Kannammas content என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிலாஷினி சமூகத்தில் நடக்கும் பாகுபாடுகள் பற்றி எழுதி வருகிறார். பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ள அபிலாஷினி மூன்று புத்தகங்களுக்கு co-authorஆகவும் இருந்திருக்கிறார். SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் பெண்ணியம்(feminism) பற்றி அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"பெண்ணியம்(feminism) என்பது நாம் உரக்கச் சொல்லி, சத்தமாக பேசி வாங்க வேண்டிய உரிமை கிடையாது. இந்த உரிமைகள் நம்மிடத்தில் தான் இருக்கின்றது. ஆனால், பலர் அதை புரிந்து கொள்ள தவறுகின்றனர். பெண்ணியம் என்பது ஒரு ஆண் என்ன செய்தாலும் பெண் நானும் அதை செய்வேன் என்பது அர்த்தம் கிடையாது. நீ தண்ணி அடிக்கிறனா நானும் தண்ணி அடிப்பேன், உனக்கு அந்த உரிமை இருக்குன்னா எனக்கும் இருக்கு, நீங்க பைக்ல வேகமா போறீங்கனா நானும் பைக்ல வேகமாக போவேன். இது பெண்ணியம் கிடையாது. அது யார் செய்தாலும் தவறு தான். ஒரு ஆண் குடித்தாலும் தவறு தான், ஒரு பெண் சிகரெட் அடித்தாலும் தவறுதான்.
ஒரு சில வாய்ப்புகள் பெண்ணாக இருப்பதனால் அல்லது இந்த சமூகம் என்னை பெண்ணாக பார்ப்பதனால் இது உனக்கு கிடைக்கக் கூடாது, இது உன்னை விட ஆண் நன்றாக செய்வான் என்று இதுபோன்று நமக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கும் பொழுது தான் அதற்காக நாம் போராட வேண்டும். நீ செய்வதெல்லாம் நானும் செய்வேன் என்பது பெண்ணியம் கிடையாது. எனக்கு ஒரு சில ஆசைகள் இருக்கிறது, அதை பெண் என்று காரணத்தினால் நீ செய்யாதே என்றும் சொல்லும்பொழுது அதற்காக குரல் கொடுப்பதுதான் பெண்ணியம். அதாவது ஒரு ஆண் சமைத்தாலும் தவறு கிடையாது, ஒரு பெண் கார் ஓட்டினாலும் தவறு கிடையாது.
இந்த சமூகத்தில் உள்ள stereotypes உடைக்க வேண்டும். எனது எழுத்துகள், நேர்காணல் மற்றும் podcast போன்றவைகளில் stereotypes பற்றி பேசி இருக்கிறேன். Stereotypes யாரால் வரையறுக்கப்பட்டது? அதற்கான ஆதாரம் எங்கே? Stereotypes ஒரு நம்பகத்தன்மையான சோர்ஸ் இல்லாததால், யார் வேண்டுமானாலும் போற போக்கில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் அதில் என்ன வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது ஒரு தாயாக இருந்தால் அவர்கள் கணவருக்கும், குழந்தைகளுக்கும் தியாகம் செய்தால்தான் அவர் ஒரு நல்ல தாய் அல்லது ஒரு மூத்த பெண்ணாக இருந்தால் குடும்பத்தையே அவள் தான் நடத்தி அவளின் ஆசைகளை எல்லாம் புதைத்துக் கொண்டு தியாகியாக இருந்தால் தான் அவள் ஒரு நல்ல பெண் அல்லது ஒரு பெண்ணாக இருந்தால் குடும்ப் என்ன சமைக்க சொல்கிறதோ அதை சமைக்கணும், சில நாள் அவளுக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட உரிமை இல்லையா? இல்லை சில நாட்கள் கடையில் வாங்கி சாப்பிடலாம் என்று அவளுக்கு தோணாதா? இப்பொழுது நான் கூறிய எடுத்துக்காட்டுகள் எல்லாமே நடைமுறையில் இருக்கிறது. நானும் இதை செய்திருக்கிறேன். தியாகத்தில் இருந்து சமூகத்திற்காக வாழ்வது என நானும் செய்திருக்கிறேன். இப்படி செய்பவர்களை நான் தவறு சொல்ல மாட்டேன். ஆனால், இப்படி நடந்து கொள்ளாமல் இருப்பவர்களை judge செய்யக் கூடாது. அதுதான் breaking stereotypes. இதுதான் ஒரு பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவது. அப்படி ஒரு சமூகத்தை அடுத்த ஜெனரேஷனுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
யார் இதையெல்லாம் முடிவெடுக்கிறார்கள்? நாங்கள் இந்த வேலையை தான் செய்ய வேண்டும், நல்ல நாள் என்றால் கருப்பு ஆடை அணியக்கூடாது, ஒரு கட்டில் மீது ஆசை இருந்தாலும் ஒரு பெண் வாயை திறந்து சொல்லக்கூடாது, ஆசை இல்லை என்றாலும் அதை வெளிப்படுத்தக் கூடாது, எவ்வளவு பிடித்து இருந்தாலும் கணவனை இழந்து விட்டால் பூ வைக்க கூடாது, பொட்டு வைக்க கூடாது, என்னுடைய மார்பகம் ஒரு அங்குலம்(inch) பெரிதாக இருந்தாலும் கூட டி-ஷர்ட்(t-shirt) போடக்கூடாது, பொட்டு வைக்காம வெள்ளிக்கிழமை இருக்கக் கூடாது, ஆறு மணிக்கு மேல் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது, பொண்ணா பொறந்தா கண்டிப்பா கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கக்கூடாது, 25 வயசுக்கு மேல கல்யாணம் ஆகாமல் இருக்க கூடாது, 35 வயசுக்கு மேல குழந்தை இல்லாமல் இருக்கக் கூடாது. இதெல்லாம் சரி என்று சொல்வதற்கு இந்த சமூகத்தில் ஒரு ஆதாரமும் இல்லை. நான் சொல்வது போல இதெல்லாம் தவறு என்று சொல்வதற்கும் ஒரு ஆதாரமும் இல்லை. இதையெல்லாம் தவறு என்றால் யார் செய்தாலும் தவறு, சரி என்றால் யார் செய்தாலும் சரி. இந்த மாதிரி நம்மை சுற்றி இருக்கும் பாலின பாகுபாடுகளை தான் நான் உடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்"
அபிலாஷினி தனது பயணம் பற்றியும், மேலும் இது போன்ற பல விஷயங்களை பற்றியும் Thuglife Thalaivi என்ற பாட்கேஸ்டில்(podcast) பகிர்ந்து கொண்டார். அதைக் கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
Click Here: Clear view of feminism and stereotypes in the society - Abilashni Kamakshi | Kannammas_content | Author
Suggested Reading: இந்த நான்கு விஷயங்களும் ஒரு பெண்ணை குணமற்றவளாக மாற்றாது
Suggested Reading: திருமணம் ஆகாத ஒரு பெண்ணை பற்றி சமூகம் என்ன நினைக்கிறது?
Suggested Reading: கண்டிப்பான முறையில் குழந்தை வளர்ப்பது ஆபத்தானது
Suggested Reading: பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்