Advertisment

Thaai Herbals என்ற தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் Archana

ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதை எல்லாம் எப்படி செய்ய முடியும் என்று கேட்டவர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஒரு தொழில் தொடங்கி நடத்தி வருகிறார் அர்ச்சனா கார்த்திகேயன். அவரின் இந்த பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
thai herbals

Image of Archana

வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும் ஒரு சிலர் நம்மை தாழ்த்தி பேசுவதற்காகவும், குறை சொல்லுவதற்காகவுமே இருப்பார்கள். ஒன்று நாம் அவர்கள் பேசுவதை மனதளவில் எடுத்து கொள்ள கூடாது அல்லது அவர்கள் பேசியதை நாம் முன்னேறுவதற்கான ஒரு ஊக்கமாக பார்த்து சாதித்து காட்ட வேண்டும். இப்படி தன்னால் முடியாது என்று கூறியவர்களின் எண்ணத்தை தரைமட்டமாக்கும் வகையில் அர்ச்சனா கார்த்திகேயன் என்பவர் Thai Herbals என்ற ஒரு தொழிலை ஆரம்பித்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகிறார்.

Advertisment

கரூரை சேர்ந்த அர்ச்சனா கார்த்திகேயன் பள்ளி, கல்லூரிகளில் நன்றாக படித்து வந்தார். சிறுவயதிலிருந்தே அவர் வீட்டில் பெரிதாக எந்த கஷ்டமும் அவருக்கு இல்லாதபடி தான் வளர்த்திருக்கின்றனர். அவர் தந்தைக்கு அர்ச்சனா ஒரு ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அவர் அதற்காக படித்து தேர்வுகளை எழுத ஆரம்பித்தார்.

ஆறு முறை முயற்சித்தும் அவரால் முழுமையாக அதில் தேர்ச்சி பெற முடியவில்லை. பெண்ணாக இருப்பதால் சுற்றி உள்ளவர்கள் அவருக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என கூறினார்கள். திருச்சியில் ஒரு 4,000 ரூபாய்க்கான வேலை கிடைத்தது. ஆனால் கரூரில் இருந்து தினமும் திருச்சி சென்று வருவதற்கு மாதம் 6,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருந்தது. இந்த சமயத்தில் அவருக்கு திருமணமானது, கணவரும் அவரை எந்த குறையும் இல்லாமல் நன்றாக பார்த்துக் கொண்டார்.

இவர் 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் பொழுது தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. சிறுவயதில் இருந்து பெரிதாக எந்த ஒரு கஷ்டத்தையும் அனுபவிக்காத இவருக்கு அந்த சில நாட்களை கடப்பதற்கு கடினமாக இருந்தது. மன அழுத்தத்தினால் அவருக்கு எட்டு மாதத்திலேயே குழந்தை பிறந்தது. ஒரே மருத்துவமனையில் அவரும், அவர் குழந்தையும், அவர் தந்தையும் இருந்தனர். அவர் தாய் தான் மூவரும் வெவ்வேறு தளத்தில் இருந்தாலும் அவர்களை பார்த்துக் கொண்டார். 

Advertisment

அவர் எதிர்பாராதவிதமாக ஒரு நாள் அவர் தந்தை இயற்கை எய்தினார். இந்த ஒரு நிகழ்வு தான் அர்ச்சனாவின் வாழ்க்கையையே மாற்றியது. அனைவரும் அர்ச்சனாவின் தாயைப் பார்த்து இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்? இருந்த பணம் எல்லாம் மருத்துவ செலவிற்கு தீர்ந்து விட்டது என்று பேச தொடங்கினர். அர்ச்சனாவிற்கு அவரின் தந்தை விட்டு சென்ற பெரிய சொத்தாக வீடு முழுவதும் இருந்த புத்தகத்தை பார்த்தார். அந்த புத்தகங்களை அவர் படிக்க தொடங்கினார். 

thaai herbal

குழந்தை பிறந்த 46வது நாளிலேயே அவர் Thaai Herbals என்ற ஒரு தொழிலை தொடங்கினார். அனைவரும் இப்பொழுது தான் குழந்தை பிறந்திருக்கிறது, ஒரு பெண் எப்படி இதையெல்லாம் செய்ய முடியும், உன்னிடம் பணம் இல்லை, உனக்கு இப்பொழுது தான் சிசேரியன் செய்திருக்கிறார்கள் என்று பல எதிர்மறையான விஷயங்களை கூறினார்கள். ஆனால், இவர்களுக்கு முன்பு இவர் சம்பாதித்து தன் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினார்.

