/stp-tamil/media/media_files/ATlD7sR6CmYh6FKJqB7p.jpg)
ஜூன் 2021 ஆம் ஆண்டு சௌமியா "Dessertelier" என்ற பேக்கிங் தொழிலை தொடங்கினார். அவருக்கு பேக்கிங்கில் ஆர்வமும், தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. எனவே, இதை இரண்டையும் சேர்த்து "Dessertelier" என்ற பேக்கிங் தொழிலை தொடங்கியுள்ளார்.
"நாங்கள் மக்கள் கேட்பது போல தனித்துவமான பொருட்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கி தருவதோடு, நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறும் கேக்குகளை செய்து தருகிறோம். இதுவே எங்களின் தனித்துவம்" என்று பெருமையாக கூறுகிறார்.
சௌமியா ஒரு முழு நேர கல்லூரி மாணவி என்றதால் படிப்பிலும், தொழிலிலும் நேரத்தை சரியாக செலவிட வேண்டும். அவர் நேர மேலாண்மையும், பல பணிகளை கையாளக்கூடிய திறமையும் தொழிலில் வெற்றி அடைவதற்கு முக்கிய தேவை என கூறுகிறார். அவர் தனது குடும்பத்தினர் அவருக்கு உதவியதாகவும், ஆதரவு அளித்ததாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
"நான் பேக்கிங் ஆர்டர்களை காலை அல்லது மாலை நேரத்தில் திட்டமிடுவேன். அதற்கிடையில் இருக்கும் நேரத்தை முழுமையாக எனது படிப்பிற்காக செலவிடுவேன்" என்று கூறுகிறார்.
சில விஷயங்கள் அவர் செய்து கொண்டிருக்கும் வேலை சரியான ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்துகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகச் செயல்படும் அகமதாபாத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அவர் பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் அனைத்தும் தொண்டு நிறுவனத்திற்குச் சென்றது. "வெறும் சுயநலத்தை விட, பெரிய ஒன்றின் ஒரு பகுதியாக இருப்பது போன்ற உணர்வு உற்சாகமாக இருந்தது", என்று அவர் கூறினார்.
அவரது பேக்கிங் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள ஒரு பேக்கிங் படிப்பில் சேர்ந்தார். அதிலிருந்து சர்வதேச சான்றிதழையும் பெற்றுள்ளார். "Dessertelier மூலம் நான் சம்பாதித்த பணத்தையும், அதில் இருந்து வந்த லாபத்தையும் வைத்து தான் நான் இதை படித்தேன்" என்று அவர் கூறுகிறார்
மேலும் அவரின் பேக்கிங் செயல்முறை பற்றி பேசும்போது அதை வெவ்வேறு திறமைகளை கொண்ட நபர்கள் செய்து வருகின்றனர் என்பதை தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு கேக் செய்வதற்கும் பல செயல்முறைகள் இருக்கும். அதை நாங்கள் பிரித்துக் கொள்வது மூலம் வேலை சுலபமாக முடியும்"
டிஜிட்டலின் பயன்பாடு:
அதனுடன் இந்த டிஜிட்டல் உலகம் இளம்பெண்களுக்குள் உள்ள தொழில் முனைவுகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது என்றும் கூறுகிறார். "பணம் வசூலிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் டிஜிட்டல் அதை எளிமையாகிவிட்டது. நான் கூகுள் பே(Google Pay) பயன்படுத்துகிறேன். அது மிகவும் வசதியாக இருக்கிறது" என்று விளக்குகிறார்.
எதிர்கால திட்டங்கள்:
அவர் தொழிலின் எதிர்கால திட்டத்தை பற்றி பேசும்போது விற்பனையை அதிகரிப்பது தற்போது முதன்மையான கடமையாக இருந்தாலும், வரும் காலங்களில் Dessertelier என்ற பெயரில் நிறைய கடைகள் திறக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கான அறிவுரை:
ஒரு தொழில் முனைவராக அவருக்கு அவரின் தொழிலில் புதிதான விஷயங்களை கண்டுபிடிக்க பிடித்துள்ளதாக கூறுகிறார். மேலும் தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு அவர்களின் சிந்தனையில் மட்டும் கவனம் செலுத்தாமல், செயல்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் முடிவைவிட நாம் போடும் திட்டங்களும், அதற்காக எடுக்கும் முயற்சிகளும் முக்கியமானது என்று புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சௌமியா அறிவுரை கூறுகிறார்.