/stp-tamil/media/media_files/zioYCFNJH6bNCSLIao6N.png)
Image of Srimathi
ஈரோட்டில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த ஸ்ரீமதி சிறு வயதிலிருந்து பாரதியாரின் கவிதைகள் மீது ஈர்ப்பு கொண்டு இருந்தார். மேலும் விவசாயம் செய்யும் குடும்பம் என்பதால் நிறைய கஷ்டங்களை அனுபவித்துள்ளனர். பல கஷ்டங்களை தாண்டி பெற்றோர்கள் இவரை படிக்க வைத்தனர். இவர் ME படுத்துக் கொண்டிருந்த பொழுது முதல் ஆண்டில் இவருக்கு திருமணம் ஆனது. இரண்டாம் ஆண்டு முடித்த பிறகு இவருக்கு குழந்தையும் பிறந்தது.
குழந்தை பிறந்த பிறகு முதுகு வலி ஏற்பட்டதால், 10 நிமிடத்திற்கு மேல் நிற்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. 23 வயதை அடைந்த ஒரு பெண்ணிற்கு இப்படி ஒரு நிலைமை வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் பல மருத்துவர்களை சந்தித்து இதை சரி செய்து கொள்ள முயற்சிகள் எடுத்தனர். பிறகு ஒரு மருத்துவர் தந்த மருந்துகளாலும், உடற்பயிற்சியினாலும் இந்த பிரச்சனை ஓரளவுக்கு சரியானது.
குழந்தைக்கு இரண்டு வயது ஆனவுடன் IT துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒன்றரை வருடம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே களிமண் மீது உள்ள ஆர்வத்தினால் ஒரு சிறு தொழிலையும் தொடங்கினார். கையால் செய்யப்பட்ட ஒரு பொருள் முழுமையாக செய்து முடித்த பிறகு வரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இது அவருக்கு ஒரு நிறைவை தந்தது. 2014ல் வெறும் ஒரு ஸ்மார்ட்போனை மட்டும் வைத்து அவர் செய்யும் பொருட்களை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு வந்தார்.
பேஸ்புக்கில் பதிவிட்ட பிறகு நிறைய ஆர்டர்கள் வரத் தொடங்கியது. மூன்று வருடத்தில் 13,000 பாலோவர்ஸ் பெற்றார். வெளிநாடுகளில் இருந்தும் நிறைய பெரிய ஆர்டர்கள் இவருக்கு வந்தது. இவர் செய்யும் பொருட்களின் தரத்தாலும், வாடிக்கையாளர்களுக்கு நேர்மையாக இருந்ததாலும் நிறைய மக்களிடமிருந்து இவரின் தொழிலுக்கு வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு நிறைய வாலண்டரி குரூப்பில் சேர்ந்து பிளாஸ்டிக்கின் தீமையை பற்றி தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். அதை இவரும் வாழ்க்கையில் செயல்முறைப்படுத்தி வருகிறார். இவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த பொழுது ஒரு வருடத்திற்கு மேல் பொருட்கள் செய்வதை நிறுத்தி இருந்தார். அப்பொழுது நிறைய பயணங்கள் மேற்கொண்டார். பயணங்களின் போது நிறைய இடங்களில் கைவினைப் பொருட்களை பார்த்து அதில் இவருக்கு முன்பைவிட நிறைய ஈர்ப்பு ஏற்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களால் ஆன கைவினைப் பொருட்களை மட்டும் வைத்து ஒரு கடை திறக்க வேண்டும் என்று நினைத்தார். கைவினைப் பொருட்கள் கடை என்பதால் அது சாதாரணமாக இல்லாமல் அதையும் மக்களை ஈர்க்கும் வகையில் அழகாக வடிவமைக்க நினைத்தார்.
ஒரு பெண் ஒரு தொழில் ஆரம்பித்து, அதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் பொழுது நிறைய விமர்சனங்களை பெற நேரிடும். அப்படித்தான் பெண்ணாக இருந்து தொழில் தொடங்குவதற்கு இவருக்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. பெண்களை இந்த சமூகம் வீட்டிலேயே வீட்டு வேலையை பார்த்துக் கொண்டு முடங்கி கிடக்க சொல்லுகிறது. ஆனால், ஸ்ரீமதி நமக்கு பிடித்த விஷயத்தை நாம் செய்ய ஆரம்பித்தால் இந்த சமூகம் நமக்காக மாறிக்கொள்ளும் என்று கூறுகிறார்.
நிறைய தடைகளை தாண்டி தான் நாம் முன்னேற முடியும். அப்படி ஊரடங்கு காலத்தில் OMRஇல் இருக்கும் இவரின் SMRIS கடையை மூடலாம் என்றும் யோசித்தார். ஆனால், கணவரின் அறிவுரையின்படி உடனடியாக கடையை மூடாமல் கிலோசிங் சேல்(closing sale) என்ற ஒன்றை அறிவித்து பொருட்கள் எல்லாம் விற்பனையான பிறகு கடையை மூடி விடலாம் என்று யோசித்தார். இவர் இப்படி ஒரு விஷயத்தை கூறிய பிறகு இவரின் ஆதரவாளர்கள் பொருட்களை வாங்கி இவருக்கு ஆதரவளித்துள்ளனர். அதனால் ஒரே வாரத்திற்குள் கிலோசிங் சேலை கிளியரன்ஸ் சேலாக(clearance sale) மாற்றி பொருட்களை விற்க தொடங்கினார்.
மும்பை விட தற்போது நிறைய பொருட்கள் விற்பனையாகிறது என்றும் அவர் ஜோஷ் டாக்கில் கூறியிருக்கிறார். பல இடங்களில் இருந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களையும், அந்தந்த கலையில் சிறந்த விளங்கும் கலைஞர்களிடமிருந்து பொருட்களையும் வாங்கி அவரின் கடையில் விற்பனை செய்து வருகிறார்.
நாம் ஒரு விஷயத்தை தொடங்கும் பொழுது நாம் அதை பார்ப்பது போல மற்றவர்கள் அதை பார்க்க மாட்டார்கள். அதனால் ஒரு விஷயத்தை நாம் செய்ய வேண்டும் எனில் முதலில் நம்மை நாம் ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் அதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறோமோ அதை பார்த்து தான் மற்றவர்கள் ஆதரவளிக்க தொடங்குவார்கள் என்று அவர் ஆலோசனை கூறுகிறார்.