Advertisment

இவர் இத்தனை வருடங்களாக படித்த CA இவர் தொழில் ஆரம்பித்த உடன் இவருக்கு கை கொடுத்தது. அதன் மூலம் தொழிலுக்கு தேவையான விஷயங்களை அவரை செய்தார். பிறகு அவர் தங்கையும் அவரின் வேலையை விட்டு முழு நேரமாக Thaai Herbalsகாக உழைக்க ஆரம்பித்தார். அவர்களுக்கு இருந்த விவசாய நிலத்தில் விளைந்ததை வைத்து பொருட்களை செய்ய ஆரம்பித்தனர். நலங்கு மாவு மற்றும் தலைமுடிக்கான எண்ணெயிலிருந்து தொடங்கிய இவரின் தொழில் தற்போது பல பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

இவை அனைத்தும் எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் அவர்களின் நிலத்தில் விளைந்த பொருட்களை வைத்து செய்து வருகின்றனர். 4000 ரூபாய்க்கு வேலைக்கு சென்ற ஒரு பெண் தற்போது தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு அதை விட அதிகமாக சம்பளம் வழங்கி வருகிறார். 

சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தியதால் அவர்களின் பொருட்களை மக்கள் நிறைய வாங்க ஆரம்பித்தார்கள். ஒன்றுமே சம்பாதிக்காமல் வீட்டிலிருந்த ஒரு பெண் தற்போது வீட்டில் இருந்தே லட்சத்தில் சம்பாதித்து வருகிறார். இந்த தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பே அவர் அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தார். அதனாலேயே ஆரம்பித்த முதல் நாளிலேயே 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். மேலும், பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதித்தார்.

Advertisment

thaai herbals

குழந்தைக்கு இரசாயனங்கள் கலக்கப்படாத இயற்கை பொருளை பயன்படுத்த வேண்டும் என்று குழந்தை பொருட்களை தயாரித்து தனது பிள்ளைக்கு அதை பயன்படுத்தினார்‌. இவர் செய்த குழந்தைப் பொருட்களுக்கும் மக்களிடமிருந்து நிறைய வரவேற்பு கிடைத்தது. அனைவரும் அவர்களின் குழந்தைக்கு இது போன்ற நல்ல பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணி இவரின் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த இவரின் தொழில் கூடவே இவரின் குடும்பமும் மொத்தமாக தீங்கு இல்லாத பொருட்களை பயன்படுத்த தொடங்கினர். 

வாழ்க்கையில் இந்த பெரிய மாற்றம் இவருக்கு எப்பொழுது நிகழ்ந்தது என்றால் இவர் படித்த விஷயங்களையும், இவருக்கு தெரிந்த விஷயங்களையும் யோசித்துக் கொண்டு மட்டும் இல்லாமல் அதை செயல்முறைப்படுத்தியதால் மட்டுமே இவர் இவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறார் என்று ஜோஷ் டாக்கில் கூறியுள்ளார். அதேபோல் பலமுறை நாம் நினைத்ததை செயலாக மாற்றும்போது தான் அது வெற்றியடையும் என்பதை ஆணித்தனமாக கூறுகிறார்.

Advertisment

இவர் ஆரம்பித்த பொழுது இவருக்கு ஒன்றும் வராது, இவ என்ன பண்ணப் போறா, இவ எப்படி அம்மாவை காப்பாற்ற போற என்று கூறியவர்கள் முன் வெற்றிகரமாக ஒரு தொழில் நடத்தி வருகிறார். மேலும் நமக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றாலும், ஒரு விஷயத்தில் நாம் முழுமையாக ஈடுபட்டிருந்தோம் என்றாலும் குழந்தையும், பணம் இல்லாததும் போன்ற விஷயங்கள் ஒரு தடையாக தெரியாது என்று கூறுகிறார். வெற்றி தரும் மகிழ்ச்சியை விட தோல்வி தரும் அனுபவங்கள் தான் ஒரு மனிதனை முழு மனிதனாக்கும் என்றும் கூறுகிறார்.

 

Suggested Reading: Amma samayal மீனாட்சியின் வாழ்க்கை பயணம்

Advertisment

Suggested Reading: பல கேலிகளை கடந்து வென்ற Sridevi (Sridevis Contour)

Suggested Reading: Goli Soda Glass Studio ஆரம்பித்த Radhikaவின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இலவச ஆலோசனை Nandhini - Entrepreneur

inspiring story Thaai Herbals
Advertisment