Advertisment

Celebrity Designer Abarnaவின் வாழ்க்கை பயணம்

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் தான் நம்மை வலிமையானவராய் மாற்றுகிறது. அப்படித்தான் அபர்ணாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவாக அவர் ஆரம்பித்த தொழில் தற்பொழுது வெற்றியடைந்துள்ளது. அவரின் வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
abarna celebrity stylist

Images are used from Abarna's Instagram handle

Celebrity Designer அபர்ணா வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். அவரின் வாழ்க்கை பயணம் பற்றி SheThePeople Tamil உடன் பகிர்ந்து கொண்டார். இவரின் வாழ்க்கை பயணம் பல பெண்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கக்கூடும்.

Advertisment

"12 ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஐடியாவே இல்லை. அதன் பிறகு BCA படிக்கலாம் என முடிவு எடுத்தேன். எனது அண்ணன் BCA படித்ததால் என் தாய் என்னை B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்குமாறு கூறினார். அதனால் நானும் B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது எனது தோழிகள் டெய்லரிங் கிளாஸ் சென்றார்கள், நானும் சும்மா தான் இருக்கேன் என்று அவர்களுடன் டைலரிங் கிளாஸ் செல்ல ஆரம்பித்தேன். எனக்கு நன்றாக தைக்க வந்தது. அதனால் அதை நான் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். வீட்டிலேயே சின்ன சின்ன ஆர்டர்கள் எடுத்து தைத்த கொண்டிருந்தேன்.

fashion designer abarna

முதல் டிகிரி தான் தாய் சொன்னது போல படித்தோம், இரண்டாவது டிகிரி எனக்கு பிடித்த மாதிரி படிக்க வேண்டும் என்று நிறைய தேடி பார்த்தேன். அப்பொழுது எனக்கு M.Sc சைக்காலஜி படிக்கலாம் என்று தோன்றியது. அதை வீட்டில் கூறிய போது அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை, வேறு ஏதாவது பார் என்று கூறினார்கள். ஒரு நாள் நாங்கள் அனைவரும் கலந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் அண்ணன் என்னை நீ கிரியேட்டிவா யோசிக்குற, நீ ஏன் பேஷன் டிசைனிங் படிக்க கூடாது என்று கேட்டார். அது எனக்கும் சரி என்று பட்டதால் பேஷன் டிசைனிங் சேர்ந்தேன்.

Advertisment

பேஷன் டிசைனிங் சேர்ந்த கொஞ்ச நாட்களில் எனக்கு திருமணம் ஆனது. அதனால் பேஷன் டிசைனிங் படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தி விட்டேன். ஒரு கட்டத்தில் இந்த திருமண வாழ்க்கை நிலைக்காது என்பதை நான் உணர்ந்தேன். அப்பொழுதுதான் அந்த வீட்டிலிருந்து நான் வெளியே போகும் போது சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். பேஷன் டிசைனிங்கில் எனக்கு பிடிக்காதது Boutique வைப்பது தான். ஆனால் அந்த சமயத்தில் என்னை நம்பி ஆர்டர்கள் கொடுக்க நிறைய பேர் இருந்தார்கள். ஆனாலும் நான் தான் அதை எடுப்பதற்கு தயங்கிக் கொண்டிருந்தேன். நான் அந்த வீட்டை விட்டு வெளியேற போகிறேன் என்று முடிவெடுத்த பொழுது வேறு வேலை எதுவும் கிடைக்காது என்பதால் இந்த தொழிலை தொடங்கலாம் என முடிவெடுத்தேன்.

abarna celebrity stylist

எனது நண்பர் ஸ்டிச்சிங் யூனிட் வைத்திருந்ததால் அவரிடம் கலந்தாலோசித்த பிறகு அவர் என்னை ஆர்டர்களை எடு நம்ம யூனிட்டில் தைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அதன் பிறகு தான் ஆர்டர்களை எடுக்க ஆரம்பித்தேன். இதை ஆரம்பித்த ஒரு வருடத்திற்கு நான் எனது புகுந்த வீட்டில் தான் இருந்தேன். அதன் பிறகு ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்து இது வேண்டாம் என்று வெளியேறினேன்.

