/stp-tamil/media/media_files/tgTOfyiwWFIZTGunxAnW.jpg)
யார் இந்த Byju's இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத்? சாதாரணமான மிடில் கிளாஸ் (middle class) குடும்பத்தில் பிறந்த இவரின் கதை அழகான ஆரம்பத்தைக் கொண்டது. Byju's ஆஃப்லைனில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு ஆசிரியராக அதில் சேர்ந்துள்ளார். மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் இந்த நிறுவனத்தில் அவர் வேலைக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்தது.
பெங்களூரில் பிறந்த இவர் வீட்டில் ஒரே மகள். அவரின் தந்தை இந்திய விமானப்படையில் மருத்துவராக இருந்துள்ளார் மற்றும் தாய் தூர்தர்ஷனில் ப்ரோக்ராமிங் எக்ஸிக்யூட்டிவாக(programming executive) இருந்துள்ளார். பெற்றோர் இருவரும் வேலை செய்வதை பார்த்து வளர்ந்த திவ்யா தனது வாழ்க்கை லட்சியமாக வேலை செய்து சுதந்திரமாகவும், நிதி ரீதியாக சுதந்திரமாக தன்னை பார்த்துக்கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்தார்.
கற்றுக் கொடுப்பதில் மிகுந்த ஆர்வம் உடைய திவ்யா, இந்தியாவை ஆசிரியர்களை முன்னெடுத்துச் செல்ல ஒரு நல்ல தளமாக இருக்கும் என நம்பினார். மேலும் SheThePeopleஇடம் அளித்த நேர்காணலில் "ஆசிரியர்களுக்கு ஒரு பெரிய ஆற்றல் உள்ளது. கற்றுக் கொடுப்பதற்கான பொற்காலம் மீண்டும் வந்து விட்டது, குறிப்பாக பெண்களுக்கு. கடந்த 15-20 ஆண்டுகளாக நிறைய சாஃப்ட்வேர் இன்ஜினியர்களை(Software Engineer) உருவாக்கியிருக்கிறோம், தற்பொழுது ஆசிரியர்களை உருவாக்கும் நேரம். சமீபத்தில் White Hat Jr உடனான ஒருங்கிணைப்பில் 11,000 பெண் ஆசிரியர்கள் ஆன்லைனில் மூலம் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு வீட்டில் இருந்தே நல்ல மதிப்பான வேலை செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது" என்று கூறினார்.
நிறுவனம் அதிக நிதி திரட்டுதல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் திட்டமிட்டாலும், அதன் மையமாக கற்பித்தலைத் தொடர திட்டமிட்டுள்ளதாக கோகுல்நாத் கூறுகிறார்.
"2015 ஆம் ஆண்டு நாங்கள் செயலியை அறிமுகப்படுத்திய போது, நாங்கள் எப்போதும் மாணவர்கள் பக்கம் தான் இருந்தோம். நாங்கள் டாப்பர்களை பற்றிய உரையாடலை விட வித்தியாசமாக இருக்க நினைக்கிறோம் மற்றும் கற்றுக் கொள்வதற்கான ஆற்றல்களை அதிகப்படுத்துவதில் தான் நாங்கள் கவனத்தை செலுத்துகிறோம்".
"ஆசிரியர்கள் பாடங்களை தெரிந்து வைத்திருப்பது போல, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தோம். மாணவர்கள் எப்பொழுதும் படிப்பில் ஆர்வத்துடன் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம். நாங்கள் முதலில் நடத்திய தொலைக்காட்சி பிரச்சாரத்தில் கற்றலின் மேல் காதல் கொள்வது பற்றி தைரியமாக பேசி இருந்தோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த பிரச்சாரத்தின் மூலம் மட்டுமே இரண்டு மில்லியன் மாணவர்கள் இதில் சேர்ந்தனர். இந்த பிரச்சாரம் கண்டிப்பாக நன்றாக செயல்படும் என்ற உள்ளுணர்ச்சியும், நம்பிக்கையும் எங்களுக்கு இருந்தது. இந்த நம்பிக்கையும், உணர்ச்சியும் தான் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது."
"கல்வி மட்டும் தான் இளைஞர்களின் சிந்தனையை வடிவமைக்க கூடிய ஒரு ஆயுதம் என நான் நம்புகிறேன்" - திவ்யா
திவ்யா 21 வயதில் கற்பிக்க தொடங்கினார். அவர் மாணவர்களை விட வயதானவர் போல் தோற்றமளிக்க புடவை கட்டிக் கொண்டதாக கூறுகிறார். அவரின் பெற்றோர் எப்பொழுதும் அவரை பெரியதாக கனவு காண சொல்லியும், வேலையில் லட்சியங்கள் வைத்திருக்கவும் ஊக்கவித்துள்ளனர். பைஜு ரவீந்திரன் மற்றும் திவ்யா இந்திய பணக்கார பட்டியலில் 46வது இடத்தை பிடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி அவர்கள் மொத்த சொத்து மதிப்பு $3.05 பில்லியன் (தோராயமாக ரூ. 22.3 ஆயிரம் கோடி).
திவ்யா கோகுல்நாத்தின் நம்பிக்கை?
“ஒவ்வொரு மாணவரின் கற்றல் பயணமும் தனித்துவமானது மற்றும் வித்தியாசமானது. எல்லா மாணவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பாடம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. நான் கற்பிக்கத் தொடங்கியபோது, கற்றல் எவ்வாறு அணுகப்படுகிறது என்பதை மேம்படுத்துவதற்கு பரந்த வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன்.”