பெண்களின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வதற்கு வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு வைட்டமின்களில் உள்ள சத்துக்கள் மற்றும் அவை எப்படி நம் உடலை மேம்படுத்துகிறது என்பதை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வைட்டமின் ஏ:
ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதற்கு வைட்டமின் ஏ பெரிய அளவில் உதவுகிறது. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் ஏ கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களையும், மெல்லிய கோடுகளையும் குறைக்க உதவுகிறது.
வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்:
பெண்களின் ஆற்றலுக்கு(energy) வரும் பொழுது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் முக்கிய இடத்தை பெறுகிறது. இந்தக் குழுவில் B1, B2, B3, B5, B6, B7(biotin), B9(folate) ஆகியவை அடங்கும். இந்த வைட்டமின்கள் நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்றுவதற்கும், மூளையின் செயல்பாட்டை ஆதரிப்பதற்கும், முடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் சி:
வைட்டமின் சி ஆன்டிஆக்சிடென்ட்(antioxidants) நிறைந்தது. இது உங்கள் சருமத்தை முன்கூட்டியே முதிர்ச்சி அடைய செய்யும் பொருட்களிடமிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க கூடியது. சருமத்தை பிரகாசமாகுகிறது மற்றும் ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை அளிக்கக் கூடியது. அதுமட்டுமின்றி வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.
வைட்டமின் டி:
வைட்டமின் டி உங்கள் மனநிலையை மேம்படுத்தும். சூரிய ஒளி வைட்டமின் என்று அழைக்கப்படும் வைட்டமின் டி நமது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் அவசியமானது. அது நமது மனநிலையை சீராக்க உதவுகிறது மற்றும் மன ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் வைட்டமின் டி நமது உடலில் கால்சியம் அளவை பார்த்துக் கொள்வதற்கு உதவுகிறது. வைட்டமின் டி உங்கள் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
வைட்டமின் ஈ:
வைட்டமின் ஈ உங்கள் சருமத்தை சுற்றுச்சூழல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இது சருமத்தை வறட்சியை அடைவதில் இருந்து தடுத்து மிருதுவான சருமத்தை அளிக்கிறது. வைட்டமின் ஈ உங்கள் முடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இரும்பு சத்து:
இரும்பு சத்து நமது உடலில் ஆற்றலை அதிகரிப்பது மட்டுமில்லாமல் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. இது பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய இரும்பு சத்து குறைபாடு, இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. இது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்கிறது.
கால்சியம்:
வலுவான எலும்புகளின் வளர்ச்சிக்கும், பராமரிப்பிற்கும் கால்சியம் அவசியம். தசை செயல்பாடு, நியூரானின் பரிமாற்றம் மற்றும் இரத்தம் உறைதலை தடுக்க இது அவசியமாகிறது. பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்க போதுமான கால்சியம் எடுத்துக் கொள்வது முக்கியமாகிறது.
மெக்னீசியம்:
மெக்னீசியம் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தை ஊக்குவிக்கிறது. மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்புகளையும் மற்றும் சீரான மனநிலையையும் பார்த்துக் கொள்ள பங்களிக்கிறது.
பயோட்டின்(Biotin):
வைட்டமின் B7 என்றும் அழைக்கப்படும் பயோடின் ஆரோக்கியமான முடி, தோல் மற்றும் நகங்களை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது கெரட்டின்(keratin) உற்பத்தியை அதிகரிக்கிறது. உங்கள் முடி மற்றும் நகங்களை வலுவாகவும், பலபலப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. பயோடின் சருமத்திற்கு ஊட்டம் அளித்து அதன் இளமை தோற்றத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
ஃபோலேட்(Folate):
வைட்டமின் B9 என்று அழைக்கப்படும் ஃபோலேட் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியமானது. இது சரியான கரு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் சில பிறப்பு கோளாறுகளை தடுக்க உதவுகிறது. ஃபோலேட் இரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கு வகிக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
பெண்களின் ஆரோக்கியத்தில் ஒவ்வொரு வைட்டமினும் வெவ்வேறு வேலைகளை செய்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள உதவுகிறது. அதனால், பெண்கள் கண்டிப்பாக அனைத்து வைட்டமின்களையும் அவர்களின் அன்றாட உணவுகளில் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. இது அவர்களின் நல்வாழ்விற்கு வழிவகுக்கிறது.
Suggested Reading: எச்சரிக்கை பெண்களே: மாதவிடாயின் அதிக இரத்தப்போக்கு ஆபத்தானது
Suggested Reading: Menopause சமயத்தில் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்
Suggested Reading: தவறான ப்ராக்களை(wrong bra size) அணிவதால் ஏற்படும் விளைவுகள்
Suggested Reading: மாதவிடாயின்(periods) போது தவிர்க்க வேண்டிய உணவுகள்