Advertisment

அதன் பிறகு ஒரு மூன்று நாட்கள் அம்மா வீட்டில் இருந்தேன். பிறகு மீண்டும் சென்னைக்கு வந்தேன். சென்னையில் தான் என் நண்பரின் யூனிட் இருக்கிறது, அதே போல் எனக்கு தேவையான பொருட்களும் சென்னையில்தான் கிடைக்கும் என்பதால் தொழிலை சென்னையிலேயே செய்யலாம் என்று எண்ணி சென்னைக்கு வந்தேன். அப்பொழுது டிக் டாக்யிலும் எனக்கு நிறைய ஆதரவு இருந்தது. அப்பொழுது Roposo என்று ஒரு செயலி இருந்தது. அதில் தினமும் ஒரு வீடியோ பதிவிட்டால் நூறு ரூபாய் வரை கிடைக்கும். அந்த பணத்தை சேர்த்து வைத்து எனது வண்டிக்கு பெட்ரோல் போட்டுக் கொள்வேன்.

அதைப்போல் இரண்டு, மூன்று Designing Instituteஇல்  நான் internship செய்தேன். அதிலிருந்து கிடைத்த பணம் எனக்கு உபயோகமாக இருந்தது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமா ஆர்டர்களை எடுக்க ஆரம்பித்தேன். மாதத்திற்கு இரண்டு, மூன்று ஆர்டர் வந்து கொண்டிருந்தது. அது மாறி வாரத்திற்கு இரண்டு, மூன்று ஆர்டர்கள் வர ஆரம்பித்தது.

abarna celebrity designer

Advertisment

இரண்டு வருடங்களாகிவிட்டதால் அதன் பிறகு காத்திருக்க வேண்டாம் என்று எண்ணி சொந்தமாக stitching unit ஆரம்பிக்கலாம் என முடிவு எடுத்தேன். அப்பொழுது நடிகை குஷ்பூ அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். நான் உனக்கு நிறைய ஆர்டர்கள் தருகிறேன் நீ stitching unit ஆரம்பி என்று குஷ்பூ அவர்கள் ஆதரவு அளித்தார். ஸ்டிச்சிங் யூனிட் ஆரம்பித்த பிறகு ஒரே ஒரு மாஸ்டர் மட்டும்தான் வேலைக்காக இருந்தார். அதன் பிறகு பிளவுஸ் ஆர்டர்கள் நிறைய வர ஆரம்பித்ததால், எனக்கும் வெளியிலும் வேலைகள் அதிகரித்ததால் ஒருவரை வேலைக்காக எடுத்தோம். அதன் பிறகு ஆர்டர் அதிகரிக்க ஆரி ஒர்க் செய்பவர், டைலர், உதவிக்காக இன்னொருவர் என தற்போது ஐந்து பேர் வேலை செய்து கொண்டிருக்கிறோம்."

அபர்ணா பேஷன் டிசைனிங் பற்றியும் தொழில் தொடங்குவதற்காக சில ஆலோசனைகளையும் Thuglife Thalaivi என்ற podcastஇல் பகிர்ந்து கொண்டார். அவர் பகிர்ந்து கொண்ட பயனுள்ள தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click here: From zero investment to Celebrity Designer - Abarna | Fashion Designer | Celebrity Stylist

Advertisment

 

 

Suggested Reading: விவாகரத்து ஆன பிறகு Project Kintsugi ஆரம்பித்த Indu

Advertisment

Suggested Reading: மகளுக்காக நஞ்சு வாய்ந்த திருமண உறவிலிருந்து வெளியே வந்த Varnika Shukla

Suggested Reading: சாதிக்க வேண்டும் என்ற வெறி சுகிதாவின்(sugitha) வாழ்க்கையை மாற்றியது

Suggested Reading: பாலின பாகுபாட்டை உடைத்த Isaivani

inspiring story Celebrity Designer Abarna fashion designer
Advertisment