Advertisment

Earth Rhythm நிறுவனர் Hariniஇன் வாழ்க்கை பயணம்

வேலையிலிருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்து ஹரிணி என்ற ஒரு பெண் Earth Rhythm என்ற ஒரு தொழிலை தொடங்கி தற்போது வெற்றிகரமாக அதை நடத்தி வருகிறார். அவரின் வாழ்க்கை பயணத்தை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
earth rhythm founder harini

Image of Harini

ஹரிணி சிவகுமார் சென்னையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்துள்ளார். எல்லா நடுத்தர மக்களுக்கும் இருக்கும் ஆசையே போலவே அவர் வீட்டிலும் அவர் நன்கு படித்து ஒரு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணம் இருந்தது. அவருக்கு 22 வயதில் திருமணம் ஆனது. 23 வயதில் குழந்தையும் பிறந்தது. அவருடைய குழந்தை down syndrome உடன் பிறந்ததால் தனது பேங்க் வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக வீட்டில் இருந்தார்.

Advertisment

ஆறு, ஏழு வருடங்கள் குழந்தையை பார்த்துக் கொண்டு அவர் வீட்டில் இருந்தார். வேலையை விட்டு விட்டோம் என வருத்தம் எதுவும் இல்லாமல் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு குழந்தையை பார்த்துக் கொள்வதில் மகிழ்ச்சியாக இருந்தார். கணவருக்கு பெங்களூர், டெல்லி என வேலை மாற்றம் ஏற்படும் போதெல்லாம் இவர்கள் குடும்பத்தோடு வெவ்வேறு இடங்களுக்கு மாறிக் கொண்டிருந்தனர். அப்படித்தான் 2015இல் டெல்லிக்கு சென்றனர்.

earth rhythm founder harini

குழந்தைக்கு இரசாயனமற்ற பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் சிறிது காலம் அதை வெளிநாடுகளில் இருந்து வாங்கி வந்தார். பிறகு வீட்டிலேயே ஆர்கானிக் ஆக பொருட்களை செய்து தன் மகனுக்கு பயன்படுத்தி வந்தார். அவ்வப்போது அவர் செய்யும் பொருட்களை குடும்பத்தினரிடம் கொடுக்கவும் செய்தார். அவர்கள் மீண்டும் அந்த பொருட்களை வாங்குவதற்காக அவரிடம் வந்தனர். தொழில் முனைவராக வேண்டுமென்ற எண்ணம் எதுவும் இவருக்கு இல்லை என்பதால் ஆரம்பத்தில் சிறிதாக வீட்டிலேயே பொருட்களை செய்ய ஆரம்பித்தார். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சில எக்சிபிஷன் மூலமாகவும் தனது பொருட்களை மக்களுக்கு சென்றடைய செய்தார்.

Advertisment

ஹரிணி திரும்பவும் அதற்கு தேவையான விஷயங்களைப் படித்து கொஞ்சம் கொஞ்சமாக தனது தொழிலை வளரச் செய்தார். வாடிக்கையாளர்களும் தொடர்ந்து வர ஆரம்பித்தனர். ஒருமுறை அவரின் தந்தை வீட்டிற்கு வந்த போது இவர் செய்வதை எல்லாம் பார்த்துவிட்டு அதை பற்றி கேள்விகள் கேட்டுள்ளார். அதன் பிறகு தந்தையும் அவருக்கு ஆதரவு அளிக்க ஆரம்பித்தார். பின்பு இருவரும் சேர்ந்து அதற்காக உழைக்க ஆரம்பித்தனர். 2019இல் இவர் செய்யும் இந்த விஷயங்களை ஒரு தெளிவான நோக்கத்துடன் பிராண்டாக மாற்ற வேண்டும் என்று எண்ணி அதற்கு Earth Rhythm என்ற பெயரை வைத்தனர்.

products earth rhythm

இதற்கு முன்னால் அவரின் வாடிக்கையாளர்கள் எதற்காக இவர் செய்யும் பொருட்களை தொடர்ந்து வாங்கினார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பொருட்களை செய்ய ஆரம்பித்தனர். ஹரிணிக்கும், அவரின் தந்தைக்கும் இதற்கு முன் தொழிலில் எந்த முன் அனுபவமும் இல்லாததால் அனைத்தையும் அவர்களே செய்து கற்றுக் கொண்டனர்.

