இந்தியாவில் பல பெண்களுக்கு ப்ராக்களை பற்றி பெரிய அளவில் எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை. பலர் தவறான அளவிலேயே ப்ராக்களை அணிகின்றனர். இப்படி தவறான அளவில் ப்ரா அணிந்தால் உடம்பில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அயலி வலைத் தொடரில் கூட மைதிலி என்ற பெண் அவரின் தாயால் கட்டாயப்படுத்தி தவறான அளவிலான ப்ரா அணிவதால் ஏற்பட்ட காயத்தையும் நாம் பார்த்திருப்போம். அதேபோல்தான் பல பெண்களுக்கு இதை பற்றின விழிப்புணர்வை கிடையாது. தவறான ப்ராக்களை அணிவதன் மூலம் ஏற்படும் விளைவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
மார்பகம் மற்றும் முதுகு வலி:
உங்கள் ப்ரா உங்கள் மார்பக அளவை விட சிறியதாக இருந்தால் மார்பகத்தில் வலி அல்லது முதுகில் வலியை உணரலாம். சிறிய அளவு ப்ராக்கள் மிகவும் அழுத்தமாக இருப்பதால் உங்கள் மார்பகத்தையும், முதுகு பகுதியையும் அழுத்தக்கூடும். நிறைய அழுத்தத்தின் விளைவாக உங்களுக்கு வலி ஏற்படலாம் மற்றும் அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தும். அதே மாதிரி பெரிய அளவிலான ப்ராவை அணியும்போது அது உங்கள் மார்பகங்களுக்கு தேவையான ஆதரவை தராமல் இருக்கலாம். உங்களுக்கு பெரிய மார்பகங்கள் இருந்தால் உங்களுக்கு அது வலியையும் ஏற்படுத்தலாம்.
தொய்வான மார்பகங்கள்:
உங்களுக்கு சரியாக பொருந்தாத ப்ராக்களை நீங்கள் அணியும் பொழுது உங்கள் மார்பகத்துக்கு தேவையான ஆதரவை அது தராமல் அழுத்துவதால் தொலில் தடிப்புகள் ஏற்படுத்தும். சில பெண்கள் பெரிய அளவிலான ப்ரா அணிவது அவர்களுக்கு தேவையான ஆதரவை தரும் என நினைக்கின்றனர். ஆனால் அப்படி அணிவது மூலம் மார்பகங்கள் தொய்வடையலாம். இது போன்ற விஷயங்கள் சில பெண்களுக்கு வயது மற்றும் ஹார்மோன்களின் மாற்றத்தால் ஏற்படக்கூடும். ஆனால் சிறு வயதிலிருந்து இது ஏற்பட்டால் நீங்கள் சரியான ப்ராக்க அணிவதில்லை என்பதே அர்த்தம்.
தோள்பட்டைகளில் தடிப்புகள்(rashes) ஏற்படலாம்:
ப்ராக்களில் இருக்கும் ஸ்டாப்புகள் தோள்களில் அழுத்தம் தரலாம். இந்த ப்ரா ஸ்டாப்புகள் பொதுவாக மார்பகத்தின் எடையை சமமாக பிரித்து ஒரு ஆதரவை தரும். ஆனால் சிறிய சைஸ் பிரா அணிவதன் மூலம் எடை தாங்காமல் உங்க தோள்பட்டையில் வெட்டுகள் ஏற்படலாம். இது கழுத்து மற்றும் முதுகு வலியை கூட ஏற்படுத்தும்.
மார்பகங்களில் நிணநீர் கணுக்கள்(lymph nodes) தடுக்கிறது:
சிறிய ப்ராக்களை அணியும் பொழுது அது மார்பகங்களில் உள்ள நிணநீர் நாளங்கள்(lymph vessels) தடுக்கிறது. இது மிகவும் உணர்திறன் கொண்டு இருப்பதால் அழுத்தத்தை அதனால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிணநீர் கணுக்கள்(lymph nodes) மார்பகங்களுக்கு கேன்சர் அணுக்கள் செல்லாமல் தடுக்கிறது. இப்படி இதை நாம் அழுத்தி அதன் செயல்பாட்டினை தடுத்து விட்டால் பின் விளைவுகளை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
அளவுக்கு அதிகமான வியர்வை மற்றும் மூச்சுத் திணறல்:
ப்ராக்களை மிகவும் அழுத்தமாக அணிவது தோல்களுக்கு செல்லக்கூடிய காற்றை தடுக்கக்கூடும். அதன் விளைவாக மூச்சு திணறல் ஏற்படுவது மட்டுமின்றி நிறைய வேர்க்கவும் கூடும். இப்படி வேர்ப்பதன் மூலம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஈஸ்ட் போன்ற தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளது.
மோசமான உடல் தோரணை:
தொய்வு அடைந்த மார்பகங்கள் காரணமாக கழுத்து, முதுகு மற்றும் தோல் பட்டைகளின் வலி ஏற்பட்டு உங்கள் தோரணையையே அது மாற்றி விடக்கூடும். இப்படி தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவதால் மூச்சு விடுவதற்கு கடினமாகும். உடல் தோற்றம் இப்படி மாறிவிட்டால் அது உங்கள் நம்பிக்கையையும் பாதிக்கும்.
ஒரு ஆராய்ச்சியில் 80 சதவீத பெண்கள் தவறான ப்ரா அளவுகளையே அணிகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதனால் பெண்கள் அவர்கள் மார்பகங்களுக்கு எந்த ப்ரா சரியாக இருக்கும் என்பதை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். மேலும் தவறான அளவுகளை அணிவது உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆனால் இது பல பெண்களுக்கு தெரிவதில்லை. எனவே, உங்களுக்கு தெரிந்த பெண்களுடன் இந்த செய்தி தொகுப்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Suggested Reading: மாதவிடாய் பற்றி கற்றுக் கொள்ள வேண்டிய ஐந்து தகவல்கள்
Suggested Reading: 5 வகையான வெள்ளைப்படுதல் மற்றும் அதற்கான அர்த்தம்
Suggested Reading: மன ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள ஐந்து எளிமையான வழிகள்
Suggested Reading: எச்சரிக்கை பெண்களே: மாதவிடாயின் அதிக இரத்தப்போக்கு ஆபத்தானது