Advertisment

இலக்குகளை நோக்கி செல்ல நயன்தாரா கூறும் ஐந்து அறிவுரைகள்

நயன்தாரா பல மேடைகளில் கூறிய கருத்துக்களும், அறிவுரைகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை உங்கள் இலக்கை நோக்கி உங்களை பயணிக்க வைக்க உதவும். எனவே, முழுமையாக படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
nayanthara award function

Image is used for representational purpose only

நயன்தாராவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும், அவர் தற்போது இருக்கும் நிலையும் சாதாரணமாக கிடைக்கவில்லை. பல போராட்டங்களையும், பிரச்சனைகளையும் கடந்து விமர்சனங்களை தாண்டி தான் அவர் தற்போது இருக்கும் நிலையை அடைந்துள்ளார். அவர் திரை படங்களில் நடிக்க தொடங்கி  20 வருடங்கள் ஆன நிலையில் தற்போது பல புதிய கதாநாயகிகளுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறார். 

Advertisment

பெண்களை மையமாகக் கொண்டு படம் எடுத்தால் மக்கள் அதை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையை இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கொடுத்த நடிகை இவர். தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படும் படங்களுக்கு ஒரு முன் உதாரணம் இவர். ஐஸ்வர்யா ராஜேஷ் கூட ஒரு மேடையில் பெண்களை மையமாக வைத்து படம் எடுக்கும் பாதையை அமைத்துக் கொடுத்ததற்கு நயன்தாராவிற்கு நன்றி எனவும் கூறியிருப்பார்.

நயன்தாரா திரையுலகில் இருக்கும் பெண்களை மட்டுமல்ல சாதாரண மக்களையும் தனது அர்த்தமுள்ள பேச்சுக்களால் ஊக்குவித்திருக்கிறார். அப்படி அவர் கூறிய ஐந்து விஷயங்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

nayanthara with awards

Advertisment

"Never ever give up in your life. Life is so beautiful. இன்னைக்கு உங்களுக்கு நிறைய பிரச்சனை இருக்கலாம், குடும்பத்தில் பிரச்சினை இருக்கலாம், வேலையில் பிரச்சனை இருக்கலாம், என்ன வேணா இருக்கலாம். ஆனா நீங்க உண்மையா வேலை செஞ்சீங்கன்னா, நீங்க உங்களுக்கு உண்மையா இருந்தா கண்டிப்பா கடவுள் வந்து உங்களுக்கு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுப்பாரு அப்படிங்கிறதுக்கு பெரிய எக்சாம்பில்(example) நான் தான்"

"இன்னைக்கு சில பேருக்கு உங்கள பிடிக்கும், நாளைக்கு சில பேருக்கு உங்கள பிடிக்காது. மத்தவங்க என்ன யோசிக்கிறாங்க, நம்மள எப்படி பாக்குறாங்க அப்படின்னு நம்ப யோசிச்சிட்டு இருந்தோம்னா நம்மளால ஒரு வாழ்க்கையை கரெக்டா(correct) வாழ முடியாது. அப்படி இருக்கவும் கூடாதுனு நான் நினைக்கிறேன்"

"இப்போ ஒரு விஷயம் உங்களால பண்ண முடியாதுன்னு ஒரு பத்து பேர் சொல்லும்போது, நம்மளுக்கே ஒன்னு இருக்கும்ல என்னால இது டெஃபனட்டா(definite) பண்ண முடியும், இது என்னால பண்ண முடியும்னு நீங்க ஸ்ட்ராங்கா(strong) பீல் பண்றீங்கனா உங்களால அத பண்ண முடியும்".

Advertisment

nayantha award function hd image

"ஒருத்தவங்கள உங்களுக்கு பிடிக்கும்னா அவங்கள பத்தி ஒரு ரெண்டு வார்த்தை நல்லதா எழுதுங்க, நல்லதா பேசுங்க. பிடிக்கல அப்படின்னா விட்டுருங்க. எதுக்கு நம்ப அவங்கள பத்தி தப்பா பேசணும், அவங்களோட ஒரு நாள், அவங்களோட மனச எதுக்கு நம்ப ஹாட் பண்ணனும். அன்பா இருங்க, அன்பு மட்டுமே கொடுங்க. இதுதான் இந்த உலகத்துல ரொம்ப கம்மியான விஷயம். ரொம்ப நெகட்டிவா(negative) இருக்க உலகத்துல நீங்க உங்க அன்ப கொடுக்கிறது தான் மிகப்பெரிய விஷயமா இருக்கும்"

"If you want to do it, just go ahead and do it. ஏன்னா உங்களுடைய லைஃப், உங்களோட struggles, உங்களோட பெயின்(pain), அந்த டைம்ல(time) நீங்க பீல் பண்ற எமோஷன்ஸ்(emotions), உங்களோட மெச்சூரிட்டி லெவல்(maturity level), இது எல்லாமே உங்களுக்கு மட்டும் தான் தெரியும். இது உங்களோட வாழ்க்கையா தான் இருக்கணும், உங்களோட டெசிஷனா(decision) தான் இருக்கணும்".

Advertisment

இவர் கூறியது போலவே இது அனைத்திற்கும் இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இவர் ஒவ்வொரு முறையும் மேடையில் பேசும்போது அல்லது நேர்காணலில் பேசும்போது மற்றவர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை. இவரின் வாழ்க்கை அனுபவத்தையும் இவர் எதிர் கொண்ட விஷயத்தையும் வைத்து இது போன்ற மக்களை அவ்வப்போது ஊக்குவித்து வருகிறார்.

Suggested Reading: "திருமண வாழ்க்கை மற்றொரு தொடக்கமாக இருக்க வேண்டும்" நயன்தாரா

Suggested Reading: சமூகத்தில் உள்ள பாகுபாட்டை பற்றி தமிழ் நடிகைகள் கூறும் விஷயங்கள்

Advertisment

Suggested Reading: உருவ கேலி (body shaming) மனிதர்களை மனதளவில் பாதிக்கிறது

Suggested Reading: திவ்யா கோகுல்நாத்யின் (Byju's co-founder) ஊக்குவிக்கும் வாக்கியங்கள்

nayanthara nayanthara quotes nayanthara motivation
Advertisment