Advertisment

பாலின பாகுபாட்டை உடைத்த Isaivani

பெண்களால் முடியாது என்று கூறுவதை பல பெண்கள் செய்து காட்டி வருகின்றனர். அப்படி இசைவாணியும் பெண்களாலும் கானா பாடல்கள் பாட முடியும் என்று நிரூபித்துள்ளார். அவரை தொடர்ந்து பல பெண்கள் கானா பாடல் பாட ஆரம்பித்துள்ளனர். 

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
gaana singer isaivani

Image of Isaivani

சென்னையில் ராயபுரத்தில் இசைவாணி பிறந்து வளர்ந்துள்ளார். அவரின் தந்தைக்கு அவர் பிள்ளைகளை பாடகராக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனாலேயே குழந்தைகள் பிறக்கும் முன்பே ஆண் குழந்தையாக இருந்தால் இசைவாணன் என்றும் பெண் குழந்தையாக இருந்தால் இசைவாணி என்றும் பெயர் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அவரின் தந்தை சிவகுமாரும் மேடைகளில் இசைக்கலைஞராக இருந்தார். அதனால் இசைவாணி ஆறு வயது இருக்கும் போதிலிருந்து தனது தந்தையுடன் மேடை நிகழ்ச்சிகளுக்கு சென்று பாடி வந்தார்.

Advertisment

18 வருடங்களாக நிறைய லைட் மியூசிக் நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். வீட்டிற்கு அருகில் இறந்தவர்களுக்கு கானா பாடல்கள் பாடும் போது அவற்றை கண்டு இசைவாணி வியந்துள்ளார். ஒருமுறை திண்டிவனத்தில் நிகழ்ச்சிக்காக சென்றிருந்த பொழுது அங்கு பலர் கானா பாடல் பாட சொல்லி கேட்டனர். ஆனால் அங்கு இருந்த யாருக்கும் கானா பாடல் பாட தெரியாது என்பதால் இசைவாணி முன்வந்து அவர் பாடுவதாக சொன்ன பொழுது சிலர் உன்னால் முடியுமா என்று கேட்டுள்ளனர். அப்பொழுது அவர் என்னால் முடியும் என்று சொல்லி கானா பாடல் பாட ஆரம்பித்தார். அதற்கு மக்கள் நல்ல வரவேற்பு தந்தனர்.

இவர் நிகழ்ச்சிகளில் கானா பாடல்கள் பாட ஆரம்பித்த பிறகு அவருக்கென ஒரு அடையாளம் கிடைத்தது. ஏனென்றால் இதற்கு முன் பெண்கள் கானா பாடல் பாடி யாரும் கேட்டது இல்லை. இசைவாணி தான் முதன் முதலில் கானா பாடல் பாடி மக்கள் கேட்டதால் அனைவரும் அதை விரும்பி ரசித்தனர். பிறகு Casteless Collective என்ற ஒரு bandஇல் அவர் சேர்ந்தார். அந்த bandஇல் சொந்தமாக பாடல் வரிகளை எழுதி, சமூகத்தின் நன்மைக்காக பாடல்களை வெளியிட்டனர். இந்த bandஇல் தான் குக்கூ குக்கூ பாடல் ஆசிரியர் அறிவும் இருந்துள்ளார்.

female gaana singer isaivani

Advertisment

இந்த bandஇல் இசைவாணி பாட ஆரம்பித்த பிறகு இவருக்கு திரைப்படங்களில் பாடுவதற்காக வாய்ப்புகளும் வந்தது. கலைஞர் டிவி, கலர்ஸ் டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கு பெற்றுள்ளார். இவரில் bandஇல் ட்ரம்ஸ் வாசித்த ஒருவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தில் இவருக்கு ஆதரவு கிடைக்காததால் விவாகரத்து ஆனது. 

சிறுவயதில் இருந்தே பல தடைகளையும், பாகுபாடுகளையும் கடந்து தான் இவர் பாடகி ஆகியிருக்கிறார். அதனாலேயே அவருக்கு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கருத்துள்ள கானா பாடலை பாடுவதில் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. மேலும் அவர் Light Music நிகழ்ச்சிகளில் பாடகியாக இருந்ததால் இரவு நேரங்களில் நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். அதனால் பல எதிர்மறையான கருத்துக்களை இவர் கேட்டுள்ளார். அதேபோல் கானா பாட ஆரம்பித்த போது பல ஆண்கள் இவரை பெண்கள் கானாப்படக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். ஆனால் இவரின் பெற்றோர்களின் ஆதரவு இருந்ததால் தனக்கு பிடித்ததை எந்த பயமும் இல்லாமல் செய்து வருகிறார்.

isaivani gaana singer

Advertisment

அவர் Casteless Collective bandஇல் சேர்ந்த பிறகு வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. முன்பு கூறியது போலவே அதன் மூலமாக படத்தில் பாடுவதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. பெண்களால் குறிப்பிட்ட விஷயங்கள் தான் செய்ய முடியும் என்று இந்த சமூகம் சொல்லுகிறது. ஆனால் பெண்கள் நினைத்தால் நிறைய விஷயங்களை வெற்றிகரமாக செய்வார்கள் என்றும் இசைவாணி நிரூபித்துள்ளார். இவர் கானா பாட ஆரம்பித்த பிறகு நிறைய பெண்கள் கானா பாடி வருகின்றனர். தற்போது கானா பாடும் மற்ற பெண்களுக்கு இசைவாணி முன் உதாரணமாக இருக்கிறார்.

பிபிசி நடத்திய டாப் 100 நம்பிக்கை பெண்கள் பட்டியலில் முதல் முறையாக இசைவாணி தான் இடம் பிடித்திருந்தார். எட்டு வருடங்களாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த எந்த பெண்ணும் அதுவரை தேர்வு செய்யப்படவில்லை. சிறுவயதில் இருந்து அவர் எதிர்கொண்ட கஷ்டங்களுக்கும், பாகுபாடுகளுக்கும் இது சிறந்த பரிசாகவே இருந்தது. இவர் பிக் பாஸ் சீசன் மூன்றிலும் பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு கூறும் ஆலோசனை:

Advertisment

எதற்கும் பயப்படாதீர்கள். நாம் ஏதாவது ஒரு விஷயம் செய்தால் ஒரு பத்து தடவையாவது அதை செய்யலாமா வேண்டாமா,  அவங்க இப்படி சொல்லுவாங்க, இவங்க இப்படி சொல்லுவாங்க என்று யோசிப்போம். அவர்களுக்கு சொல்வது தான் வேலை. அதனால் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். என்னைக் கூட நிறைய பேர் பாடாத என்று சொல்லி இருக்கிறார்கள். நான் அவர்கள் பேச்சைக் கேட்டு வீட்டில் இருந்தால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. அதனால் எதற்கும் பயப்படாமல் உங்களுக்கு தோன்றுவதை செய்யுங்கள் என்று பெண்களுக்காக ஆலோசனை கூறுகிறார்.

 

Suggested Reading: பெண்களுக்கு தேவையான பத்து வைட்டமின்கள்(vitamins)

Advertisment

Suggested Reading: சம சீரற்ற மார்பகங்கள்(uneven breasts) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Suggested Reading: பெண்களின் மன அழுத்தத்திற்கான(depression) தீர்வுகள்

Suggested Reading: மாதவிடாய் வலியை(period cramps) போக்கும் 6 சாறுக்கள்

female gaana singer inspiring story Isaivani
Advertisment