உங்களுக்கு திறமையும், ஆற்றலும் இருக்கிறது என்றால் உங்கள் இலக்குகளை அடைவதில் இருந்து யாராலும் உங்களை தடுக்க முடியாது. இதுதான் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரு பெண்மணிகளையும் தொழில் முனைவராக மாற்றியுள்ளது. சமூகத்தில் வயதை வைத்து இருக்கும் பாகுபாடுகளை உடைத்து தற்போது இருவரும் தொழில் முனைவராக மாறி உள்ளனர்.
உங்கள் கனவுகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்வதற்கு வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது. வயது உங்களை கட்டுப்படுத்தி அடைத்து வைத்திருக்கவும் கூடாது. எந்த ஒரு முயற்சியும், திறனும் இந்த சமூகத்தில் உள்ள பாகுபாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் அடங்கி வீணாக்கி விடக்கூடாது. இந்த இரண்டு சென்னையை சேர்ந்த பெண்மணிகள் தொழில் முனைவராகி, வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் பேரப்பிள்ளைகளை பெற்ற பிறகும் இந்த சமூகம் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு வீட்டில் இல்லாமல் தங்களின் இலக்கை நோக்கி முன்னேறி உள்ளனர்.
லட்சுமி என்பவர் தனது 89 வயதில் சென்னையில் வக்க்ஷனா(Vaksana) என்ற பெயரில் ஒரு பார்ம் ஸ்டே(farm stay) தொடங்கியுள்ளார். இதை 71 வயதை உடைய கஸ்தூரி சிவராமன் என்ற அவருடைய மகளுடன் சேர்ந்து தொடங்கியுள்ளார்.
இந்தத் தொழிலை தொடங்குவது சுலபமான காரியம் அல்ல. லட்சுமிக்கு சொந்தமாக ஒரு தொழிலை தொடங்க வேண்டும் என்ற ஆசை எப்பொழுதுமே இருந்தது. ஆனால் கண்டிப்பான குடும்பத்தில் வாழ்ந்ததால் அவரால் அதை செய்ய முடியவில்லை. இருப்பினும் அவருக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து மசாலாக்கள், பொடிகள் போன்ற பொருட்களை விற்பது மூலம் வீட்டிலிருந்தே ஒரு சிறிய தொழிலை தொடங்கியுள்ளார். அந்த பொருட்களை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால், வயதின் காரணமாக அவரால் அதை தொடர முடியவில்லை.
ஆனாலும், லட்சுமி தனது கனவுகளை அங்கேயே முடிக்கவில்லை. பிறகு மொபைல் பிசினஸ் செய்யலாம் என்று யோசித்தபோது தான் ஃபார்ம் ஸ்டே(farm stay) என்ற யோசனை அவருக்கு வந்தது. பிறகு அந்த யோசனை உடன் அவரது மகள் கஸ்தூரி இணைந்து கொண்டார். இருவரும் சேர்ந்து இதை தொடங்கியுள்ளனர். இந்த தொழிலுக்கு இருவருமே புதிது என்பதால் கஸ்தூரியின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இவர்களுக்கு மார்க்கெட்டிங் மற்றும் சமூக வலைத்தளங்களை பற்றி கற்றுக் கொடுத்திருக்கின்றனர். இவர்களின் தனித்துவம் என்னவென்றால் இவர்களின் பாரம்பரிய சமையல்கல்தான். மக்களும் இவர்களின் பாரம்பரிய சமையல்களை விரும்ப தொடங்கியுள்ளனர்
தற்போது இந்த தாய்-மகள் காம்போ 90, 72 வயதை அடைந்ததால் மூன்று வேலையும் சமைப்பதற்கு கடினமாக இருக்கிறது. இருப்பினும் கஸ்தூரி நிறைய பொறுப்புகளை தனது தாயிடம் இருந்து எடுத்துக் கொண்டார். அவரது மகளுடன் வேலை செய்வதைப் பற்றி கேட்டபொழுது "அவள் என் பக்கம் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு மூன்று பிள்ளைகள். அதில் இருவர் தற்போது உயிருடன் இல்லை. இப்பொழுது கஸ்தூரி மட்டும்தான் இருக்கிறாள். என்னால் அவளுடன் நிறைய நேரம் செலவழிக்க முடிகிறது, அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது" என்று கூறினார்.
இந்த ஊக்கவிக்கும் இல்லத்தரசிகள் தொழில் முனைவராக மாறியது அவர்களை பணரீதியாக சுதந்திரம் அடைய செய்வது மட்டுமில்லாமல் அவர்களின் பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் அங்கு தங்க வரும் மக்களுக்கும் கற்று தரவும் உதவியாக இருக்கிறது. அங்கு தங்க வருபவர்கள் இந்த பெண்களின் கடின உழைப்பையும், உறுதியையும் ஒரு ஊக்கமாக கருதுகின்றனர். இந்த farm stay அவர்களுக்கு வீடு போன்ற அனுபவத்தை தருகிறது. மேலும் இவர்கள் வாழ்க்கை பற்றியும் விருந்தினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
Suggested Reading: ஊர்மிளா தனது உணவுத் தொழிலை 77 வயதில் ஆரம்பித்துள்ளார்
Suggested Reading: கோலங்களை தொழிலாக மாற்றி இரண்டு லட்சம் வருவாய் பெறுகிறார் தீபிகா