Advertisment

Menopauseஇன் மூன்று கட்டங்கள் மற்றும் அதன் அறிகுறிகள்

பல பெண்களுக்கு மெனோபாஸ் பற்றிய விழிப்புணர்வு கிடையாது. இந்த செய்தி தொகுப்பில் மெனோபாஸின்(menopause) கட்டங்கள் மற்றும் அதன் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் என அனைவரும் மெனோபாஸ் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

author-image
Devayani
New Update
menopause

Image is used for representational purpose only

மெனோபாஸ்(menopause) என்பது வயதாவதற்கான உடலில் நடக்கும் செயல்முறையாகும். 12 மாதங்கள் உங்களுக்கு மாதவிடாய் முற்றிலும் நின்று விட்டால் நீங்கள் மாதவிடாய் நிறுத்தத்தை அடைகிறீர்கள். மெனோபாஸ் பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் நிகழ்கிறது. மெனோபாஸ் இரண்டு வகையாக உள்ளது. ஒன்று வயது காரணமாக ஏற்படும் இயல்பான மாற்றம் ஆகும் மற்றொன்று அறுவை சிகிச்சை மெனோபாஸ் (கருப்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுவது). மெனோபாஸ் அனுபவங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு மாதிரி இருக்கும். சிலர் அதை அதிகம் உணராமல் இருக்கலாம் அல்லது லேசான அறிகுறிகளுடன் குணமாகலாம். ஆனால். சில பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் கடப்பது கடினமாக கூட இருக்கக்கூடும்.

Advertisment

Peri menopause, menopause, post menopause என்று மூன்று கட்டங்கள் உள்ளது.

பெரி மெனோபாஸ்(peri menopause):

பெரி மெனோபாஸ் என்பது உங்கள் மாதவிடாயை நிறுத்துவதற்கு ஏற்படும் கட்டமாகும். உங்களின் ஈஸ்ட்ரோஜனின்(estrogen) அளவு குறைந்து மாதவிடாய் சுழற்சி கணிக்க முடியாததாக இருக்கும். இந்த நிலை சில ஆண்டுகளுக்கு நீடிக்க கூடும் மற்றும் உங்களுக்கு உடல் வெப்பநிலை அதிகரிப்பு, வறட்சி, ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கமின்மை போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்

Advertisment

menopause hot flash

மெனோபாஸ்(menopause):

இந்தக் கட்டத்தில் பெண்களுக்கு தொடர்ந்து 12 மாதம் மாதவிடாய் வராமல் நிற்கும். கருப்பை முட்டைகளை உற்பத்தி செய்வதை இந்த கட்டத்தில் நடத்துகிறது. மேலும் இந்த கட்டத்தில் பெண்களால் கர்ப்பமாகவும் முடியாது. மெனோபாஸ் இனப்பெருக்க வயதின் முடிவை குறிக்கிறது. இந்த கட்டத்தில் ஈஸ்ட்ரோஜன்(estrogen) அளவு கடுமையாக குறைகிறது மற்றும் ஈஸ்ட்ரோஜன் குறைவால் உடல் பல அறிகுறிகளை காட்டுகிறது. உடல் வெப்பநிலை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள் அல்லது சிறுநீர்ப்பை பிரச்சனைகள் ஆகியவை இந்த மெனோபாஸ் காலத்தில் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

Advertisment

போஸ்ட் மெனோபாஸ்(post menopause):

போஸ்ட் மெனோபாஸில் அறிகுறிகள் குறையும். ஆனால், எலும்பு மற்றும் இதய நோய்கள், எலும்பு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலை மாதவிடாய் முடிந்த பிறகு தொடங்கி வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

menopause mood swings

Advertisment

சில சந்தர்ப்பங்களில் முக்கியமான நோய் எதிர்ப்பு குறைபாடு, மரபணு பிரச்சினை, முன்கூட்டியே கருப்பை செயலிழப்பு மற்றும் கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதன் மூலம் மெனோபாஸ் முன்கூட்டியே ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்படுவதால் கருப்பை புற்று நோய் ஏற்படுவதற்கு அபாயம் உள்ளது. அதனால்,மெனோபாஸ் கட்டத்தில் நிறைய கவனம் தேவை மற்றும் மருத்துவரிடம் பேசுவதும், அறிகுறிகளை நிறுத்துவதற்கு சரியான வழிகாட்டுதலை பெறுவதும் முக்கியம்.

அனைவரும் மாதவிடாய் பற்றியும் மெனோபாஸ் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. 45 வயதை நெருங்கும் பெண்களுக்கு மெனோபாஸினால் இது போன்ற அறிகுறிகள் தோன்றும். நம் உடலில் நடக்கும் செயல்பாடுகளை பற்றி தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு நாம் வாழ்வதற்கு சுலபமாக இருக்கும். எனவே, உங்களுக்கு தெரிந்த பெண்களுடன் இந்த செய்தி தொகுப்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Advertisment

Suggested Reading: மாதவிடாய் வலியை(period cramps) போக்கும் 6 சாறுக்கள்

Suggested Reading: மாதவிடாயின்(periods) போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

Suggested Reading: 5 வகையான வெள்ளைப்படுதல் மற்றும் அதற்கான அர்த்தம்

Advertisment

 

menopause
Advertisment