ஊர்மிளா அஸ்வர் தனது 77 வயதில் ஒரு உணவு தொழிலை அவரது பேரனுடன் சேர்ந்து ஆரம்பித்தார். இந்தத் தொழிலை ஆரம்பிப்பதற்கு அவருக்கு எது ஊக்கமளித்தது? அவர் குடும்பத்திற்க்கு பணரீதியாக உதவி செய்யவும், உணவின் மேல் உள்ள காதலை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவும் நினைத்தார்.
வாழ்க்கை துயரங்கள்:
அவர் வாழ்க்கையில் பல துயரங்களை எதிர்கொண்டுள்ளார். அவரின் மகள் இரண்டு வயது இருக்கும்பொழுது ஒரு கட்டிடத்தின் மேலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டார். சில ஆண்டுகளுக்குப் முன் அவரின் இரண்டு மகன்களும் இறந்துவிட்டனர். ஒருவர் இதய நோயால் இறந்து விட்டார் மற்றொருவர் மூளை கட்டியினால் இறந்துவிட்டார். ஆனால் இந்த நிகழ்வுகள் ஊர்மிளாவின் நம்பிக்கையை இழக்க செய்யவில்லை.
"மரணம் என்பதுதான் பெரிய உண்மை. அதற்காக அழுது நேரத்தை வீணாக்குவது ஏன்? நான் எப்பொழுதும் என்னிடம் என்ன இருக்கிறது மற்றும் என்னால் என்ன செய்ய முடியும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறேன்" என்று கூறினார்.
2019 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பெரிய விஷயம் நடந்தது. அவரது பேரன் ஹர்ஷ் ஒரு விபத்தில் அவருடைய கீழ் உதட்டை இழந்துவிட்டான். "இந்த விபத்து அவனின் தைரியத்தை பெரிய அளவில் பாதித்தது. அவன் வீட்டை விட்டு வெளியேற தயங்கினான். ஊரடங்கு காலகட்டத்தில் அவன் கடையும் மூடப்பட்டது. நாங்கள் பணரீதியாக கஷ்டப்பட்டோம். ஆனால் எனக்கு அவன் மீது நம்பிக்கை இருந்தது. இந்த துன்பங்கள் எல்லாம் தற்காலிகமானது என்பதை நான் நம்பினேன்" என்று கூறினார்.
தொழில் முனைவர்:
இந்த துன்பங்கள் எல்லாம் அவனை பாதிக்காதது போல் ஊர்மிளா பார்த்துக் கொண்டார். அவர் எப்பொழுதும் அவன் பக்கத்தில் ஒரு நல்ல பாட்டியாக இருப்பதை உறுதி செய்தார்.
"நான் சிறுவயதில் இருந்து மிக அருமையாக சமைப்பேன். அதனால் நாங்கள் குஜராத் சிற்றுண்டி தொழிலை தொடங்கலாம் என முடிவு செய்தோம். "Gujju Ben Na Nastha" என்ற பெயரில் நாங்கள் எங்களை திரும்பி உருவாக்க நினைத்தோம். கிட்டத்தட்ட 20 முதல் 25 நாளுக்குள் 500 கிலோ ஊறுகாயை நாங்கள் தயார் செய்தோம். எங்களை வியக்க வைக்கும் படி இது பயங்கர வேகமாக சென்றது. எங்கள் பக்கத்தில் இருக்கும் மக்கள் அதை விரும்பி வாங்க தொடங்கினர். பிறகு நாங்கள் டெப்லா, டோக்ளா, போலி பரலி மற்றும் மற்ற குஜராத்தி சிற்றுண்டிகளை விற்கத் தொடங்கினோம். பிறகு வேலைக்காக ஆட்களை எடுத்து எங்கள் தொழிலை விரிவடைய செய்தோம்."
"ஒரு வருடத்திற்குள் எங்கள் வருவாய் 45 லட்சத்தை தொட்டது. ஆனால் பணத்தைவிட மக்கள் ஆரோக்கியமான உணவை உண்கிறார்கள் என்பதே எனக்கு பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. கடவுளின் கருணையினால் நான் இப்பொழுது TedXயில் பேசியுள்ளேன். பல நகரங்களுக்கு சென்று எனது கதையை கூறி, வாழ்க்கையில் ஒருபோதும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்க அனைவரையும் ஊக்குவித்து வருகிறேன்"
YouTube சேனல்:
அவர் தனது சொந்த YouTube சேனலை சமீபத்தில் ஆரம்பித்து அதில் ஆரோக்கியமான உணவு செய்வதை பற்றி பதிவிடுகிறார். தினமும் மதிய நேரங்களை இந்த மாதிரியான வீடியோக்களை இருப்பதற்காக அவர் ஒதுக்குகிறார்.
எதிர்காலத் திட்டங்கள்:
அவரும் அவர் பேரன் ஹரிஷும் Gujju Ben Na Nasthaவை சர்வதேச விமான நிலையங்கள் வரை எடுத்துச் சென்றுள்ளனர். "எங்களுக்கு அமெரிக்கா, சவுத் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றனர். ஆனால் சில சமயங்களில் எங்களால் அதை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் என் பாட்டியின் உழைப்பு வீணாகாமல் இருக்க எங்கள் தொழிலை விரிவுபடுத்த முயற்சிகள் எடுத்து வருகிறோம். எங்கள் ஊறுகாய் மற்றும் காகராசை அமேசான்(Amazon), பிளிப்கார்ட்(Flipkart) மற்றும் பிற இடங்களில் விற்றால் நிறைய மக்களை அதை சென்றடையும் என்று அதற்கான திட்டத்தையும் தீட்டி வருகிறோம்" என்று ஹரிஷ் கூறி விடை பெற்றுக் கொண்டார்.
Suggested Reading: 60 வயதில் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சிந்து
Suggested Reading: 4500 முதலீட்டில் ஆரம்பித்து, தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை மாத லாபம்
Suggested Reading: கோலங்களை தொழிலாக மாற்றி இரண்டு லட்சம் வருவாய் பெறுகிறார் தீபிகா