தீபா அக்கா (Deepa CWC) சிரிப்புக்கு பின்னாடி இவ்வளவு சோகமா?

author-image
Devayani
24 Jan 2023 புதுப்பிக்கப்பட்டது Apr 26, 2023 22:42 IST
deepa akka cwc

குக் வித் கோமாளி சீசன் இரண்டில்(Cook with Comali Season 2) பங்கு பெற்ற தீபா அக்கா பலரை அந்த நிகழ்ச்சியின் மூலம் சிரிக்க வைத்துள்ளார். அவரது இயல்பான பேச்சும், சிரிப்பும் மக்களை கவர்ந்தது. ஆனால் இந்த சிரிப்புக்கு பின்னால் பல வருட துயரங்களும், முயற்சிகளும் இருப்பது தெரியுமா? இவரது வாழ்க்கை கதை பலருக்கு ஊக்கமாக இருக்கக்கூடும், எனவே தொடர்ந்து படியுங்கள்.

Advertisment

தீபா ஷங்கர் தூத்துக்குடியில் ஒரு கிராமத்தில் பிறந்துள்ளார். சிறுவயதில் இருந்து தனது நிறத்திற்காக அவருக்கு திறமை இருந்தும் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடனத்தின் மேல் ஆர்வம் இருந்ததாகவும், சிறுவயதிலிருந்தே நன்றாக நடனம் ஆடுபவராக இருந்தாலும், பள்ளியில் அவரின் நிறத்தை ஒரு காரணமாக காட்டி அவரின் ஆசிரியர் அவரை நடனமாட அனுமதிக்கவில்லை என்று ஒரு நேர்காணலில் கூறினார். 

"ஆசிரியர் பொறுப்பு ரொம்ப முக்கியமான ஒரு பொறுப்பு. அந்த பொறுப்புல இருக்கும்போது அந்த குழந்தை எதுக்காக ஏங்குது, எதுக்காக தவிக்கிதுனு தெரிஞ்சுக்கணும். படிக்காத பிள்ளைக்கு ஏதாவது திறமை இருந்தா அதை தட்டி கொடுக்குறதுல தப்பு இல்ல" என்று கூறினார். ஏனென்றால், சிறுவயதில் அவரது ஆசிரியர்கள் அவர் நன்றாக படிக்கவில்லை என்று அவர் நடனமாட கேட்டபோது "உனக்கு இது ரொம்ப அவசியம்" என்று கூறி, அவர் கருப்பாக இருந்ததை காரணம் காட்டி அவருக்கு திறமை இருந்தும் அவரை நிராகரித்து விட்டனர்.

deepa akka

Advertisment

அதேபோல் இளம் வயதில் ஒரு முறை அவர் ரோட்டில் நடந்து சென்ற போது வாலிபர்கள் அவரை "பெரிய ஐஸ்வர்யா ராய் குடை பிடிச்சிட்டு  தான் போவா" என்றும் நிறத்தைப் பற்றியும் கலாய்த்து உள்ளனர். அதிலிருந்து அவர் குடை பிடித்து செல்வதை நிறுத்தி விட்டதாகவும், அது அவரை மிகவும் பாதித்ததாகவும் கூறினார். எனவே, அவர் "இளம் வயதில் இருக்கும் ஆண்கள் கிண்ணல் பண்றப்போ அது மத்தவங்கள hurt பண்ணாத அளவுக்கு கிண்டல் பண்ணனும். அது அந்த பிள்ளைகளை எவ்வளவு பாதிக்கும்னு நிறைய பசங்களுக்கு தெரிய மாட்டேங்குது. எனவே, இது போன்ற கிண்டல்கள் அடிக்க வேண்டாம்" என இளம் வயதில் உள்ள ஆண்களுக்கு அவர் வலியுறுத்துகிறார்.

சிறுவயதில் பள்ளிக்கு படிக்க சென்றதை விட அங்குள்ள ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே அவர் தினமும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவருக்கு சிறுவயதில் இருந்தே உதவ பிடிக்கும் என்பதால் அக்கம் பக்கத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு இலவசமாக நடனம் கற்று தருகிறார். 