Advertisment

ஆரம்பத்தில் வேலைக்காக எப்படி ஆட்கள் எடுக்க வேண்டும் என்று கூட தெரியாமல் தவித்தனர். பிறகு முதல் முறையாக வேலைக்கு ஆட்கள் எடுக்கும் பொழுது நன்கு படித்திருந்த ஒரு பெண் வீட்டு வேலை செய்யும் வேலைக்கு வந்திருந்தார். அவரிடம் ஹரிணி படித்துவிட்டு எதற்காக இந்த வேலைக்கு வருகிறாய் வேறு ஏதாவது வேலை செய்யலாம் அல்லவா? என்று கேட்டபோது, அந்தப் பெண் தனக்கு ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்தாலும் சரளமாக பேச வராது என்று கூறினார். அந்த கணமே ஹரிணி அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று எண்ணி 2019இல் 5000 ரூபாய்க்கு அவரை வேலைக்கு எடுத்தார். இன்று அந்தப் பெண் அவரின் அறிவை வளர்த்துக் கொண்டு தங்களுடன் தொடர்ந்து வேலை செய்து தற்போது 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறார் என்று அவர் ஜோஷ் டாக்கில் பேசும்போது குறிப்பிட்டு இருந்தார். இதை அவரின் முதல் வெற்றியாகவும் அவர் பார்க்கிறார். மேலும், இதுபோன்று பல பெண்களுக்கு வேலை வாய்ப்பை அவரின் நிறுவனம் வழங்கியுள்ளது.

earth rhythm

அதன் பிறகு நெட்வொர்க்கிங் செய்து தனது தொழிலை வளர்த்துள்ளார். ஆன்லைனில் மட்டும் இயங்கும் இவரின் தொழில் நல்ல வரவேற்பை பெற்றது. வெறும் ஆன்லைன் மூலமாக மட்டுமே இவர்கள் நல்ல லாபத்தை பார்த்தார்கள். 35 வயதில் ஒரு 200 கோடி மதிப்புள்ள ஒரு தொழிலை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஹரிணி. 

Advertisment

பெண்கள் எத்தனையோ காரணத்திற்காக அவர்களின் வேலையை விடுகின்றனர் அல்லது வேலையில் இருந்து சிறிது இடைவேளை எடுத்துக் கொள்கின்றன. ஆனால் அதன் பிறகு எப்படி மறுபடியும் வேலைக்கு செல்வது என்பது அவர்களுக்கு ஒரு குழப்பமாகவே இருக்கிறது. இதையெல்லாம் கடந்து 35 வயதில் ஒரு பெண் ஒரு தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வர முடியும் எனில் உங்களாலும் முடியும் என்று ஹரிணி கூறுகிறார். மேலும், அதற்கு கனவு காண வேண்டும் என்றும் அதற்காக உழைக்க வேண்டும் என்றும் அவர் ஜோஷ் டாக்கில் பேசும் பொழுது கூறினார்.

 

Suggested Reading: Some More Foods என்ற தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் தீபா

Advertisment

Suggested Reading: Plush Boutique உருவாக்கிய Santhoshiயின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: Sew with Shama YouTube சேனலில் எளிமையாக தைக்க கற்றுத் தருகிறார் Shama

Suggested Reading: மாதவிடாய் வலியை (period cramps) போக்கும் 6 சாறுக்கள்

inspiring story Earth Rhythm Harini Sivakumar
Advertisment