தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu)

ஸ்ரீமதி சிமு சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil comedy digital creator

Images of Srimathi

மக்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர பொழுது போக்காக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். நகைச்சுவை பல மக்களின் மனபாரத்தை மறக்கடிக்க செய்கிறது. இருப்பினும் ஆண் நகைச்சுவை நடிகர்களை விட பெண் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே இருக்கின்றனர். தொலைக்காட்சிகளிலும், நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் குறைவான பெண்களே கலந்து கொள்கின்றனர். இப்படி இருக்க ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu) YouTube மற்றும் இன்ஸ்டாகிராமல் அவருடைய நகைச்சுவை நடிப்புகளை பதிவிட்டு வருகிறார்.

Advertisment

ஸ்ரீமதியின் இந்த பயணம் எப்படி தொடங்கியது?
வாழ்க்கையில் பெரிய லட்சியங்கள் எதுவும் இல்லாமல் B.com படித்து முடித்த பிறகு அவருடன் படித்தவர்கள் எல்லாம் வேலைக்கு சென்ற பிறகு தானும் ஏதோ ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஒரு வேலைக்கு சென்றார். மூன்று மாதத்திற்குள்ளேயே அந்த வேலை அவருக்கு சரியான வேலை இல்லை என்று தெரிந்து கொண்டு அதிலிருந்து விலகிக் கொண்டார். அதன் பிறகு MBA படிக்கலாம் என்று அதன் நுழைவு தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தபோது YouTube சேனல் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் வந்தது.

நம்மில் பெரும்பாலானோர் YouTube பார்த்துவிட்டு அதில் வருபவர்கள் போல கண்ணாடி முன் நின்று பேசிக் கொள்வோம். அதேபோல் ஸ்ரீமதியும் சிறுவயதிலிருந்து இதுபோன்று செய்துள்ளார் மற்றும் ஒரு நேர்காணலில் "நம்ம பேசுறத ரெண்டு பேரை கேட்கணும், கை தட்டணும், அப்ரிஷியேட் பண்ணனும், அப்படியெல்லாம் எனக்கு ஒரு ஆசை" என்றும் கூறியிருப்பார். இந்த ஆசையினாலேயே Instagramயில் தனது வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார்.

srimathi

இன்ஸ்டாகிராம் மற்றும் YouTubeயில் அப்போதுதான் reels மற்றும் Shorts அறிமுகமானது. இந்த இரண்டையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவரின் பல வீடியோக்களை ஆரம்ப கட்டத்தில் யாரும் பார்க்கவில்லை. பிறகு தங்கச்சி சோதனைகள் என்று ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவுக்கு 2000 பார்வையாளர்கள் வந்தவுடன், அதை தொடர்ந்து செய்ய தொடங்கினார். அந்த தங்கச்சி சோதனையில் மூன்றாவது பாகம் 10,000 பார்வையாளர்களை பெற்றது. அப்போதுதான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஆயிரம் பாலோவெர்ஸ்களை(followers) பெற்றுள்ளார். இப்போது தங்கச்சி சோதனைகளின் சீரிஸ் 25 பாகங்களை கொண்டுள்ளது.

Advertisment

இவரின் வீடியோக்கள் வைரலாக என்ன காரணம்?
இவரின் வீடியோக்கள் வைரலாக முக்கிய காரணம் என்னவென்றால் அதிலுள்ள அனைத்து கதாபாத்திரமும், அனைவராலும் ஒப்பிட்டுக் கொள்ள முடிந்தது. மற்றும் அவை அனைவரும் வாழ்க்கையில் அனுபவித்த ஒன்றாக இருக்கக்கூடும். ஏனெனில் இவர் வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்களை வைத்து தான் வீடியோக்களை எடுக்கிறார். அதனால் பெரும்பாலான மக்களால் அதை அவர்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கொள்ள முடிந்தது. அதுவே இவரின் தனித்துவம் என்றும் கூறலாம்.

Chimu

இவர் ஆடைகளுக்காக பெரிய செலவுகள் எதுவும் செய்வதில்லை. சாதாரணமாக வீட்டில் பெண்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே அவர் எதார்த்தமாக இருக்கிறார். இவரின் கன்டென்ட்களும் மற்ற சாதாரண கன்டென்ட்டை போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. 

