60 வயதில் தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சிந்து

தனது மகள்களுடன் 60 வயதில் தொழில் தொடங்கி வயது வெறும் எண் தான் என்பதை சிந்து நிருபித்துள்ளார். அவர் தொழில் ஆரம்பித்ததிலிருந்து, அதனை எப்படி விரிவு படுத்துகிறார் என்பது வரை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Little Big

குர்கானில் வாழ்ந்து வரும் அர்ச்சனா சிந்து தனது 60 வயதில் அவர் மகளுடன் சேர்ந்து வீட்டு அலங்கார தொழிலை தொடங்கியுள்ளார். இந்த புதிய முயற்சி தனது இரண்டாவது இன்னிங்ஸ் என்றும் அவரது மகள்கள் அவளுக்கு வாழ்க்கை நோக்கத்தை தந்துள்ளனர் என்றும் கூறுகிறார்.

Advertisment

சிந்து தன்னை இந்த தொழிலில் மட்டும் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளாமல் அவர் ஒரு இன்ப்ளுவென்சராகவும்(influencer) திகழ்கிறார். இது மட்டும் இன்றி வீட்டு அலங்காரம் செய்து, அதனை மாற்றியமைக்க நினைப்பவர்கள் சிந்துவின் ஆலோசனையை எடுத்துக் கொள்கின்றனர்.
சிந்து தனது மகள்களுடன் சேர்ந்து Little Big என்ற நிறுவனத்தை 2016ம் ஆண்டு ஆரம்பித்து படிப்படியாக அதை உயர்த்தி வருகின்றார். தனது 67 வது வயதில் இப்படி ஒரு அற்புதமான முடிவை எடுத்து வயது வெறும் எண் தான் என்பதை நிரூபித்துள்ளார். தற்போது அவரின் மகள்கள் தொழிலை விரிவு படுத்தி வருகின்றனர். சிந்து இந்த தொழிலுக்கு முதுகெலும்பாக செயல்பட்டு வருகிறார்.

Shethepeopleயிடம் அளித்த நேர்காணலில் அவர் கூறியதை காண்போம்.

உங்கள் தொழில் முனைவர் பயணம் எப்படி இருக்கிறது?

எங்களின் இந்த Little Big என்ற முயற்சியை வலுப்படுத்த நான் ஆதரவளித்தேன். என் மகள்கள் ஏதாவது புதிதாக தொடங்க வேண்டும் என்று நினைத்தார்கள், அதற்கு நான் ஊக்கம் அளித்தேன். எனது மூத்த மகள் IBMயில் வேலை செய்தார், இரண்டாவது மகள் செய்தி தொகுப்பாளராக இருந்தாள். 2016ல் ஒரு மாலையில் நாங்கள் ஏதாவது ஆரம்பிக்கலாம் என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தோம். அப்பொழுது தான் வீட்டை அலங்காரம் செய்வதை ஒரு முயற்சியாக எடுக்கலாம் என முடிவு செய்தோம். 

பிறகு அதற்கு Little Big என பெயர் வைத்தோம். Little எனது இளைய மகள், Big எனது மூத்த மகள் என்ற அர்த்தத்தில் இந்த பெயரை வைத்தோம். சில மாதங்களுக்கு முன்பு நான் Big ஆகவும், மூத்த மகள் Little ஆகிவிட்டோம். ஏனெனில் இளைய மகள் அவளின் தனிப்பட்ட வேலையை பின்தொடர சென்று விட்டாள்.

இந்த தொழிலில் உங்கள் பங்கு?

Advertisment

எனது உண்மையான பயணம் என் இளைய மகள் இதிலிருந்து விலகிய போது தொடங்கியது. அப்பொழுதுதான் நான் முழு நேரமாக இதில் ஈடுபட்டேன். தாய் மகளாக இருப்பது எங்களுக்கு பல வகையில் உதவியது. எங்களால் இருவரின் யோசனையையும் புரிந்து கொள்ள முடிந்தது. எனது மகள் ஒழுங்கமைத்தல், Excel உருவாக்குதல் மற்றும் துணிகளை தேர்ந்தெடுப்பதில் நிபுணர். நான் செயல்படுத்துதல்,  மக்களை சந்தித்து வாடிக்கையாளரின் விருப்பங்களை புரிந்து கொள்வது, அதற்கு ஏற்றது போல எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதில் நிறைய ஆர்வம் கொண்டிருந்தேன்.

