அவர் ஆலோசனை கூறினார்.

Advertisment

Suggested Reading: கோலங்களை தொழிலாக மாற்றி இரண்டு லட்சம் வருவாய் பெறுகிறார் தீபிகா

Suggested Reading: ஊர்மிளா தனது உணவுத் தொழிலை 77 வயதில் ஆரம்பித்துள்ளார் 

Suggested Reading:  RJ Sindhu சிரிக்கவும் வைக்கிறார், சிந்திக்கவும் வைக்கிறார்!

Home Cooking Tamil Hema Subramanian Home Cooking Show
Advertisment