Byju'sயின் துணை நிறுவனரான திவ்யா கோகுல்நாத்யின் ஊக்குவிக்கும் வாக்கியங்கள்.
"கல்வி தான் இளைஞர்களின் சிந்தனையை வடிவமைக்க கூடிய ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இருக்கிறது என நான் நம்புகிறேன்"
"இந்த சர்வதேச மகளிர் தினத்தன்று ஒற்றுமையின் செய்தியை மற்ற பெண்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பெண்கள் ஒருவரை ஒருவர் ஆதரித்துக் கொள்ளும் போது தான் நமக்கான அதிகாரம் கிடைக்கும், அப்பொழுது தான் நாம் பெரிய கனவுகளையும், நமது லட்சியங்களையும் பின்பற்ற அது உதவும்"
"புதிதாக ஒரு தொழில் தொடங்கும் போது நாம் விமர்சனங்களை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அது வளரும் பொழுது பல தவறுகளை செய்யக்கூடும், அதில் எந்த தவறும் கிடையாது. நாம் அதில் இருந்து கற்றுக்கொண்டு வளர்வதே முக்கியமானது"
"மக்கள் வாழ்க்கையையும், வேலையையும் எப்படி பார்த்து கொள்வது என்று பேசுகிறார்கள். ஆனால் எனக்கு வேலை தான் வாழ்க்கையே, இருந்தும் நான் எனது ஐந்து வயதுடைய குழந்தையுடன் நேரத்தை செலவு செய்ய முடிகிறது. நான் இரு உலகத்திற்கும் சிறப்பாக செயல்படுகிறேன் என்று நம்புகிறேன். வேலையும் சிறப்பாகவே முடிகிறது, ஏனென்றால் நான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த நினைப்பதில்லை"
"நாம் நினைப்பதை விட நம்மால் நிறையவே செய்ய முடியும். அதற்கு ஒருவர் உண்மையாக அதன் மேல் உணர்ச்சி மிக்க இருக்க வேண்டும். 50 சதவீதத்தோடு நிறுத்தி விடக்கூடாது. 100% அடைவதே இலக்காக வைத்திருக்க வேண்டும்"
"எனது வாழ்க்கையில் பெரிய நன்மை எதுவென்றால் எனது பேஷன் தான் எனது தொழிலாக உள்ளது. நாம் விரும்பியதை நாம் செய்யும்பொழுது, அதை செய்ய என்றும் அலுத்து போகாது"
திவ்யாவின் வாழ்க்கையில் அவர் தாயின் பங்கு:
என் தாய் எடுக்கும் முடிவுகளை பார்த்து தான் என் வாழ்க்கையில் என் பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். வாழ்க்கையில் எல்லா கட்டத்திலும் ஒரு குழந்தையாக, ஒரு இளம் பெண்ணாக, வேலையை தேர்ந்தெடுக்கவும், நான் தாயாக ஆன பின்பும் என் தாய் ஒரு திடமான ஆதரவை எனக்கு தந்தார். அவர்தான் எப்போதும் எனக்கு வற்றாத உத்வேகத்தை அளிக்கிறார்.
வளர்ந்த வரும் தொழில் முனைவோருக்கு அவர் கூறும் ஆலோசனை:
நீங்கள் தற்பொழுது இங்கு இருக்கிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் உங்களை நம்பியதும், உங்கள் குடும்பம் உங்களை நம்பியதும் தான் காரணம். பெண் தொழில் முனைவோர் குறைவாகவே உள்ளனர். அதனால் தற்போது நீங்கள் இருக்கும் எந்த இடம் பல பெண்களுக்கு உத்தேகமாக இருக்கும். அவர்கள் உங்களைப் பார்த்து உங்களை போல இருக்க நினைப்பார்கள். உங்கள் நூறு சதவீதத்தை அடுத்த சில ஆண்டுகளுக்கு கொடுங்கள், நீங்கள் செய்வதை விரும்பி செய்யுங்கள், பிறகு இந்த முடிவுக்காக என்றும் வருத்தப்பட மாட்டீர்கள்.
நம்மில் பலர் தொழில் முனைவு என்றால் புதிதாக ஒரு தொழிலை தொடங்குவது, அதற்கான முதலீட்டுத் தொகை மற்றும் புதிய யோசனைகளை விற்பது என்பதோடு ஒப்பிடுகின்றோம். இது எல்லா விஷயங்களும் தொழில் முனைவுக்குள் அடங்கினாலும், நம் திறமையை வளர்த்துக் கொள்ள புதிய வாய்ப்புகளை தழுவி அதை டிஜிட்டல் மயமாக்க பயன்படுத்த வேண்டும். கூடுதலாக ஒரு தொழில் முனைவோரின் மனநிலையானது பிரச்சினையை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்குவது, மக்களின் தேவைகளை கண்டறிவது மற்றும் அதற்கான ஆக்கப்பூர்வமான தேர்வுகளை வழங்குவதாக இருக்க வேண்டும்.
தொழில் முனைவோருக்கான திறன்களை முற்றிலும் நாம் கற்றுக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். இளைஞர்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை ஏற்படுத்த, தொழில் முனைவு கல்வி அவசியமானது மற்றும் இளைஞர்களுக்கு அவர்களின் கனவுகளை துரத்த ஒரு சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
"மெஸ்ஸியின் கதையிலிருந்து 2023 ஆம் ஆண்டுக்கான மதிப்பு மிக்க பாடங்களை நாம் அனைவரும் கற்றுக் கொள்ளலாம். வெற்றி என்பது வெல்வது மட்டுமல்ல கடினமாக உழைப்பது, உங்கள் கம்போர்ட் சோனை விட்டு வெளி வருவது, மற்றும் இடையூறுகள் எதுவாக இருந்தாலும் உங்களை தொடர்ந்து சவால் செய்வது. எல்லாம் மாறுவது போல தோன்றினாலும் உங்களையும் உங்கள் திறன்களையும் நம்ப வேண்டும்"
Suggested Reading: யார் இந்த Byju's இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத்?
Suggested Reading: 4500 முதலீட்டில் ஆரம்பித்து, தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை மாத லாபம்
Suggested Reading: Nykaa நிறுவனத்தின் நிறுவனர் மாணவர்களுக்கு கூறும் ஆலோசனை