எனக்கு 20 வேலையை கொடுத்து ஒரு அறையை கொடுத்து விட்டால் நான் அனைத்தையும் செய்து முடித்து விடுவேன். எனவே, நாங்கள் இருவரும் எங்களின் வலிமையின் மீது கவனம் செலுத்துகிறோம். மற்றது எல்லாம் தனிப்பட்ட முறையில் கவனிக்கப்படுகிறது.

உங்களின் வயது வித்தியாசம் ஏதாவது தடையை ஏற்படுத்தி இருக்கிறதா?

இல்லை. அதற்கு மாறாக மக்கள் நரை முடியை மதிக்கின்றனர். மக்களுக்கு எனது விருப்பங்கள் மீது சிறிது தயக்கம் இருந்தது. ஆனால், நான் இந்த காலத்திற்கு ஏற்றது போல இருப்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். எனது யோசனையையும் அவர்கள் வரவேற்க தொடங்கினர்.

Advertisment

என்ன மாதிரியான வேலைகள் செய்து வருகிறீர்கள், தொழிலை எப்படி விரிவு படுத்துகிறீர்கள்?

முதலில் நாங்கள் ஸ்டைலிங் மட்டும் தான் பார்த்துக் கொள்வோம். நாங்கள் வீட்டுக்கு தேவையான நாற்காலி, ஓவியம், மெத்தைகள் இதை அனைத்தையும் தேர்வு செய்ய உதவி செய்து, அதனை எப்படி அடுக்கி அலங்கரிப்பது என்பதை கூறினோம். பிறகு வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நாங்களே முழுமையாக அனைத்தையும் செய்ய தொடங்கிவிட்டோம். உதாரணத்திற்கு சுவர் நிறத்தை மாற்றுவது, அறையை மாற்றியமைப்பது, சொந்தமாக நாற்காலி செய்வது இதை அனைத்துமே நாங்களே செய்ய ஆரம்பித்து விட்டோம்.

நாங்கள் இருவர் தொடங்கிய தொழில் தற்போது தச்சர்கள், வடிவமைப்பாளர்கள், சமூக ஊடக கையாள்பவர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். நாங்கள் சொந்தமாக ஒர்க் ஷாப்பும் ஆரம்பித்துள்ளோம்.

எப்படி ட்ரெண்டிங் ஆன விஷயத்தை தெரிந்து கொள்கிறீர்கள்?

Advertisment

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் தற்போது இருக்கும் காலத்திற்கு ஏற்ப நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இதழ்கள் படிப்பது, பிரின்ட்ரெஸ்ட் பார்ப்பது, இன்ஸ்டாகிராம் பார்ப்பது மற்றும் கூகுளின் மூலம் புதிதாக வந்துள்ளதை தெரிந்து கொள்வேன்.

ஒரே மாதிரியான தேடல்கள் எப்போதும் சரிப்பட்டு வராது. எனவே பல வகையில் தேடி விஷயங்களை சேகரித்துக் கொள்ள வேண்டும். குடும்பங்களின் கட்டமைப்புகள் மாறி வருகின்றனர். தற்போது குடும்பங்கள் ஒரு சுத்தமான அழகான வீட்டை விரும்புகின்றனர். பெண்களை விட ஆண்கள் தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி இந்த தொழிலில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் கண்காணித்து வருகிறோம்.

Suggested Reading: Amma samayal மீனாட்சியின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: MNC வேலையை விட்டு Thinai Organics ஆரம்பிந்த Saranya

Suggested Reading: Thaai Herbals தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் Archana

Advertisment

Suggested Reading: முடி உதிர்வதை தடுக்க சமையலறையில் இருக்கும் ஐந்து பொருட்கள்

women entrepreneur business interview