எடப்பாடியில் சாதாரண நடத்தட குடும்பத்தில் மூன்று மகள்களுள் மூத்தவராக பிறந்தவர் ஸ்ரீதேவி. சிறுவயதிலிருந்தே அவரின் பெற்றோர்கள் ஸ்ரீதேவியை சுதந்திரமாக இருக்கும் படி வளர்த்துள்ளனர். பள்ளி படிப்பை முடித்த பிறகு கல்லூரியில் சேர்வதற்காக அவர் சென்னை வந்துள்ளார். சென்னை அவருக்கு புதிதான ஒரு இடம் என்பதாலும், அவருடன் படிப்பவர்கள் அவரை நிறத்தை வைத்தும், உருவத்தை வைத்தும் கேலி செய்ததாலும் அவருக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாகவே இருந்தது.
அதன் பிறகு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி அவரை மெருகேற்றி கொள்வதற்கான விஷயங்களை செய்ய ஆரம்பித்தார். படிப்பில் மட்டுமில்லாமல் மற்ற விஷயங்களிலும் கலந்து கொண்டார். இப்படி நிறைய விஷயங்களை முயற்சித்து பார்க்கும் பொழுது தான் அவருக்கு அழகு கலையின் மீது ஆர்வம் இருந்ததை கண்டறிந்தார்.
ஆனால், வீட்டில் அவர் இதைப் பற்றி சொல்லும் பொழுது பெரிதும் யாரும் இந்த தொழிலை மதிக்கவில்லை. ஸ்ரீதேவி makeup கற்றுக் கொள்வதற்கு முன்பே பியூட்டிஷியன் பற்றி தெரிந்து கொண்டு அதை செய்ததால் அவருக்கு இந்த தொழிலில் எதிர்ப்பு அதிகமாக இருந்தது.
அதன் பிறகு ஆறு மாதங்கள் பிடிவாதமாக இருந்து தனக்கு பிடித்த விஷயத்தை செய்ய ஆரம்பித்தார். சிறுவயதிலிருந்து தான் எடுக்கும் முடிவு சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அதை சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் நபராகவே இருந்தார். Makeup Artistஆக இருக்கும் பெண்களை இந்த சமூகம் தவறாகவே நினைக்கிறது. அப்படித்தான் ஸ்ரீதேவி இந்த தொழில் செய்யப் போகிறேன் என்று சொல்லும் பொழுதும் பலர் இந்த எண்ணத்தை தவறு என்று கூறியுள்ளனர். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்த விஷயங்களை அவர் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்.
ஒரு விஷயத்தை நாம் சாதிக்க வேண்டும் எனில் அதற்காக பல விஷயங்களை இழக்கக்கூடும். ஸ்ரீதேவி ஒரு காதல் உறவில் இருந்துள்ளார். ஆனால் அவர் இந்த தொழிலுக்கு வரும் பொழுது அந்த நபர் இவரை ஆதரிக்கவில்லை. மேலும் இந்த தொழில் பற்றியும் அவதூறாக பேசியதால் ஸ்ரீதேவி தனது தொழில்தான் முக்கியம் என்று எண்ணி அந்த உறவிலிருந்து விலகி உள்ளார். அதன் பிறகு ஆறு மாதங்கள் பணரீதியாக கஷ்டப்பட்ட பிறகு தான் அவர் தொழில் வளர ஆரம்பித்தது.
சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்தினால் இன்று நாம் முன்பை விட சுலபமாக முன்னேற முடியும். அப்படி ஸ்ரீதேவி சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்தி தனது திறமைகளை அதில் பதிவிட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். மேலும் பல பெண்களுக்கு ஒரு ஊக்கமாக இருந்து வருகிறார்.
இவரின் பக்கபலமாக அவரின் கணவர் நவீன் இருக்கிறார். ஸ்ரீதேவியையும், அவரின் தொழிலையும் புரிந்து கொண்டு ஸ்ரீதேவியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். ஸ்ரீதேவி பதிவிடும் அனைத்து விஷயங்களுக்குப் பின்னாலும் அவரின் கணவரின் உழைப்பும் இருக்கிறது. அவரின் கணவர் ஒரு போட்டோகிராபர் என்பதால் அவரும் இந்தத் தொழிலுக்காக நிறைய உதவிகள் செய்து ஸ்ரீதேவிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.
இன்று நிறைய பேர் Makeup Artist ஆக இருந்து அவர்களின் திறமைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். அதற்கான போட்டிகளும் தற்போது அதிகமாகவே உள்ள நிலையில் நாம் தனித்துவமாக ஏதாவது செய்தால் மட்டுமே மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க முடியும். அப்படி இருக்க ஸ்ரீதேவியின் தனித்துவமான SFX மேக்கப்கள் இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. ஹாலிவுட்டில் இருக்கும் கதாபாத்திரங்களை தத்ரூபமாக மேக்கப்பில் கொண்டு வந்து அவரின் தனித்திறமையையும் அவர் நிரூபித்துள்ளார்.
ஆரம்பத்தில் தன்னை இந்த கலையில் மெருகேற்றிக் கொள்வதற்காக சுயமாக கற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் பல மாஸ்டர் கிளாஸ்களுக்கு சென்று தனது திறமையை வளர்த்துக் கொண்ட நபர் இன்று பல பெண்களுக்கு அகாடமி மூலம் கற்றுத் தரும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
நம் சமூகத்தில் உருவக் கேலிகளும், நிறத்தை பற்றிய கேலிகளும் நிறையவே உள்ளது. அதனாலேயே பலருக்கு தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடுகிறது. இப்படி தாழ்வு மனப்பான்மையுடன் மற்றவர்களின் கேலிகளை நினைத்துக்கொண்டு தங்களின் திறமையை காட்ட தயங்குபவர்களுக்கு ஸ்ரீ தேவியின் வாழ்க்கை பயணம் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். ஏனெனில், இவர் இது போன்ற பல கேலிகளை கடந்து தற்பொழுது கேலி செய்தவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
Suggested Reading: சண்முக பிரியா Unique Threads Sarees தொடங்கிய கதை
Suggested Reading: Celebrity Designer Abarnaவின் வாழ்க்கை பயணம்
Suggested Reading: விவாகரத்து ஆன பிறகு Project Kintsugi ஆரம்பித்த Indu
Suggested Reading: மகளுக்காக நஞ்சு வாய்ந்த திருமண உறவிலிருந்து வெளியே வந்த Varnika Shukla