Advertisment

Menopause சமயத்தில் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் Menopause கட்டத்தை சுலபமாக கடக்க முடியும். Menopause சமயத்தில் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
menopause transition

Image is used for representational purpose only

Menopause என்பது பெண்களுக்கு எளிதானது அல்ல. Menopause சமயத்தில் மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை, உடல் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடும். பெண்கள் எந்த நிலையிலும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது அவசியமானது. ஆனால், நீங்கள் இளம்வயதில் இருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழவில்லை என்றால் Menopause சமயத்தில் வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு ஆரோக்கியமாக வாழ தொடங்கலாம்.

Advertisment

நீங்கள் நிறைய வேலை செய்வது, வீட்டை மற்றும் குடும்பத்தை பார்த்துக் கொள்வது, வேலையை சமாளிப்பது போன்ற நிறைய விஷயங்களை செய்யலாம். அதனால், உங்கள் வாழ்க்கை முறையை சரியாக பார்த்துக் கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், menopause சமயத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பது அவசியம் ஆகிறது.

சில உணவுகள் உங்களின் menopause அறிகுறிகளை அதிகப்படுத்தலாம். திடீரென்று மெனோபாஸ் அறிகுறிகள் அதிகரித்து உங்களை தொந்தரவு செய்வதற்கு நீங்கள் சாப்பிடும் உணவு காரணமாக இருக்கலாம். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி உங்கள் அறிகுறிகளை குறைக்க உதவும். அதுமட்டுமின்றி இந்த மெனோபாஸ் நிலையை எந்த மருந்துகளும் இல்லாமல் உங்களால் கடக்க முடியும்.

menopause mood swings

Advertisment

மெனோபாஸ் சமயத்தில் தவிர்க்க வேண்டிய ஆறு உணவுகள்

1. காரமான உணவுகள்:

நம்மில் பலருக்கு காரமான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் பிடிக்கும். ஆனால், இந்த காரமான உணவுகள் உங்கள் உடல் சூட்டை அதிகரிக்க கூடும். இதனால் அதிகமான வேர்வை மற்றும் உடல் நிலையில் மாற்றத்தை நீங்கள் உணரலாம். எனவே, காரம் அதிகம் அல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உணவில் காரம் வேண்டும் என்றால் சீரகம், மஞ்சள் மற்றும் கருவேப்பிலை‌ போன்ற மசாலாக்களை சேர்த்துக் கொள்ளலாம்.

Advertisment

2. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: 

நம் அனைவருக்கும் பதப்படுத்தப்பட்ட பொருட்களான சிப்ஸ், குக்கீஸ், கேக்குகள், மேகி போன்ற பல விஷயங்கள் பிடிக்கும். ஆனால், இது போன்ற உணவுகளில் அதிக உப்பும், அதிகமான சக்கரையும் இருக்கிறது. இது இரண்டுமே நமது உடலுக்கு தீங்கானதாகும். அதனால் வீட்டில் செய்யப்பட்ட இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

menopause

Advertisment

3. ஃபாஸ்ட் ஃபுட்(fast food): 

பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. ஆனால், மெனோபாஸ் சமயத்தில் இதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இதில் அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல் கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகப்படுத்தி இதய நோய்களுக்கு வழி வகுக்கிறது. மெனோபாஸ் முடிந்த பிறகு சாதாரணமாகவே இது போன்ற இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். ஆனால், இது போன்ற உணவுகள் அதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது.

4. ஆல்கஹால்(alcohol): 

Advertisment

ஆல்கஹால் உடலின் வெப்பநிலையையும், இதய நோய்களையும் அதிகரிப்பதால் அது ஆரோக்கியமற்றது. வேண்டுமானால், white wine போன்ற குறைந்த ஆல்கஹால் உள்ள பானத்தை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். 

5. Caffeine: 

தினமும் காலையில் ஒரு கப் காபியுடன் உங்கள் நாளை ஆரம்பிக்கிறீர்களா? காபியில் உள்ள caffeine உங்களின் மெனோபாஸ் அறிகுறிகளை மோசமடைய செய்யலாம். தினமும் காபி குடிக்கும் பெண்கள் தான் அதிகப்படியான மெனோபாஸ் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள் என்றும் அதிகமாக காபி எடுத்துக் கொள்ளாத பெண்கள் இதுபோன்ற அறிகுறிகளை பெரிதாக அனுபவிப்பதில்லை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக நீங்கள் இஞ்சி டீ அல்லது மிளகு டீ எடுத்துக் கொள்ளலாம்.

Advertisment

menopause consultation

6. கொழுப்பு நிறைந்த இறைச்சி:

அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கும் பொழுது அதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். கொழுப்பு நிறைந்த இறைச்சியை விட கொழுப்பு கம்மியாக உள்ள இறைச்சி சிறந்தது. பன்றி இறைச்சி, பன்றியில் வயிற்றுப் பகுதி, கோழி தோடைகள் ஆகியவை அதிக கொழுப்பு உள்ளவை ஆகும். இது உங்கள் உடம்பில் உள்ள கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். இதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் அதிகரிக்கும். எனவே, மீன், கோழி மார்பகம் போன்ற இறைச்சிகளை நீங்கள் உண்ணலாம்.

Advertisment

இது போன்று நமது வாழ்க்கையில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தினால் மெனோபாஸ்(menopause) நிலையை சுலபமாக கடக்க முடியும்.

 

Suggested Reading: Menopauseஇன் மூன்று கட்டங்கள் மற்றும் அதன் அறிகுறிகள்

Suggested Reading: மாதவிடாய் வலியை(period cramps) போக்கும் 6 சாறுக்கள்

Suggested Reading: மாதவிடாயின்(periods) போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

Suggested Reading: 5 வகையான வெள்ளைப்படுதல் மற்றும் அதற்கான அர்த்தம்

 

women health menopause
Advertisment