Advertisment

இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் - Kannammas content

நம் சமூகத்தில் மனநல ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. ஒரு மனிதரின் நல் வாழ்விற்கு மனநல ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. இதனைப் பற்றி அபிலாஷினி இடம் கேட்ட பொழுது அவர் கூறிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
Devayani
New Update
kannammas content

Images of Abilashni are used from her Instagram Handle(kannammas_content)

அபிலாஷினி என்பவர் எழுத்தின் மீது உள்ள ஆர்வத்தினாலும், பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலும் kannammas content என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். அவர் சமூகத்தில் நடக்கும் பாகுபாடு, மனநல ஆரோக்கியம் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார். SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் மனநல ஆரோக்கியம்(mental health) பற்றி அவர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

"இப்போ நமக்கு உடம்பு சரியில்லை என்றால் ஒரு எக்ஸ்ரே, ஒரு ECG, ஒரு டெஸ்ட் எடுத்து என்ன பிரச்சனை என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும். ஆனால், மனநல ஆரோக்கியம் அப்படி கிடையாது. தன்னம்பிக்கை, சுய அன்பு(self love), நல்ல எண்ணங்கள் இருந்தால் மட்டும்தான் மனநல ஆரோக்கியத்தை நம்மால் பார்த்துக் கொள்ள முடியும். இப்பொழுது இருக்கும் நிறைய பேருக்கு தோல்வி மட்டும் கிடையாது, ஒரு uncomfortable ஆன சூழ்நிலையை சந்திப்பதற்கு கூட நம்பிக்கை கிடையாது. ரிசல்ட் வந்த உடனே முன்பெல்லாம் தற்கொலை செய்து கொண்டார்கள். இப்பொழுது எல்லாம் ரிசல்ட் என்ன வரும் என்ற பயத்திலேயே பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த அளவிற்கு கூட நம்பிக்கை இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம்.

நான் சமீபத்தில் Instagramல் பார்த்த ஒரு பையன் ரிசல்ட் பயத்தால் இறந்து விட்டான். ஆனால், அவன் RX15 வண்டிக்கு முன்பு நின்று போஸ் கொடுத்து இருக்கிறான். உங்க வீட்டுல உனக்கு RX15 வண்டி வாங்கும் அளவிற்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள் என்றால் நான் இன்னொரு முறை பரீட்சை எழுதி பார்க்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு அந்த வீட்டில் உனக்கு சுதந்திரம் இல்லையா? பிடித்ததெல்லாம் உடனே கிடைப்பதனால் தோல்வியை எதிர்கொள்வதற்கு இங்கு நிறைய பேருக்கு தைரியம் கிடையாது. நான் இந்த ஜெனரேஷனை குறை சொல்ல மாட்டேன். அவர்கள் தற்போது சந்திக்கும் மன அழுத்தம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அதிகமானது. முக்கியமாக நான் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தில்(arranged marriage) உள்ள அழுத்தத்தை பற்றி சொல்ல வேண்டும்.

என்னிடம் இரண்டு, மூன்று பெண்கள் வந்து, அக்கா யாருனே தெரியல வீட்டுல பார்த்து இருக்காங்க இவரிடம் பேசிய ரெண்டு நாளிலேயே அவர் sexting மெசேஜஸ் அனுப்புகிறார். எனக்கு comfortableஆக இல்ல அக்கா, எப்படி நான் அவர்கிட்ட பேசுறது? எப்படி நான் அவர் மீது பீலிங்ஸ்(feelings) உருவாக்குவது? எனக்கு அவர்கள் யார் என்று தெரியவில்லை. ஒரு பெண்ணாக நான் இது போன்ற விஷயங்களை கேட்கும் பொழுது மனம் உடைந்து போனேன். ஏனென்றால் அவர்கள் வீட்டில் இதைப் பற்றி பேச அவர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதால்தான் யார் என்று தெரியாத என்னிடம் அவர்கள் உதவி கேட்கிறார்கள். இந்த மாதிரியான மன அழுத்தங்களை நம்மை சுற்றி உள்ளவர்களும், பெற்றோர்களும் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

