வர்ணிகா சுக்லா(Varnika Shukla) தனது கணவர் ஒரு ஆணாதிக்கவாதியாகவும் மற்றும் abusiveஆகவும் இருந்ததை உணர்ந்த போது வாழ்க்கையில் கடுமையான ஒரு முடிவை எடுத்தார். ஒரு நஞ்சு வாய்ந்த திருமண உறவில் இருந்து வெளியேறுவது வர்ணிகாவிற்கு எளிதானது அல்ல. ஆனால், தனக்காகவும், தனது மகளுக்காகவும் அவர் இந்த முடிவை எடுத்தார்.
முன்னாள் Mrs India வர்ணிகா சுக்லா SheThePeople உடன் தனது வாழ்க்கை கதையை பகிர்ந்து கொண்டார். மேலும், அவரது திருமணம், நஞ்சு தன்மையுள்ள குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவு, தனியாக குழந்தையை வளர்ப்பது மற்றும் பெற்றோரின் ஆதரவு, அழகு போட்டிகளில் பங்கு பெற்ற அனுபவம் இதனைப் பற்றிய பகிர்ந்து கொண்டார்.
"2012ல் நான் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டேன். அப்பொழுது வாழ்க்கை எனக்காக என்ன வைத்திருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. என் கணவர் கிராமப்புறத்தில் வளர்ந்தவர் மற்றும் படிக்காத குடும்பத்தில் வளர்ந்தவர். ஆனால், இந்த திருமண உறவை என்னால் நன்றாக மாற்ற முடியும் என்று நான் நம்பினேன்.
இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல என் கணவர் அவர் தோன்றியது போல் இல்லை என்பதை உணர்ந்தேன். அவர் என்னை நம்பவில்லை. ஒரு வாக்குவாதத்தில் தோற்றால் தனக்குத்தானே தீங்கு விளைவிப்பாராக இருந்தார். நான் கர்ப்பமாக இருந்த பொழுது அவர் வேலைக்காக லண்டன் சொல்ல வேண்டி இருந்தது. அப்பொழுது என்னை என் தாய் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். அவரின் தாய் என்னை பார்த்துக் கொள்வதற்காக வருவதாகவும் அவர் உறுதி அளித்தார். ஆனால் என்னை பார்த்துக் கொள்வதற்கு யாரும் வரவில்லை. முதல் கற்பகாலத்தில் நான் தனியாக இருந்தேன். ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தேன். அதன் பிறகு தான் எல்லாம் மாற தொடங்கியது.
எனது கணவரும், அவரின் வீட்டில் இருப்பவர்களும் பெண் குழந்தை பெற்றெடுத்ததால் என்னை வஞ்சிக்க தொடங்கினர். எனது மகள் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு அழகான விருந்தை ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால், எனது கணவருக்கு அது பிடிக்கவில்லை. அப்பொழுது அவர் என்னை முதல் முறையாக அடித்தார். எனது குழந்தைக்காக தான் நான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு நாள் எனது மகளையும் அவர் தாக்கினார். அப்பொழுதுதான் நான் இதை பொறுத்துக் கொள்ள கூடாது என்று எண்ணி 2016ல் அவரை விட்டு பிரித்தேன்.
எனது மகள் தந்தை இல்லாமல் வளர்ந்தால் அவளுக்கு ஒரு அடையாளம் இல்லை என்ற எண்ணம் என்னை வாடியது. நான் எனக்காக ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அப்பொழுதுதான் 2017ல் ஒரு போட்டியில் பங்கு பெற முடிவு எடுத்தேன். பழைய எண்ணங்கள் கொண்ட எனது பெற்றோர்களை என்னை அழகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கும்படி சமாதானப்படுத்தினேன். குழந்தை பெற்ற ஒரு பெண்ணாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்க நான் எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று அவர்களிடம் சொன்னேன்.
அதே வருடம் நான் Plus Size மாடலிங் போட்டியில் கலந்து கொண்டு பிரயாக்ராஜின் முதல் Plus Size மாடலானேன். 2018ல் நான் Mrs India அழகு போட்டியில் கலந்து கொண்டேன் மற்றும் அந்த கிரீடத்தையும் வென்றேன். எனக்கு அந்த கிரீடம் சூட்டப்பட்ட போது என் வாழ்க்கையில் நான் அனுபவித்த கஷ்டங்கள் தான் என்னை இதை சாதிக்கும் அளவிற்கு வலிமையாகியது என்பதை உணர்ந்தேன். இன்று ஒரு தாயாக எல்லா எதிர்ப்புகளையும் எதிர்த்து போராடி எனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டேன். நம் மீது நம்பிக்கை கொண்டு கடுமையாக உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை என் மகளுக்கு நான் காட்ட விரும்புகிறேன்".
Suggested Reading: ஆட்டோ ஓட்டுநர் ராஜி அக்காவின் வாழ்க்கை பயணம் (Raji Akka)
Suggested Reading: சாதிக்க வேண்டும் என்ற வெறி சுகிதாவின்(sugitha) வாழ்க்கையை மாற்றியது
Suggested Reading: தீபா அக்கா (Deepa CWC) சிரிப்புக்கு பின்னாடி இவ்வளவு சோகமா?
Suggested Reading: பெண்கள் செய்யக்கூடாத 6 விஷயங்கள்