இவர் தனக்கு நடிப்பின் மீதும், நடனத்தின் மீதும் ஆர்வம் இருந்ததை கண்டு கொண்டு அதையே தொழிலாக செய்ய நினைத்தார். எனவே, வீட்டில் தனக்காக மாப்பிள்ளை பார்க்கும்போது தனது நடிப்புத் தொழிலை ஏற்றுக் கொள்ளும் ஒரு கணவரை அவர் எதிர்பார்த்தார் என்பதால் பலர் அவரை நிராகரித்துள்ளனர். பிறகு ஷங்கர் என்பவர் தான் அதற்கு ஒப்புக்கொண்டு அவரை திருமணம் செய்துள்ளார். 

Advertisment

deepa akka with her husband

"என் வீட்டுக்காரர் எனக்கு பயங்கர சப்போர்ட்(support). அவர தவிர்த்து நான் வேற யார கல்யாணம் பண்ணி இருந்தா, இவ்ளோ ஃப்ரீயா(free) நான் நடிச்சிருக்க முடியாது. அவ்வளவு தூரம் நான் கஷ்டப்பட்டு இருக்கேன், வேற ஒருத்தரா இருந்தா அந்த தொழிலை விட்டுட்டு வேற வேலைக்கு போக சொல்லி இருப்பாங்க. ஆனா இவரு என் ஆசையை புரிஞ்சுகிட்டு எனக்காக நிறைய விட்டுக் கொடுத்து கொடுத்திருக்காரு" என்று அவர் கூறுகிறார்.

மெட்டி ஒலியின் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார் தீபா. அவர் பல ஆண்டுகளாக சின்னத்திரை மட்டும் வெள்ளி திரையில் நடித்துக் கொண்டு இருந்தாலும், 20 வருடங்களுக்கு பிறகு தான் அவருக்கான ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அந்த அங்கீகாரம் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்ததால் அவருக்கு கிடைத்தது. பிறகு குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இது அவரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. 

Advertisment

deepa akka dance in mr amd mrs chinnathirai

இந்த 20 வருடங்கள் அவர் தனக்காக எந்த ஒரு பெரிய அங்கீகாரமும் கிடைக்கவில்லை, விருதுகள் கிடைக்கவில்லை என ஏங்கிக் கொண்டிருந்தார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளரான பிறகு இவரை மக்கள் நன்கு அறிந்து கொண்டனர். இவரை தீபா அக்கா என்று பலர் அன்போடு அழைத்து வருகின்றனர். இவரின் எதார்த்தமான பேச்சும், சிரிப்பும் மக்களுக்கு பிடித்திருந்தது. எனவே, இதில் பங்கேற்ற பிறகு பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார். மேலும் டாக்டர் என்ற திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தை நடித்திருந்தார். இவரின் இந்த நடிப்பிற்காக SIIMA பெஸ்ட் காமெடியன் அவார்டை(Best Comedian Award) இவர் வென்றார். 

கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் 20 ஆண்டுகளுக்கு மேல் தனக்கு பிடித்த தொழிலில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடின உழைப்பில் ஈடுபட்டிருந்தார். பலமுறை நிராகரிக்கப்பட்டு, கேலியை எல்லாம் சந்தித்த இவர் தன்னை போல் கஷ்டப்படும் சிறு பிள்ளைகளுக்கு ஆதரவையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறார். 

Advertisment

நிறத்தை வைத்து கலாய்ப்பதும், உருக கேலி செய்வதும் ஒருவரை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது இவர் வாழ்க்கையில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். எனவே, நீங்கள் இனி விளையாட்டுக்காக ஏதாவது சொல்லுவதற்கு முன் அது ஒருவரை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.

Suggested Reading: குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?

Suggested Reading: தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu)

Suggested Reading: திவ்யா கோகுல்நாத்யின் (Byju's co-founder) ஊக்குவிக்கும் வாக்கியங்கள்⁠⁠⁠⁠⁠⁠⁠

#deepa cwc #deepa akka ##cookwithcomali #deepa sankar