திரை உலகில் குறைந்த காலகட்டத்தில் பல மக்களை தனது நடிப்பின் மூலமும், எதார்த்த குணத்தின் மூலமும் கவர்ந்துள்ளார் சாய்பல்லவி. சாய்பல்லவி பல விதங்களில் பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். பிரேமம் படம் மூலம் தனது இயல்பான தோற்றத்தை காண்பித்து திரையுலகில் உள்ள அழகின் வரையறையை அவர் உடைத்துள்ளார். அப்பொழுதில் இருந்து இப்பொழுது வரை அவரை பார்க்கும் போதும், அவர் கூறும் கருத்துக்களை கேட்கும்போதும் பலருக்கு நேர்மறையான ஆற்றல் கிடைக்கிறது என்றே கூறலாம்.
சாய்பல்லவி கூறிய சில விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:
"ஃபேஷன் என்பது என்னை பொருத்தவரை கம்பேர்டபுல் ஆக இருப்பது. நான் அணிந்திருக்கும் ஆடையில் நான் கம்பர்டபில் ஆக இருக்க வேண்டும்"
சாய்பல்லவி பெரும்பாலான இடங்களுக்கு செல்லும் பொழுது புடவை அணிந்து கொண்டு தான் செல்வார். அதுதான் அவருக்கு கம்பேர்டபுல் ஆக இருக்கிறது என்றும் பலமுறை கூறியுள்ளார். அதேபோல் ஃபேஷன் என்பதை பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். ஃபேஷன் என்பது நம்மை காம்பாட்டபலாக வைத்திருக்க வேண்டும். எனவே, நீங்கள் எந்த உடையில் கம்போடபிலாக உணர்கிறீர்களோ அதையே அணியுங்கள். அது புடவையாக இருக்கலாம், ஜீன்ஸாக இருக்கலாம் எந்த ஆடையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீங்கள் அதில் கம்பேர்டபுள்ளாக உணர வேண்டும்.
"ஒருவர் தங்களுடைய உடம்பு எப்படி இருக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு மதிக்க வேண்டும் மற்றும் அதன் நல்வாழ்வை நோக்கி உழைக்க வேண்டும். இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்"
இந்த சமூகத்தில் பலர் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறோம். நமது உருவத்தை பற்றிய தாழ்வு மனப்பான்மை பெரும்பாலும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனென்றால், இந்த சமூகம் உருவ கேலி செய்து நம்மை அந்த நிலைமைக்கு தள்ளி உள்ளது. நீங்கள் இருக்கும் விதத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டால் பிறரின் கருத்துகளும், விமர்சனங்களும் உங்களை பாதிக்காது. எனவே, உங்களை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், பாராட்ட வேண்டும் என்று நினைப்பதற்கு முன் உங்களை நீங்களே ஏற்றுக் கொண்டு அவ்வப்போது பாராட்டி கொள்ள வேண்டும்.
"நீங்கள் ஒன்றை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்கள் என்றால் அதை நிச்சயமாக செய்து முடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்"
நீங்கள் ஒரு விஷயத்தை சரியாக திட்டமிட்டு அதை அடைய தினமும் ஏதாவது செய்து வந்தால் நிச்சயமாக உங்களால் அந்த இலக்கை அடைய முடியும். நீங்கள் உங்கள் இலக்கில் உறுதியாக இருந்து அதை அடைவதற்கான திட்டத்தை முதலில் தீட்ட வேண்டும். அப்பொழுது தான் உங்களால் அதை நோக்கி செல்ல முடியும்.
"வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானது. எனவே, அதை உங்களை பாதிக்க விடாதீர்கள்"
பலர் தோல்விகளை கண்டு அஞ்சுகின்றனர். ஆனால் உண்மையான தோல்வி எதுவென்றால் நாம் முயற்சிக்காமல் இருப்பது. எனவே, உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். நீங்கள் முயற்சிப்பது மட்டுமே முக்கியமானது, அது வெற்றியில் முடிந்தாலோ, தோல்வியில் முடிந்தாலோ, அது இரண்டுமே தற்காலிகமானது தான்.
"என் தாய் பெண்கள் எப்பொழுதும் பணரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறுவார். அதனால்தான் நான் எனது மருத்துவ படிப்பை முடித்தேன்"
பணரீதியாக சுதந்திரமாக இருப்பதும், படிப்பறிவும் அனைத்து மனிதர்களுக்கும் தேவைப்படும் ஒன்றாகும். இவை இரண்டும் உங்களுக்கு நம்பிக்கையையும், உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தபடி வாழவும் உதவுகிறது.
"எனது தங்கை என்னோடு ஐந்து வயது சிறியவள். அவள் நான் அவளை விட சிறிது சிறப்பாக இருப்பதால் நான் அழகாக இருக்கிறேன் என்று நினைக்கிறாள். அவளை சுற்றி உள்ளவர்களும் அவள் வெளியில் விளையாட சென்றாள் இன்னும் கருப்பாகி விடுவாள் என்பதால் அவளை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்துவர். இது அவளை மன அளவில் பாதித்தது"
நமது சமூகத்தில் உருவ கேலி மற்றும் உடல் நிறத்தை பற்றிய கேலிகள் சாதாரணமாக கருதப்படுகிறது. ஆனால், அது ஒரு மனிதரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்று நாம் அறிவதில்லை. இது போன்ற கேலிகள் ஒருவரின் தன்னம்பிக்கையை பெரிய அளவில் பாதிக்கக்கூடும். எனவே, நீங்களும் விளையாட்டாக கூட யாரையும் இதுபோன்று நிறத்தை வைத்து, உடலை வைத்து கேலி செய்யாதீர்கள்.
Suggested Reading: இலக்குகளை நோக்கி செல்ல நயன்தாரா கூறும் ஐந்து அறிவுரைகள்
Suggested Reading: திவ்யா கோகுல்நாத்யின் (Byju's co-founder) ஊக்குவிக்கும் வாக்கியங்கள்
Suggested Reading: Digital Marketing பற்றி தமிழில் கற்று தருகிறார் Sangeetha S Abishek