Advertisment

சம சீரற்ற மார்பகங்கள்(uneven breasts) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சம சீரற்ற மார்பகங்கள் பற்றி மக்களுக்கு பெரிய அளவில் விழிப்புணர்வு கிடையாது. பெண்கள் இதனால் பல கட்டுக் கதைகளை நம்புகின்றனர். இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இந்த செய்தி தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
Devayani
New Update
uneven breast

Image is used for representational purpose only

இந்த உலகத்தில் அழகு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உண்மை இல்லாத மற்றும் நம்ப முடியாத பல வரையறைகளை வைத்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் நம்மில் பலருக்கு நமது உடல் பற்றிய நம்பிக்கையும், தைரியமும் இல்லை. பெரும்பாலான மக்களுக்கு இதனாலேயே தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. இன்று நாம் சீரற்ற மார்பகங்கள்(uneven breast) பற்றி விரிவாக பார்க்க போகிறோம். அதுமட்டுமில்லாமல் மக்கள் நம்பக்கூடிய கட்டுக் கதைகள் பற்றியும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

சீரற்ற மார்பகம் என்றால் என்ன:

செம சீரற்ற மார்பகங்கள் அளவு, வடிவம் அல்லது அமைப்பு நிலையில் மாறுபடும். இது பொதுவானவை மற்றும் பல பெண்களுக்கு இதுபோன்று ஏற்படக்கூடும். சிலருக்கு ஒரு மார்பகம் மற்றொரு மார்பகத்தை விட பெரிதாக இருக்கும் அல்லது மேலே இருக்கும் அல்லது இரண்டு மார்பகங்களும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும். இது அனைத்துமே பெண்களின் உடலில் இயற்கையானது தான். 

சமமற்ற மார்பகங்களை சுற்றி இருக்கும் தவறான கருத்துக்கள்:

Advertisment

பெரும்பாலும் இதைப்பற்றி யாரும் நமக்கு தெளிவான விளக்கத்தை அளிக்காததால் மக்கள் பல மூடநம்பிக்கைகளை நம்புகின்றனர். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. கட்டுக்கதை: சம சீரற்ற மார்பகங்கள் அசாதாரணமானவை.

உண்மை: சம சீரற்ற மார்பகங்கள் முற்றிலும் இயல்பானவை மற்றும் இயற்கையானவை. உலகில் பெரும்பாலான பெண்கள் சம சீரற்ற மார்பகங்கள் உடையவர்கள்.

Advertisment

2. கட்டுக்கதை: சம சீரற்ற மார்பகங்கள் உடலில் ஏதோ தவறாக இருப்பதன் விளைவாகும்

உண்மை: மரபியல், ஹார்மோன் மாற்றங்கள், கர்ப்பம், தாய்ப்பால் அல்லது இயற்கையான மாறுபாடு போன்ற பல காரணங்களினால் சம சீரற்ற தன்மை ஏற்படலாம். இது எந்த உடல் நல குறைவையும் குறிக்கவில்லை.

3. கட்டுக்கதை: சம சீரற்ற மார்பகம் உடைய பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இல்லை

Advertisment

உண்மை: அழகு என்பது அகநிலை. உங்களை பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமானது. உங்களின் தன்னம்பிக்கை, சுய அன்பு(self love) மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவை உங்கள் உடலை காட்டிலும் அதிக அழகை வெளிப்படுத்துகின்றன. 

uneven breasts

உங்களின் தனித்துவத்தை உணருங்கள்:

Advertisment

சம சீரற்ற மார்பகங்களை பற்றி உங்களின் கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு கீழே வரும் விஷயங்கள் உதவியாக இருக்கும்.