Advertisment

kannammas content

25 வயதில் ஒரு பெண்ணிற்கும், பையனுக்கும் திருமணம் ஆகவில்லை என்றால் கோவிலுக்கு அழைத்துச் செல்வது, பரிகாரம் செய்வது போன்ற விஷயங்களை செய்கிறார்கள். பெற்றோர்கள் இதை செய்வதால் இரண்டு நாட்கள் அவர்கள் நன்றாக உறங்குவார்கள். ஆனால், அந்தப் பெண்ணுக்கும், பையனுக்கும் அவர்கள் ஒரு விலை போகாத பொருள் என்ற எண்ணம் வரும். இந்த எண்ணங்களை நிச்சயமாக பல பெற்றோர்களால் புரிந்து கொள்ள முடியாது.

25 வயது ஆவதற்கு முன்னால் அந்தப் பெண் வீட்டிற்கு ராணியாக இருப்பாள். சுடுதண்ணீர் கூட போட விட மாட்டேன், நான் அப்படி எல்லாம் வளர்த்தேன் என்று சொல்லி, திடீர்னு அவர்களை மூன்று வேலை சமை, துவைத்த துணியை காய போடு, இவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள், அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள் என்று சொல்கின்றனர். அப்படி நடந்து கொள்ளவில்லை என்றால் சரியாக வளர்க்கவில்லை என்பது தான் அர்த்தம் என்று கூறுகின்றனர். இது போன்ற மாற்றங்களை எப்படி ஒரு 25, 26 வயது உடையவர்களால் எதிர்கொள்ள முடியும். இந்த அழுத்தம் தான் தற்போது இருக்கும் ஜெனரேஷனிடம் நிறைய இருக்கிறது.

Advertisment

மன அழுத்தம் அதிகமாகி என்னிடம் உதவி கேட்டு வரும் நிறைய பேர், எப்படி எனக்கு ஒரு நபரை பிடிக்க வைக்கணும் என்று தெரியவில்லை, எப்படி அவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை, எனது மனதில் அவர்களை பற்றிய ஃபீலிங்ஸ்(feeling) எப்படி உருவாக்குவது? போன்ற கேள்விகளை கேட்கின்றனர். இதற்கெல்லாம் நிச்சயமாக என்னிடமும் பதில் கிடையாது. ஏனென்றால், இது அவர்களின் தவறு கிடையாது. இது அவர்களின் பெற்றோர்களின் தவறு மற்றும் நமது சமூகத்தின் தவறாகும்.

அதனால், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி உங்களுக்காக நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும். முதலில் உங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் வேறு யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். மனநல ஆரோக்கியம்(mental health) மிகவும் முக்கியமானது. ஆனால், அதற்கான முதல் படி சுய அன்பு(self love) தான். முதலில் எனக்கு இது தான் வேண்டும் என்று உறுதியாக இருங்கள். எனக்கு என்ன ஆனாலும் நான் முக்கியம் என்ற முடிவை எடுங்கள். அதன் பிறகு அனைத்தும் நல்லபடியாக நடக்கும்"

அபிலாஷினி மூன்று புத்தகங்களுக்கு co-author ஆக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வாழ்க்கை பயணத்தை பற்றியும், இது போன்ற பல விஷயங்களைப் பற்றியும் Thuglife Thalavi என்ற பாட்காஸ்டில்(podcast) பகிர்ந்து கொண்டார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Advertisment

Click Here: Clear view of feminism and stereotypes in the society - Abilashni Kamakshi | Kannammas_content | Author

Suggested Reading: இந்த நான்கு விஷயங்களும் ஒரு பெண்ணை குணமற்றவளாக மாற்றாது

Advertisment

Suggested Reading: திருமணம் ஆகாத ஒரு பெண்ணை பற்றி சமூகம் என்ன நினைக்கிறது?

Suggested Reading: கண்டிப்பான முறையில் குழந்தை வளர்ப்பது ஆபத்தானது

Suggested Reading: பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

self love mental health kannammas content
Advertisment