சமீபத்தில் வெளியான தமிழ் வெப் சீரிஸ் ஆன வதந்தியில் ஒரு வேலை அதில் வரும் தாயும் மகளும் அவர்களுக்கு இடையே ஒரு நல்ல உறவை கொண்டிருந்தால், அந்த பெண் இறந்திருக்க மாட்டாள் என்று நீங்கள் நினைத்தீர்களா?
ஒரு மகளை வளர்ப்பதற்கு கண்டிப்பாக இருப்பது தான் அவர்களை ஒழுக்கமாக வளர்க்கும் முறை என்று நினைக்கிறார்கள். ஆனால், தாய்க்கும் மகளுக்கும் இடையே உள்ள உறவை அது பாதிக்கிறது. அந்த வெப் சீரிஸில் அப்படி நடந்து கொண்டால் தான் கதையை தொடர முடியும் என்பது தான் உண்மை. ஆனால் நிஜ வாழ்க்கையிலும் பல பெற்றோர்கள் குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக கண்டிப்பாக இருப்பது அவர்களை ஒழுங்காக வளர்க்கும் முறை என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது அவர்களின் உறவை பாதிக்கிறது மட்டும் இன்றி பின் விளைவுகளையும் கொண்டுள்ளது. ஏன் எப்பொழுதும் ஒரு பெண்ணிற்கு சுதந்திரமும் சில விதிமுறைகளுடன் வருகிறது?
எதிர்பாராத விதமாக இந்திய பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மீது அதிக கண்டிப்பாக இருக்கின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளிடம். அவர்களுக்கான எல்லாம் முடிவுகளையும் பெற்றோர்களே எடுக்கின்றனர். சில குடும்பங்களில் அவர்கள் அணிந்திருக்கும் உடை, படிப்பு, வேலை, நண்பர்கள் போன்றவற்றை மகள்களின் விருப்பத்திற்கு விடும் பெற்றோர்களும் திருமணம் என்று வரும்போது அவர்கள் கூறுவதையே கேட்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அன்பாக இருக்கும் பெற்றோர்கள் திடீரென்று அதிகாரத்தை எடுத்துக் கொள்கின்றனர். எது பெற்றோர்களை எப்படி மாற்றுகிறது?
ஏன் பெண்களுக்கு சுதந்திரத்திலும் விதிமுறைகள் போடப்படுகிறது:
ஒரே வீட்டில் இருந்தாலும் ஆண்களும், பெண்களும் வேறு விதமாக நடத்தப்படுகின்றனர். இந்த ஆணாதிக்க சமூகத்தில் மகள்களை ஒரு தனிப்பட்ட பிறவியாக பார்க்காமல், அவர்களை குடும்பத்தின் கவுரவத்தை சுமக்கின்றவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். அதனால், மகள்கள் இந்த சமூக விதிமுறைகளுக்கு அடங்கியிருக்கவில்லை என்றால் அவள் அந்த குடும்ப மானத்தையே சிதைக்கிறாள் என்று கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி பெற்றோர்கள் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களை திறந்தோறும் கேட்பது மூலம் தங்கள் மகள்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இன்னும் அதிக கண்டிப்பாக இருக்கின்றனர். அவர்களை பொறுத்தவரை கண்டிப்பாக இருப்பது தான் பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்று காலம் காலமாக நம்பி வருகின்றனர்.
மகள்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளர்க்கும் பெற்றோர்கள் விமர்சனங்களுக்கு ஆளாகின்றனர். மகள்களுக்கு ஆதரவாக இருக்கும் பெற்றோர்கள், இது போன்ற கடுமையான நிலைகளுக்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் தங்களின் மகளின் சந்தோஷத்திற்கும், சமூகம் என்ன நினைக்கும் என்ற இரு விஷயங்களுக்கு நடுவே தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர்.
