ஒரு பெண் தனது மாதவிடாய் காலத்தில் இருக்கும் பொழுது அவள் மிகவும் அசௌகரியத்தை அனுபவிக்கிறாள். குறிப்பாக வயிற்று பகுதியில் கடுமையான பிடிப்புகள்(cramps), மனநிலை மாற்றங்கள், வீக்கம்(bloating), மார்பக வலி மற்றும் பல அறிகுறிகளை அனுபவிக்க கூடும். மாதவிடாய் காலத்தில் கருப்பையின் உட்புற புரணி இரத்தத்துடன் வெளியேறும், இந்த நேரத்தில் நீங்கள் சாப்பிடுவதும் மற்றும் குடிப்பதும் ஒரு பெரிய மற்றும் முக்கிய பங்கு வகிக்கிறது.
சாதாரணமாகவே பழச்சாறுகளில் நிறைய நன்மைகள் உள்ளது. மற்ற நேரத்தில் அதை தவிர்த்தால் கூட மாதவிடாய் நேரத்தில் பழச்சாறுகள் குடிப்பது மாதவிடாய் பிடிப்புகளை குறைக்க உதவுகிறது. மாதவிடாய் வலி நிவாரணத்திற்காக உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது குடிக்க வேண்டிய 6 சிறந்த மற்றும் ஆரோக்கியமான பழச்சாறுகளின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
1. அன்னாசி பழச்சாறு:
அன்னாசி பழச்சாறு மாதவிடாய் வலியை போக்க உதவும். மாதவிடாய் காலத்தில் அன்னாசி பழச்சாறு குடிப்பது இரத்த சோகையை தவிர்க்க உதவும். மாதவிடாய் பிடிப்புகள்(cramps) கருப்பை தசைகளில் சுருக்கத்தால் ஏற்படுகிறது. மாதவிடாய் காலத்தில் அன்னாசி பழச்சாறு உட்கொள்வது கருப்பையை தளர்த்த உதவுகிறது மற்றும் மாதவிடாய் வலி நிவாரணத்திற்கு அற்புதமாக செயல்படுகிறது. இது சுவையாக இருப்பது மட்டுமில்லாமல் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இந்த சாறு வைட்டமின்கள், தாதுக்கள்(minerals) மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்டால்(antioxidants) நிரப்பப்பட்டு இருக்கிறது மற்றும் பல உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கையான தீர்வாக செயல்படுகிறது.
2. பீட்ரூட் சாறு:
பீட்ரூட் ஜூஸில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பீட்ரூட் சாற்றில் உள்ள நைட்ரேடுகள் இரத்த நாளங்களை தளர்த்துவதால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் இரத்த போக்கை குறைக்கவும் உதவுகிறது. பீட்ரூட்டில் சில கரிம அமிலங்கள்(organic acids) உள்ளன, இது லாக்டிக் அமிலத்தை சிதறடித்து வலியை போக்க உதவுகிறது. பீட்ரூட்டில் மெக்னீசியம்(magnesium) மற்றும் பொட்டாசியம்(potassium) நிறைந்துள்ளது. இது பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
3. எலுமிச்சை பழச்சாறு:
எலுமிச்சை சாற்றில் நிறைய சத்துக்கள் நிறைந்திருப்பதால் மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறு வைட்டமின் சி அளவை அதிகரிக்க உதவுகிறது, இது பிடிப்புகளை(cramps) போக்க உதவுகிறது.
வைட்டமின் சி ஆன்டிஆக்சிடென்ட்(antioxidants) ஆகும், இது தசைவலி(muscle pain) மற்றும் பிடிப்பை(cramps) குறைக்க உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் pH அளவை குறைக்கும். குறைவான pH அளவு மாதவிடாய் வலி, வீக்கம்(bloating) மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிடிப்புகள் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
4. கேரட் சாறு:
கேரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை உடைக்க உடலுக்கு உதவுகின்றன, இது உங்கள் உடலில் வலிமிகுந்த நீர்க்கட்டிகளை உருவாக்குவதைத் தடுக்கும். கூடுதலாக இது வைட்டமின் Aயின் நல்ல மூலமாகும். இது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும், மாதவிடாய் வலியை குறைக்கவும் உதவும். கேரட் சாறு periods cravingsயை கட்டுப்படுத்த உதவுகிறது. சாதாரணமாகவே கேரட்டில் இனிப்பு சுவை இருப்பதால், அது உங்கள் periods cravingsயை பூர்த்தி செய்வது போல் உணர வைக்கலாம்.
5. ஆரஞ்சு பழச்சாறு:
மாதவிடாய் நேரத்தில் உதவக்கூடிய கால்சியம், வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் ஆரஞ்சு சாற்றில் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? மாதவிடாய் காரணமாக ஏற்படும் பிடிப்புகள்(cramps) மற்றும் வலியை குறைக்க ஆரஞ்சு பழச்சாறு ஒரு நல்ல பானம் ஆகும். இந்த சாறு வலி நிவாரணிகளுக்கு மாற்றாக இல்லாவிட்டாலும் அதிக சர்க்கரை கொண்ட உணவை சாப்பிடுவதற்கு இது ஒரு நல்ல மாற்றாக இருக்கலாம்.
6. தர்பூசணி பழச்சாறு:
தர்பூசணி சாறு சருமத்திற்கு நல்லது செய்வது மட்டுமில்லாமல் உங்கள் உடலை நீரேற்றமாக(hydration) வைத்திருக்கும் மற்றும் மாதவிடாய் வலியை குறைக்கும். தர்பூசணி சாற்றில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது தசைகளை தளர்த்தவும் தசைப் பிடிப்பை(cramps) குறைக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை இரண்டும் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் மூட்டுகளை பராமரிப்பதில் பங்கு வகிக்கின்றன. மேலும் இது சுவையாக இருக்கும். நீண்ட நாள் வேலைக்குப் பிறகு புத்துணர்ச்சியூட்டும் இந்த சுவை நிறைந்த பானத்தை நீங்கள் விரும்புவீர்கள்.
Suggested Reading: மாதவிடாயின் (periods) போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
Suggested Reading: தவறான ப்ராக்களை (wrong bra size) அணிவதால் ஏற்படும் விளைவுகள்
Suggested Reading: 5 வகையான வெள்ளைப்படுதல் மற்றும் அதற்கான அர்த்தம்
Suggested Reading: முடி உதிர்வதை தடுக்க சமையலறையில் இருக்கும் ஐந்து பொருட்கள்