  1. உங்கள் மனநிலையை மாற்றங்கள்: உங்கள் தனித்துவத்தை உணர்ந்து அதை உங்கள் உடலின் அழகான ஒரு அம்சமாக பார்க்கத் தொடங்குங்கள்.
  2. முழு உடலிலும் கவனம் செலுத்துங்கள்: உங்களது மார்பகம் உங்கள் உடம்பில் ஒரு பகுதி மட்டும் தான். எனவே, அது உங்களின் மதிப்பை வரையறுக்காது.
  3. சுய கவனிப்பை(self care) பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உடலை நன்றாக உணர வைக்கும் சுய கவனிப்பு(self care) நடைமுறைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  4. உங்களுக்குப் பிடித்த உடைகளை அணியுங்கள்: எந்த உடை உடுத்தினால் நீங்கள் நம்பிக்கையுடன் தைரியமாக இருப்பீர்களோ அந்த உடைகளை தேர்ந்தெடுங்கள்.
  5. தேவைப்பட்டால் நிபுணர் ஆலோசனையை பெறுங்கள்: உங்களுக்கு இன்னமும் இதை பற்றிய சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் ஒரு நிபுணரை சந்தித்து இதை பற்றின தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மற்றவர்களுக்கும் இதைப் பற்றி சொல்லிக் கொடுங்கள்:

Advertisment

பெரும்பாலான பெண்களுக்கு சமமற்ற மார்பகங்கள் பற்றியே தெரிவதில்லை. இதைப் பற்றின முழுமையான தெளிவு இல்லாததால் சில சமயம் அதை மற்ற பெண்களுக்கும் நம்மால் எடுத்து சொல்ல முடிவதில்லை. அதனால் நீங்கள் இப்பொழுது இதைப்பற்றி தெரிந்து கொண்டதால் மற்ற பெண்களுக்கு சம சீரற்ற மார்பகங்கள் இயல்பான ஒன்றுதான் என்ற விழிப்புணர்வை பரப்புங்கள்.

uneven breasts

உங்கள் வாழ்க்கை துணையுடன் இதைப் பற்றி பேசுங்கள்:

Advertisment

பெரும்பாலும் சம சீரற்ற மார்பகங்களை உடைய பெண்கள் அவர்களின் உடலில் மீது நம்பிக்கை இல்லாமல் அதை அசிங்கமான ஒன்று என்றுதான் நினைக்கின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கை துணையோடு நெருக்கமான உறவில் இருக்கும் பொழுது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இப்படி தாழ்வு மனப்பான்மை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. இதைப் பற்றி பேசிக் கொள்வது: உங்களின் தாழ்வு மனப்பான்மையைப் பற்றி அல்லது நீங்கள் பயப்படும் விஷயங்கள் பற்றி உங்களின் வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக பேசுங்கள்.
  2. இணைப்பில் கவனம் செலுத்துங்கள்: உங்களின் உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உங்களின் உணர்ச்சி நெருக்கங்களுக்கு(emotional connection) கவனத்தை மாற்றங்கள்.
  3. உங்களின் வாழ்க்கை துணைக்கு இதை பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: சம சீரற்ற மார்பகங்களின் அழகை புரிந்து கொள்ளவும், அதை பாராட்டவும் உங்கள் துணைக்கு உதவுங்கள். பெரும்பாலான பெண்களுக்கே அவர்களின் உடல் பற்றிய புரிதல் இல்லாத பொழுது, ஆண்களுக்கு நிச்சயமாக இருக்காது. அதனால் உங்கள் வாழ்க்கை துணைக்கு இதைப்பற்றிய புரிதல்களை ஏற்படுத்துவது உங்களின் கடமையாகும்.



Suggested Reading: எச்சரிக்கை பெண்களே: மாதவிடாயின் அதிக இரத்தப்போக்கு ஆபத்தானது

Suggested Reading: Menopause சமயத்தில் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்

Suggested Reading: தவறான ப்ராக்களை(wrong bra size) அணிவதால் ஏற்படும் விளைவுகள்

Suggested Reading: மாதவிடாயின்(periods) போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

women health uneven breasts
Advertisment