இறந்த அல்லது செயலற்ற முடி தோலில் இருந்து வெளிப்படும் பொழுது அந்த நிலை alopecia அல்லது முடி உதிர்தல் என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு வயதில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முடி உதிர்தல் ஏற்படும்பொழுது அது அவர்களின் சமூக மற்றும் உளவியல் நல்வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மரபியல், ஹார்மோன் சமநிலையின்மை, புஞ்சை பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகியவை முடி உதிர்தலுக்கு காரணமாகும். ஆனால், உங்கள் தலைமுடியை இறக்கையாகவே மீண்டும் வளர்க்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. வீட்டில் சமையல் அறையில் கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்தும் உங்கள் முடி உதிர்வை தடுக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
முடி உதிர்தலுக்கான சில வீட்டு வைத்தியங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது
வெந்தயம்:
வெந்தயம் புரதம் நிறைந்தவை மற்றும் முடி உதிர்வு தீர்வுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முடி உதிர்வதை தடுக்க மற்றும் மீண்டும் புதிய முடியை வளர வைப்பதற்கு சிறந்த வீட்டு சிகிச்சையில் வெந்தயமும் ஒன்றாகும். ஏனென்றால், அவை உங்கள் முடிவேர்களை பலப்படுத்துகிறது, சேதமடைந்த முடியை குணப்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை ஊற வைத்த வெந்தயத்தில் செய்யப்பட்ட பேஸ்டை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வை நிறுத்தலாம்.
பீட்ரூட் சாறு:
முடி உதிர்தலுக்கான சிறந்த தீர்வுகளில் ஒன்று பீட்ரூட் சாறு ஆகும். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் முடியையும், வேர்களையும் பலப்படுத்துகிறது. அதே சமயம் ஆரோக்கியமான முடியை பராமரிக்கவும் உதவுகிறது. மருதாணி மற்றும் பீட்ரூட் பேஸ்ட்டை தலை முடிக்கு தடவுவது நல்லது.
ஜோஜோபா எண்ணெய்:
வறண்டு உச்சந்தலையுடன் கூடிய பொலிவற்ற முடி அதிகமாக முடி உதிர்வை ஏற்படுகிறது. உங்களுக்கு பொடுகு தொல்லை, வறண்ட செதில் போன்று உச்சந்தலையில் இருந்தால் முதலில் அந்தப் பிரச்சனைக்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் தொடங்கவும். மிதமாக சூடான எண்ணெயை உங்கள் உச்சந்தலையில் அடிக்கடி தேய்பதன் மூலம் இதை செய்யலாம். உச்சந்தலையில் எண்ணெய் வைத்தால் அது நன்கு ஈர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது. அதனால் உங்கள் கூந்தலை மேம்படுத்துவதற்காக முடியின் வேர்களில் ஜோஜோபா எண்ணெயை பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலை:
ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள்(antioxidant) மற்றும் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் இ ஆகிய சத்துக்கள் கருவேப்பிலையில் நிறைந்துள்ளது. கருவேப்பிலை முடி நரைப்பதை முன்கூட்டியே தடுக்கிறது மற்றும் முடி வளர்வதற்கும் ஊக்குவிக்கிறது. உங்கள் தலைமுடியில் கருவேப்பிலை பேஸ்ட்டை நேரடியாக தடவி 30 நிமிடம் கழித்து கழுவலாம் அல்லது இதற்கு மாறாக கருவேப்பிலை essential oil சிறு துளிகள் நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயில் கலந்து அந்த கலவையை தலையில் மசாஜ் செய்யலாம்.
முட்டைகள்:
முட்டையில் புரதம் அதிகம் உள்ளது. இது நமது பொது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இருப்பினும் நீங்கள் முட்டை சாப்பிடும் பொழுது அந்த புரத சத்துக்கள் குறைவாகவே உங்கள் முடியை சென்றடைகிறது. முடி உதிர்வை நிறுத்த விரும்பினால் உங்கள் தலைமுடிக்கு நேரடியாக முட்டையை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஒரு முழு முட்டையை பாத்திரத்தில் எடுத்து அதை நன்கு கலக்கி, குளித்து முடித்தவுடன் ஈரமான முடியில் அதை தடவி பத்து நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் நன்றாக தலை முடியை அலசுங்கள்.
முடி உதிர்வதற்கு அடிக்கடி சிகிச்சை தேவைப்படாது. மேலும் நாம் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், இது தற்காலிகமானது மற்றும் முடி மீண்டும் வளரும் அல்லது இது வயதாவதற்கான பொதுவான அறிகுறியாகும். தாதுக்கள் மற்றும் முக்கிய வைட்டமின் குறைபாடுகள், முறையற்ற உணவு முடி உதிர்தலுக்கு முதன்மை காரணமாக அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் உண்ண வேண்டும். அதிக ஊட்டச்சத்து உள்ள புரதங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு கடுமையான முடி உதிர்வு இருந்தால் அதன் மூல காரணத்தை அறிய தோல் மருத்துவர்களிடம் பேசுவது அவசியம் என்பதை நினைவு கொள்ளுங்கள். Explore Gytree’s expert curated “Uncontrollable Hair Fall” package to know more.
Read this article in English: 5 Home remedies for hair fall: In your Kitchen
Suggested Reading: பெண்களுக்கு தேவையான பத்து வைட்டமின்கள்(vitamins)
Suggested Reading: சம சீரற்ற மார்பகங்கள்(uneven breasts) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Suggested Reading: பெண்களின் மன அழுத்தத்திற்கான(depression) தீர்வுகள்
Suggested Reading: மாதவிடாய் வலியை(period cramps) போக்கும் 6 சாறுக்கள்