அவர் வாழ்க்கையில் எதை பார்க்கிறாரோ அதை வைத்தும், அவரின் அனுபவங்களை வைத்தும் தான் கன்டென்ட் எடுக்கிறார். மேலும் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அவர் கூர்மையாக கவனித்து அதைப் போலவே நடிக்கிறார். சில சமயம் அவருக்கு எந்த யோசனையும் தோன்றாத போது அவர் ஓய்வு எடுப்பதாகவும், ஓய்வு எடுத்த பிறகு தானாகவே மீண்டும் நல்ல யோசனைகள் வரும் என்றும் அவர் கூறினார்.

Advertisment

எதிர்மறையான கருத்துக்களை ஸ்ரீமதி எப்படி கையாள்கிறார்?
சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒன்றை பதிவிட்டோம் என்றால் அதற்கு நேர்மறையான கருத்துக்களும் வரும், எதிர்மறையான கருத்துக்களும் வரும், அப்படி இவருக்கும் சில எதிர்மறையான கருத்துக்கள் வருவதுண்டு. ஒரு சில கமெண்ட்கள் உருவ கேலியாக இருக்கிறது. அப்பொழுது அவர் "சொல்றவங்க சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க அது அவங்களோட இன்செக்யூரிட்டியை(insecurity) தான் காட்டுது" என்று நினைத்துக் கொண்டு அதை புறக்கணித்து விடுவதாக கூறினார். 

venba

"ஒருத்தவங்களோட அழகு வந்து பார்க்கிறவங்க பார்வையில் தான் இருக்கு. இப்போ கடல்ல போறப்போ ட்ரான்ஸ்போர்ட்டுக்கு மீடியமா(transport medium) போட்(boat) யூஸ் பண்றோம். அந்த மாதிரி நம்ம வாழ்றதுக்கு உடம்பு வந்து ஒரு மீடியம் தான். நம்ம என்ன பண்றோம் தான் முக்கியம், நாம எப்படி இருக்கோம் என்பது முக்கியம் இல்ல" என்று அவர் கூறுகிறார். 

கதாபாத்திரம் மற்றும் நடிப்பு:
அவரது வீடியோக்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் அவரே நடிக்கிறார். அது வயதானவர்கள் ஆக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அனைத்து கதாபாத்திரங்களையும் பில்டர்(filter) பயன்படுத்தி அவரே நடித்து வருகிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் தரும் வாய்ஸ்(voice modulation), முக பாவனை, நடவடிக்கை அனைத்துமே தனித்துவமாக இருக்கிறது. அவருடைய கன்டென்ட்டும் வித்தியாசமாக இருப்பதால் மக்கள் இவரின் வீடியோக்களை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

Advertisment

comedy
தற்போது YouTubeயில் ஏழு லட்சத்திற்கும் மேல் Subscribers, இன்ஸ்டாகிராமில் 3 லட்சத்துக்கும் மேல் ஃபாலோவர்ஸ்(followers) வைத்திருக்கிறார். இந்த வெற்றி ஒரு நாளில் கிடைக்கவில்லை. இதற்காக பல நாட்கள் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். கன்டென்ட் எழுதுவது, அதை நடிப்பது, எடிட் செய்வது என ஒரு வீடியோவை பதிவிடுவதற்கு முன்பு நிறைய உழைப்பு அதில் போடப்படுகிறது. அந்த உழைப்பிற்கான கிடைத்த வெற்றியாகவே இதை நாம் பார்க்க வேண்டும்.

இவர் சிறு வயதில் படத்திற்காக சூ சூ மாரி போன்ற பாடல்களை பாடியுள்ளார் மற்றும் விளம்பரங்களில் வாய்ஸ் ஓவர் கொடுத்து சில பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggested Reading: Home Cooking Show வெற்றியின் காரணம் - Hema Subramanian 

Advertisment

Suggested Reading: RJ Sindhu சிரிக்கவும் வைக்கிறார், சிந்திக்கவும் வைக்கிறார்!

Suggested Reading: திவ்யா கோகுல்நாத்யின் (Byju's co-founder) ஊக்குவிக்கும் வாக்கியங்கள்

Suggested Reading: சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத கைவினைப் பொருட்களை விற்று வரும் Srimathi

Advertisment
tamil content creator ஸ்ரீமதி சிமு Srimathi Chimu