Advertisment

கோலங்களை தொழிலாக மாற்றி இரண்டு லட்சம் வருவாய் பெறுகிறார் தீபிகா

பொழுதுபோக்கான ஒரு விஷயத்தை தொழிலாக மாற்றி லாபத்தை பெற்று வருகிறார் தீபிகா. அவரின் தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
30 Dec 2022 | புதுப்பிக்கப்பட்டது 30 Mar 2023
கோலங்களை தொழிலாக மாற்றி இரண்டு லட்சம் வருவாய் பெறுகிறார் தீபிகா

Image of Deepika

தீபிகா சிறுவயதில் இருந்து அவரது தாயும், பாட்டியும் வீட்டு வாசலில் கோலங்கள் போடுவதை பார்த்து வளர்ந்துள்ளார். இந்த பாரம்பரிய கலையின் மூலம் ஆச்சரியமடைந்த தீபிகா அவர்களுடன் இணைந்து இதைப்பற்றி நிறைய கற்றுக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு இந்த பொழுதுபோக்கை தொழிலாக மாற்றி Home2Cherish என்ற பெயரில் தனித்துவமான வீட்டு அலங்கார பொருட்களில் கோலங்களை சேர்த்து நிறைய வடிவங்கள் மற்றும் கலர்களை இணைத்து மலிவு விலையில் விற்று வருகிறார்.

Advertisment

SheThePeople இடம் பேசும்போது "நான் ஒரு தற்செயலான தொழில் முனைவர். நான் ஒரு முறை பலகையில் பெயிண்ட் மூலம் வரைந்த கோலத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். அதற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. அதுவே என்னை தொழில் ஆரம்பிக்க ஊக்கவித்தது". 

கடந்த மூன்று ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட பொருட்களை விற்று உள்ளனர் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இருக்கின்றனர். இதுவரை US, UK, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கு அவர்களின் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளனர். GPay மூலம் பொருட்களுக்கான பணத்தை சுலபமாக பெற முடிகிறது என்றும் கூறினார்.

"நான் எனது தொழிலில் சிறிய சிறிய படிகளை முன்னெடுத்து வைக்கிறேன். எனக்கு ரிஸ்க் எடுப்பதில் நம்பிக்கை இல்லை. நான் எனது விருப்பத்திற்கு ஏற்ப தான் வேலை செய்கிறேன். அப்பொழுதுதான் என்னால் நிதானமாக அனைத்தையும் எப்படி கையாள்வது என்று கற்றுக் கொள்ள முடிகிறது" என்று கூறி அவர் தொழிலுக்கு சிறிய முதலீடான 1750 ரூபாயில் ஆரம்பித்து தற்போது மாதம் இரண்டு லட்சம் வரை வருவாய் வருகிறது என்றும் தெரிவித்தார்.

Advertisment

kolam

கோலம் போடும் கலை:

அவர் அக்ரலிக் கலர்களை கொண்டுதான் இந்த கோலங்களை பலகையில் வரைகிறார். பிறகு பெயிண்ட் காய்ந்தவுடன் பலகை வார்னிஷ் அடித்து அந்த பொருளை செய்து முடிக்கிறார். "நான் இதை வரையும் பொழுது கவனமாக இருக்க வேண்டும், ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது மற்றும் அது முழுமையாக மாறிவிடும் என்பதால் நான் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நான் இதை செய்யும்போது மிக கவனமாக இருப்பேன். எனது வடிவமைப்பில் எந்த ஒரு தவறும் ஏற்படக் கூடாது என நிறைய முயற்சிகளை எடுத்து வருகிறேன்" என்ற விளக்கினார்.

ஒரு ஆர்டரை முடிக்க 35 முதல் 40 நாட்கள் வரை ஆகிறது. ஒரு பொருளை செய்து முடிப்பதற்கு நிறைய செயல்முறைகள் உள்ளது. "எனது வாடிக்கையாளர்கள் இதை செய்வதற்கு நிறைய நாட்கள் எடுக்கும் என புரிந்து கொண்டதால், நாட்களை பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை".

Advertisment

தீபிகாவின் சிறந்த விற்பனையாக கோலம்படி இருக்கிறது. இது சாமி சிலைகள் மற்றும் விளக்குகள் வைக்கும் ஒரு பூஜை அறையில் உள்ள பலகை ஆகும். பெயர் பலகை, வீட்டு அலங்காரம், கதவு பலகைகள் இது போன்றவை அவர்களின் சிறந்த விற்பனையாகும் பொருட்களாக இருந்து வருகிறது.

பெரிய ஆதரவு:

அவரின் கணவர் அவருக்கு பெரிய அளவில் ஆதரவை அழைத்து வருகிறார். "அவர் என்னை அவ்வப்போது வழி நடத்துவார். நான் பொருட்களின் தரத்தின் மேல் கவனம் செலுத்துவது அவசியம் என்பதால் அவர் பேக்கேஜிங் மற்றும் பேமண்ட்களை கவனித்துக் கொள்கிறார்" என்று பெருமையாக கூறினார்.

நேரத்தை கையாளுதல், தொழில் முனைவோருக்கு மிகவும் முக்கியமான திறமை அதனால் அதை கற்றுக் கொண்டால் மற்றதெல்லாம் சுலபமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். "இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருப்பதால் நேர மேலாண்மையில் நான் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கூறுகிறார்.

எதிர்கால திட்டங்கள்:

எதிர்காலத்தில் அவர் நிறைய பாரம்பரிய பொருட்களான பாரம்பரிய கரண்டி ஸ்டாண்ட்(spoon stand), பாரம்பரிய மசாலா பெட்டிகள் இதுபோன்ற பொருட்களை செய்து, மக்களின் வீட்டில் ஒரு பாரம்பரிய உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். "இந்த பாரம்பரிய விஷயங்களை எனது கலையின் மூலம் தருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று கூறி விடைபெறுகிறார்.

Advertisment
Advertisment