Advertisment

திருமணம் ஆகாத ஒரு பெண்ணை பற்றி சமூகம் என்ன நினைக்கிறது?

குறிப்பிட்ட வயதிற்கு மேல் திருமணம் செய்யாமல், திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் ஒரு பெண் இந்த சமூகத்தில் வாழ்கிறாள் என்றால் அவள் அன்றாட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சமூகம் அவளைப் பற்றி பல உண்மை இல்லாத கருத்துக்களையும் பரப்புகிறது.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arcchana 31 not out

Image is used from the movie Archana 31 Not Out

எத்தன மணிக்கு வீட்டுக்கு திரும்ப வருவ? இந்த நேரத்துல ஏன் வெளிய போற? யார்கிட்ட இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்க? இவை எல்லாம் ஒரு இளம் பெண் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பொதுவான கேள்விகள். அவளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் குடும்பம், உறவினர், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் என அனைவரும் கண்காணித்து, அவளின் குணத்தை சோதனைக்கு உட்படுத்துகின்றனர். ஒரு குடும்பத்தில் பெண் எப்பொழுதும் சுமையாகவே பார்க்கப்படுகிறாள். அவள் குறிப்பிட்ட வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், சுதந்திரமாக தனியே வாழ நினைத்தாலும் அதே பிரச்சனை தான். 

Advertisment

பெண்களை தனி மனிதனாக ஏற்றுக் கொள்வதற்கு இந்த சமூகம் தயங்குகிறது. பெண்கள் ஆண்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று ஏன் எண்ணுகிறோம்? ஒரு பெண் தனக்காக தானே முடிவு எடுத்தால் இந்த சமூகம் அவளை விமர்சிக்கும். அவர் திருமணத்திற்கு தயாராகாமல் இருப்பது, திருமணத்திற்கு சிறிது கால அவகாசம் கேட்பது இது எல்லா முடிவுகளும் விமர்சனங்களில் தான் முடிகிறது. திருமணம் ஆகாமல் தனிமையில் இருக்கும் பெண் ஒரு மணி நேரத்திற்குள் எண்ணற்ற விமர்சனங்களுக்கு ஆளாகிறாள். 

ஒரு வயதிற்கு மேல் பிறந்த வீட்டில் இருக்கும் பெண் பெரும்பாலும் துரதிஷ்டசாலியாகவே கருதப்படுகிறாள். இந்த மாதிரியான செயல்கள் எல்லாம் பெண்களின் மேல் அக்கறை உள்ளதாலும், அவர்களின் நல்லனுக்காகவும் எனக் கூறும் இந்த சமூகம் அவள் மன ஆரோக்கியம் பற்றி நினைப்பதில்லை.

திருமணம் ஆகாத பெண்ணிடம் நாம் ஏன்  பாரபட்சமாக நடந்து கொள்கிறோம்:
சுதந்திரமாக அவள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ளும் ஒரு பெண்ணை இந்த சமூகம் ஏன் எதையோ இழந்தது போலவே பார்க்கிறது. பெண்கள் அவர்கள் செய்யும் வேலை, தொழில்களில் வெற்றிகரமாக, இருந்தாலும் திருமணம் ஆகாததால் அவளை தோல்வியுற்றவளாகவே கருதுகிறது. அவள் யாரையும் சார்ந்து இருக்காமல் சுதந்திரமாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் ஆகாததால் அவளை இந்த சமூகம் நிராகரிக்கப்பட்டவளாக கருதுகிறது.

Advertisment

இந்தியாவில் ஒரு பெண்ணின் அடையாளம் அவள் திருமணத்தை சுற்றியே இருக்கிறது. பெண்கள் சிறுவயதில் இருந்தே திருமணம் தான் அவர்களது வாழ்க்கையின் முக்கியமான இலக்கு என்றும், கணவரை பார்த்துக் கொள்வதும், உபசரிப்பதும் அவள் கடமை என்றும், ஒரு நல்ல மனைவியாக, மருமகளாக இருப்பதே ஒரு சிறந்த பெண்ணின் அடையாளம் என்றும் கற்றுக் கொடுக்கப்பட்டு அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு பெண் எந்த ஒரு கட்டத்திலும் எந்த விதிமுறைகளை மீறக்கூடாது, கேள்வி கேட்கக் கூடாது, எதிர்த்து பேசக்கூடாது அவ்வாறு அவள் செய்தால் அவளை இந்த சமூகம் விரோதியாக பார்க்கிறது.

திருமணம் செய்து கொள்ள விரும்பாமல் ஒரு பெண் இருந்தால் அவளின் இந்த முடிவுக்கு இந்த சமூகம் இல்லாத பல காரணங்களை கற்பனை செய்து கொள்ளும். ஒரு பெண் அவள் விருப்பத்தின்படி தனியே இருக்க நினைத்தால் அவள் ஏதோ பாரதத்தில் இருக்கிறாள், மனசோர்வடைந்த வாழ்க்கையை வாழ்கிறாள் அல்லது நல்ல குணமற்றவளாக இருக்கிறாள் என்றெல்லாம் அவளைப் பற்றி நினைக்கும். ஏன் இன்னும் ஒரு படி மேலே சென்று அவள் பல ஆண்களுடன் தவறான உறவில் இருக்கலாம் என்று கூட இந்த சமூகம் நினைக்கிறது.

சமூகத்தில் இந்தக் கருத்துக்கள் பரவி உள்ளதற்கு முக்கிய காரணமாக சினிமாவும், தொலைக்காட்சி நாடகங்களும் இருக்கிறது. இவை எப்பொழுதும் சுதந்திரமாக தனிமையில் இருக்கும் பெண்களை சந்தோஷமாக இருப்பவர்களாக, இயல்பான வாழ்க்கையை வாழ்வது போல சித்தரிப்பதில்லை. பெரும்பாலும் பெண்கள் காதல் வயப்படுவதற்காகவே படங்களில் காட்டப்படுகிறார்கள். நாடகங்களில் திருமணங்களை சுற்றி கதை களம் நகருகிறது. திருமணம் ஆகாமல் தனிமையில் ஒரு பெண் இருந்தால் அவள் பப்களுக்கு சென்று பார்ட்டி செய்வது போல, கணவனை இழந்தவள் தவிப்பது போல, விவாகரத்து பெற்று சோகத்தில் இருப்பது போலவே சித்தரிக்கப்படுகிறது. அவளை ஏன் ஒரு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது போல படங்களிலும், நாடகங்களிலும் காட்ட மறுக்கின்றனர்?

Advertisment

ஒரு பெண் திருமணம் ஆகாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என்று இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆனால், அதிகமான பெண்கள் தனிமையாகவும், சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவைப்படுவது எல்லாம் அவர்களின் தனித்துவ அடையாளத்திற்கான மரியாதை மட்டுமே.

Suggested Reading: இலக்குகளை நோக்கி செல்ல நயன்தாரா கூறும் ஐந்து அறிவுரைகள்

Advertisment

Suggested Reading: சாய்பல்லவி கூறிய ஊக்குவிக்கும் வாக்கியங்கள்

Suggested Reading: குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?

Suggested Reading: IT வேலையை விட்டு மக் கேக்ஸ்(Mug Cakes) ஆரம்பித்த ஸ்வேதா

திருமணம் மரியாதை
Advertisment