எப்படி இருந்தாலும் அளவுக்கு அதிமாக கண்டிப்பாக இருப்பது அதன் பின் விளைவுகளை கொண்டுள்ளது. வதந்தி என்ற வலைத்தொடரிலும் அந்தத் தாய் மிகவும் கண்டிப்பாக இருப்பது அவருக்கும், அவர் மகளுக்கும் இடையே ஒரு வெறுப்பை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த மகள் தந்திரமாக இருக்க தொடங்குகிறாள். கண்டிப்பாக இருப்பது அவர்களுக்குள்ளே இருக்கும் உறவை பாதிக்கிறது. பெற்றோர்கள் எவ்வளவு அதிகமாக மகள்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்த நினைக்கிறார்களோ அவ்வளவு வேகமாக மகள்கள் அவர்களை விட்டு தள்ளி செல்கின்றனர். மகள்கள் அவர்களை ஒரு கொடுமைக்காரர்களாக பார்க்க தொடங்கி விடுகின்றனர். பல குடும்பங்களில் மகள்கள் அவர்களின் பெற்றோரிடம் உறவுகள், மாதவிடாய் பற்றி எல்லாம் வெளிப்படையாக பேச முடிவதில்லை.
கண்டிப்பாக குழந்தை வளர்ப்பதற்கு தீங்கு விளைவிக்கும்:
இதனால் குழந்தைகள் தவறானவர்களிடம் உதவி கேட்பது, அவர்கள் வழிநடத்தும் படி செய்வது மற்றும் பாதுகாப்பில்லாத விஷயங்களில், பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கின்றனர். அப்படி மாட்டிக் கொண்டிருக்கும் போது பெற்றோர்களிடமும் உதவி கேட்க முடிவதில்லை. அப்படி கேட்டால் பெற்றோர்கள் அவர்களை தான் குறை சொல்லுவார்கள் என்ற எண்ணத்தால் அவர்கள் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்ள நினைப்பார்கள் அல்லது தவறான முடிவுகளையும் எடுக்க நினைக்கிறார்கள்.
கண்டிப்பான முறையில் குழந்தை வளர்ப்பது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனசோர்வை ஏற்படுத்தப்படும். பெற்றோர்கள் அவர்களை நம்பாமல் சந்தேகப்படுவது மன அழுத்தத்தை அதிகப்படுத்துகிறது. இது அனைத்தும் சேர்ந்து தவறான ஒருவரிடம் இருந்து வரும் ஆலோசனை அவர்களை மனசோர்வுக்கு ஆணாகிறது. மனசோர்வு என்பது உயிருக்கு ஒரு ஆபத்தாக மாறுகிறது.
இந்த சமூகம் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. அதனால் பெற்றோர்கள் மகள்களை வளர்க்கும் பொழுது எந்த பிரச்சனையாக இருந்தாலும் முதலில் அவர்களிடம் கூறலாம் என்ற நம்பிக்கையை தந்து வளர்க்க வேண்டும். மகள்கள் எப்படி இருந்தாலும் இந்த சமூகம் அவர்களை ஏதேனும் ஒரு குறை கூறிக் கொண்டுதான் இருக்கப் போகிறது. அதனால் பெற்றோர்கள் சமூகத்தின் பேச்சுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் மகளை தைரியமாகவும், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்கவும் வளர்க்க வேண்டும்.
பெற்றோர்கள் முன்போக்காகவும், திறந்த மனதுடன், நட்பாகவும் தங்கள் மகள்களுடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும். இது மகள்களுக்கு நம்பிக்கையை வளர்த்து அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையும் பெற்றோருடன் வெளிப்படையாக தெரிவிக்க ஊக்கவிக்கும். மகள்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தால், தவறான மக்களிடம் மற்றும் பிரச்சினைகளில் அவர்கள் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அவர்களுக்கு உங்களிடமிருந்து ஆறுதல் கிடைக்கும்போது வேறு யாரிடமும் அதை எதிர்பார்க்க மாட்டார்கள்.
Suggested Reading: பல தடைகளைத் தாண்டி சாதித்து வருகிறார் Muthamizh
Suggested Reading: திலகவதி - முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞரின் வாழ்க்கை பயணம்
Suggested Reading: சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத கைவினைப் பொருட்களை விற்று வரும் Srimathi
Suggested Reading: மக்கள் விரும்பும் கன்டென்டுகளை பதிவிடும் ஸ்ரீநிதி(style with Srinidhi)