Advertisment

தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இலவச ஆலோசனை - Nandhini Entrepreneur

பல பெண்களும், தாய்மார்களும் தொழில் ஆரம்பிப்பதற்காக இன்ஸ்டாகிராம் மூலம் சிறந்த குறிப்புகளை அளித்து வருகிறார் நந்தினி. தொழில் முனைவர் ஆக வேண்டும் என்று நினைப்பார்களுக்கு இவரின் வாழ்க்கை பயணமும், இவர் கற்றுத்தரும் விஷயங்களும் பயனுள்ளதாக இருக்கும்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
nandhini entrepreneur

Images are used from Nandhini's Instagram Handle(nandhini_entrepreneur)

10 ஆண்டுகளுக்கு மேல் தோல்வியை சந்தித்த நந்தினி தொழில் முனைவராக தனது பயணத்தை ஆரம்பித்து அதில் வெற்றியடைந்துள்ளார். Yeka Herbal Cosmetics மற்றும் Aarah Skin Miracle என இரண்டு பிராண்டுகளை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தொழில் முனைவராகவும், ஒரு பெண்ணாகவும் அவர் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட விஷயங்களை மற்ற பெண்களுக்கும் கற்று தருகிறார். அவரின் வாழ்க்கை பயணம் பல பெண்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கக்கூடும். SheThePeople Tamil உடன் நடந்த நேர்காணலில் அவர் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

"சிறுவயதில் இருந்தே IAS ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து IAS தான் ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஆனால், வாழ்க்கை நம்மை எங்கு கொண்டு செல்கிறது என்று நமக்கு தெரியாது. என்னுடைய வாழ்க்கையில் தோல்விகள் தான் அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட 13 முறை நான் IAS ஆவதற்காக முயற்சி எடுத்து உள்ளேன். அதன் பிறகு ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். அது IAS ஆக இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் வேறு ஏதாவது துறையில் சாதிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதனால்தான் தொழில் முனைவராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். IAS துறைக்கு சமமாக நான் தொழில் முனைவை பார்த்தேன்.

nandhini entrepreneur

நான் Law படித்து இருந்தாலும் எனக்கு தொழில் முனைவு மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. சமூகத்தில் ஏதாவது மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் நேர்மையான தொழிலை செய்ய வேண்டும் என்றும் நினைத்தேன். அதனால்தான் இரசாயனங்கள் இல்லாத பொருட்களையும், நமது மூலிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்களையும் 2016ல் தயாரிக்க ஆரம்பித்தேன்.

Advertisment

இந்த 13 ஆண்டுகள் தோல்வி எனக்கு எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலை கொடுத்தது. அதனால் சின்ன சின்ன சவால்கள் எல்லாம் எனக்கு பெரிதாக தெரியவில்லை. மற்றவர்கள் எதிர்கொள்ள பயப்படும் சவால்களையும் நான் எதிர் கொண்டேன். 13 வருடங்களாக தோல்வியை பார்த்ததால் என்ன பெருசா வந்துரபோது, நம்ம பார்க்காததா என்ற ஒரு துணிச்சல் மூலம் இந்த தொழிலை ஆரம்பித்தேன். அந்த துணிச்சலே எனக்கு நேர்மறையான விஷயமாக இருந்து தற்போது தொழில் நன்றாக வளர்ந்துள்ளது. இந்த அனுபவங்களை வைத்து மற்ற பெண்களுக்கு இது போன்ற சவால்களை எப்படி கையாள்வது என்று இலவசமாக கற்றுக் கொடுத்த வருகிறேன்.

மற்ற பெண்களுக்கு உதவலாம் என்ற எண்ணம் எப்படி வந்தது?

IAS ஆக வேண்டும் என்று நினைத்தது சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால் தான். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உள்ளுணர்ச்சி எனக்கு எப்பொழுதுமே இருந்தது. நான்‌ IAS ஆக படித்துக் கொண்டிருக்கும் பொழுதே பத்து  முறை முயற்சித்த பிறகு மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். Political Science, தமிழ் இலக்கியம் போன்ற சப்ஜெக்டுகளில் நான் நிறைய மதிப்பெண்கள் எடுத்து டாப்பராக இருந்தேன். நான் என்னென்ன தவறுகள் செய்தேன் என்பதை கண்டறிந்து இலவசமாக IAS கோச்சிங் அளித்தேன்.

Advertisment

என்னுடைய சீனியர் அட்வகேட்டின் உதவியுடன் நான் ஜூனியர் ஆக இருந்தபோதே கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். தொழில் முனைவர் ஆன பிறகும் நான் என்ன கற்றுக் கொண்டாலும் அதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் பெண் தொழில் முனைவோர்களுக்கு கற்றுக் கொடுத்து உதவ ஆரம்பித்தேன்.

அது மட்டும் இல்லாமல் பெண்ணாக இருப்பதால் மற்ற பெண்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆண்களுக்கு வெளியே சென்று நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பெண்கள் வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் அவர்களால் வெளியே சென்று நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியாது. பணரீதியாகவும் அவர்கள் நிறைய யோசிக்க வேண்டிய இருப்பதால் நான் அனைத்தையும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி அதில் முழு கவனம் செலுத்துகிறேன்.

  1. பெண்கள் தொழில் ஆரம்பிப்பதற்கு தேவையான விஷயங்கள்
  2. பெண்கள் அவர்களின் ஆர்வத்தை(passion) எப்படி கண்டறிவது?
  3. தொழில் தொடங்குவதற்கு ஆரம்பத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?
  4. சமூக வலைதளங்களை பயன்படுத்தி தொழில் செய்வதற்கு சில குறிப்புகளை கொடுங்கள்
  5. பெண்கள் தாழ்வு மனப்பான்மையை கடந்து வருவதற்கான சில குறிப்புகளை கூறுங்கள்
Advertisment

இது போன்ற பல கேள்விகளுக்கு நந்தினி Thuglife Thalaivi என்ற podcastஇல் பதில் அளித்துள்ளார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

 

Suggested Reading: Goli Soda Glass Studio ஆரம்பித்த Radhikaவின் வாழ்க்கை பயணம்

Advertisment

Suggested Reading: பல கேலிகளை கடந்து வென்ற Sridevi (Sridevis Contour)

Suggested Reading: Earth Rhythm நிறுவனர் Hariniஇன் வாழ்க்கை பயணம்

Suggested Reading: டிசைனர் சிந்துவின்(Designer Sindhu) வாழ்க்கை பயணம்

Nandhini Entrepreneur Yeka Herbal Cosmetics Aarah Skin Miracle
Advertisment