Advertisment

Nykaa நிறுவனத்தின் நிறுவனர் மாணவர்களுக்கு கூறும் ஆலோசனை

Nykaa நிறுவனத்தின் நிறுவனர் Falguni Nayar ஒரு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது மாணவர்களுக்கு கூறிய அறிவுரை பற்றியும், Nykaa உருவாக்கப்பட்ட கதை பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
falguni nayar nykaa founder

Image of Falguni Nayar

Nykaa செயலியை பற்றி நாம் அறிந்திருப்போம். ஏன் நம்மில் பல பேர் அதன் வாடிக்கையாளராக கூட இருப்போம். ஆனால், என்றாவது Nykaa நிறுவனத்தை தொடங்கியவர் பற்றி யோசித்து இருப்போமா? இன்று நாம் Nykaa நிறுவனத்தின் அதிபரான Falguni Nayar ஒரு பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு கூறிய ஆலோசனைகளை பற்றியும், அவரைப் பற்றியும் பார்ப்போம். 

Advertisment

ஃபேஷன் மற்றும் பியூட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாயர் இந்திய மேலாண்மை கழகத்தின் 57வது பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் மாணவர்கள் தங்களின் வேலைக்கு செல்ல தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் ரிஸ்க்களை(risk) எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

நாயர் விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது பட்டம் பெற்ற மாணவர்களிடம் ரிஸ்க்களை(risk) ஏற்றுக்கொண்டு தங்கள் கம்போர்ட் சோனல்(comfort zone) இருந்து வெளிவர கூறினார்.

நாயரின் தொழில் அறிவுரை:
"உங்கள் தொழிலின் ஆரம்ப கட்டத்தில் சரியான ரிஸ்குகளை(risk) தைரியமாக எடுங்கள். உங்களுக்கு நீங்களே பந்தயத்தை வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதை விரும்பவில்லை என்பதை சோதித்துப் பாருங்கள். உங்கள் கம்போர்ட் சோனில்(comfort zone) இருந்து உங்களை வெளியே வர வைக்கும் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். புதிய ஆர்வங்களை கண்டுபிடிங்கள். நீங்கள் சிறந்து விளங்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்று நாயர் அறிவுறுத்துகிறார்.

Advertisment

மேலும் நாயர் கூறுகிறார்," நினைவில் கொள்ளுங்கள், யார் என்ன சொன்னாலும் மீண்டும் முதலில் இருந்து ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு தயங்காதீர்கள். ஒரு விஷயத்தை தொடங்குவதற்கு லேட்டாகி(late) விட்டது என்று நினைக்காதீர்கள். எப்பொழுதும் முடிவுகள் எடுப்பது எளிதான ஒன்று அல்ல, பெரும்பாலும் நேரடியான பதில்கள் இருக்காது. உங்கள் உள்ளத்தையும், தைரியத்தையும் நம்புங்கள் அது உங்களை வழிநடத்தும்"

Nykaa

IIM அகமதாபாத்தின் முன்னாள் மாணவரான நாயர் தனது 50 வயதை தொட சில மாதங்களுக்கு முன் Nykaa என்ற நிறுவனத்தை 2012 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். "ஒரு ஊழியராக இருந்து ஒரு தொழிலதிபராக தொழில் தொடங்க நினைத்த போது அந்த யோசனையின் மேல் யாரும் ஆர்வம் காட்டவில்லை" என்று அவர் கூறுகிறார்.

Advertisment

Nykaa என்ற பெயரே உங்கள் யோசனை சரி என்று நினையுங்கள் என்பதை குறிக்கிறது. இது சமஸ்கிருத வார்த்தையான 'நாயகா' என்பதிலிருந்து வந்தது மற்றும் ஒருவர் தங்களின் கனவுகளை தொடர வேண்டும் என்றும், அவர்களின் வாழ்க்கையில் அதன் மூலம் பிரகாசிக்க வேண்டும் என்ற அர்த்தத்தை கொண்டது.

அவர் முதலீட்டு வங்கியாளராகப் பணிபுரிந்தார், மேலும் AF Ferguson & Co நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் கோடக் மஹிந்திராவின் நிறுவனபங்குப் பிரிவான கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அவர்களுடன் 19 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அவர் தனது சொந்த அழகு-தொழில்நுட்ப முயற்சியான Nykaaவை தொடங்க நிர்வாக இயக்குநராக நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

நாயர் இப்போது இந்தியாவின் பணக்கார பெண் பில்லியனர் ஆவார். Nykaaவின் பாதி பங்குகளை அவர் வைத்திருக்கிறார், அது இப்போது $6.5 பில்லியன் மதிப்புடையது.  அவரது முயற்சியானது, அதன் இணையதளம் மூலம் கிட்டத்தட்ட 4,000 அழகு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் ஃபேஷன் பிராண்ட்களை வழங்கிய முதல் பெண் தலைமையிலான நிறுவனம் ஆகும். மேலும் இந்தியா முழுவதும் Nykaaவிற்கு 80  கடைகள் உள்ளது.

Advertisment

புதிதாக ஒன்றை தொடங்குவதற்கும், தொழில் ஆரம்பிப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்று Nykaaவின் நிறுவனர் நாயர் இந்த உலகத்திற்கு காட்டியுள்ளார். பெண்களுக்கு சமூகத்தில் பல தடைகள் இருந்து வரும் நேரத்தில் இது போன்ற பெண்களின் சாதனைகள் மற்ற பெண்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகிறது.

 

Suggested Reading: யார் இந்த Byju's இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத்?⁠⁠⁠⁠⁠⁠⁠

Advertisment

Suggested Reading: "கடுமையாக உழையுங்கள், உங்கள் வெற்றி பேசட்டும்": ரக்ஷிதா

Suggested Reading: "தொழில் தொடங்க நேர மேலாண்மை அவசியமானது": சௌமியா

Suggested Reading: சுதா மூர்த்தி(Sudha Murthy)கூறிய ஊக்குவிக்கும் வாக்கியங்கள்

women entrepreneur Nykaa nykaa founder Falguni Nayar
Advertisment