சில சமயம் உங்கள் உள்ளாடையில் வித்தியாசமாக முட்டையின் வெள்ளை கரு போன்ற ஒரு விஷயத்தை பார்த்திருப்பீர்கள். அது என்னவென்று உங்களுக்கு குழப்பமாக உள்ளதா? அது ஏன் வருகிறது என்று தெரியவில்லையா? சரி, நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக சில பதில்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
மாதவிடாய் இல்லாத நேரத்தில் உங்கள் வெஜைனாவில்/பிறப்புறுப்பில் இருந்து வரும் வெளியேற்றம் வெள்ளைப்படுதல் என தமிழில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் வெஜைனல் டிஸ்சார்ஜ் (vaginal discharge) என அழைக்கப்படுகிறது. இது இயல்பான ஒரு உடல் செயல்பாடு தான். எனவே இதைக்கண்டு அச்சப்பட வேண்டாம். ஆனால், அந்த வெளியேற்றத்தின் நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ள முடியும்.
பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் மருத்துவரான டாக்டர் தனயா நரேந்திரனுடன் கலந்தாலோசித்ததில், உங்களின் 5 வகையான பிறப்புறுப்பு வெளியேற்றத்தை எவ்வாறு கண்டறிவது மற்றும் அது உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி என்ன குறிப்பிடுகிறது என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்:
1. வெளிப்படையான (முட்டையின் வெள்ளை கரு போல):
இது ஒரு சாதாரணமான வெளியேற்றமாகும். விரலால் தொடுவதற்கு ஒட்டும் தன்மை கொண்டது மற்றும் பொதுவாக முட்டையின் வெள்ளை கருவை போன்று இருக்கும். இது கிரீம் அல்லது வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் கூட இருக்கலாம். இந்த நிறங்களில் உங்கள் வெளியேற்றம் இருந்தால் மற்றும் அதிலிருந்து எந்த துர்நாற்றமும் வரவில்லை என்றால் அதில் எந்த ஆபத்தும் இல்லை. அதைக் கண்டு பயப்பட வேண்டாம்.
2. சிவப்பு:
வழக்கமாக, வெளியேற்றும் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது உங்கள் மாதவிடாய் சுழற்சி நெருங்கி வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம். ஆனால் உங்கள் மாதவிடாய் சுழற்சி வர இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் போது சிவப்பு நிற வெளியேற்றம் வந்தால் அது இயல்பானது அல்ல. எனவே, நீங்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
3. பழுப்பு(Brown):
பழுப்பு நிற வெளியேற்றம் உங்கள் மாதவிடாய் சுழற்சியின் எச்சமாக இருக்கலாம். உங்கள் வெஜைனாவில் அமில சூழல் இருப்பதால் அது சில சமயம் ரத்தத்தை பழுப்பு நிறமாக மாற்றும். இது முற்றிலும் இயல்பானது. ஆனால், உங்கள் மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாள் முன்பும், பின்பும் இல்லாமல் வேறு நாட்களில் பழுப்பு நிற வெளியேற்றும் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
4. சிவப்பு அல்லது மஞ்சள்:
உங்கள் உள்ளாடையில் அல்லது கழிப்பறையில் இருக்கும் போது இது போன்ற நிறத்தில் உங்கள் வெளியேற்றத்தை கண்டால் நீங்கள் அதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை, மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் கூட வெளியேற்றம் இருக்கலாம். இது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் அல்லது STIயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
5. தயிர் வெள்ளை:
தயிர் போல உங்கள் வெளியேற்றம் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். அது ஒரு புஞ்சை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். வெஜைனாவில் அது தொடர்ந்து அரிப்பை உண்டாக்கும். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், உங்கள் வெளியேற்றம் "மீன்" அல்லது "அம்மோனியா" அல்லது "உலோகம்" போன்ற துர்நாற்றம் வந்தால் அது பாக்டீரியா வஜினோசிஸைக் குறிக்கலாம், இது உங்கள் வெஜைனாவில் pH சமநிலையில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், நீங்கள் நிச்சயமாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
மாதவிடாய் பற்றியும் உடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றியும் பெரும்பாலும் நமக்கு யாரும் கற்றுக் கொடுப்பதில்லை. ஏன் பெற்றோர்களிடமும் அதைப்பற்றி கேட்க நமக்கு உரிமை இல்லை. இளம்பெண்கள் பெரும்பாலோருக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு கிடையாது. காரணம் இது பற்றி எல்லாம் இந்த சமூகத்தில் பேசுவது தவறு. ஏன் வீட்டில் கூட அம்மாக்கள் அவர்களின் பிள்ளைகள் வயதிற்கு வரும் வரை மாதவிடாய் பற்றி பேச விரும்புவதில்லை. இதனால் பல பெண்களுக்கு இதைப்பற்றி தெரிவதில்லை.
ஆரம்ப காலத்தில் ஏற்படும் அறிகுறியை பற்றி விழிப்புணர்வு இல்லாததால் பிற்காலத்தில் பெரிய பிரச்சனைக்கு அது வழிவகுக்கிறது. இனிமேல் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இது உங்கள் உடலில் ஆரோக்கியத்தை குறிக்கிறது. நீங்கள் ஆரம்ப காலத்தில் வரும் அறிகுறிகளை அலட்சியமாக எடுத்துக் கொண்டால் அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும். எனவே ஆரம்பத்திலேயே அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.
இந்த பதிவை உங்கள் அம்மா, சகோதரி, தோழி, மனைவி என யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுடன் இதை பகிருங்கள்.
Suggested Reading: தவறான ப்ராக்களை (wrong bra size) அணிவதால் ஏற்படும் விளைவுகள்
Suggested Reading: மாதவிடாயின் (periods) போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
Suggested Reading: முடி உதிர்வதை தடுக்க சமையலறையில் இருக்கும் ஐந்து பொருட்கள்
Suggested Reading: மாதவிடாய் வலியை (period cramps) போக்கும் 6 சாறுக்கள்