/stp-tamil/media/media_files/u8CWZvr50ES7xZf0tZpX.png)
பெண்களுக்கு இந்த சமூகத்தில் பல விதிமுறைகளும், பாகுபாடுகளும் இருக்கிறது. இவற்றை பற்றி தற்போது அனைவரும் பேச தொடங்கி, அது மாறியும் வருகிறது. தமிழ் திரையுலக நடிகைகள் பாலின பாகுபாடு, பெண்கள் எப்படி இருக்க வேண்டும், உருவ கேலி ஒருவரை எப்படி பாதிக்கிறது போன்றவற்றை பற்றி கூறியது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"பெண்ணியவாதிகள் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அனைத்தும் சமமாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். நான் இதை முழுமையாக நம்புகிறேன். இது ஒரு மனிதனை தாழ்த்தாது. எங்கள் வீட்டில் என் தாயும், தந்தையும் சமமான முக்கியத்துவத்தை பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் பொறுப்புள்ள பிள்ளைகளாக வளருவார்கள்" - ஐஸ்வர்யா லட்சுமி
"உங்கள் மகளை யார் திருமணம் செய்து கொள்வார் என்ற கவலை கொள்ளாத அளவிற்கு அவளை தகுதியானவளாக மாற்றுங்கள். அவளின் திருமணத்திற்காக பணத்தை சேமிப்பதை விட அவளின் படிப்பிற்காக அதை செலவு செய்யுங்கள், மற்றும் மிகவும் முக்கியமாக திருமணத்திற்கு அவளை தயார் செய்வதற்கு பதிலாக அவளுக்காக அவளை தயார் செய்யுங்கள். அவளுக்கு சுய அன்பு, நம்பிக்கை போன்றவற்றை கற்றுக்கொடுங்கள்" - சமந்தா
"பணரீதியான சுதந்திரம் பெண்ணுக்கு மிகவும் அவசியமானது. நான் 20 வயது இருக்கும் பொழுது நான் யாரையும் சார்ந்து இல்லாமல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனக்கு மட்டுமே நான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். வேறு யாருக்காவது நான் ஏதாவது பதில் கூற வேண்டுமெனில் நான் சுதந்திரமாகவும், தைரியமாகவும் அதை செய்ய வேண்டும்" - ஸ்ருதிஹாசன்
"எனது தங்கை என்னை விட ஐந்து வயது சிறியவள். நான் அவளை விட சிறிது கலராக இருப்பதால் நான் அழகாக இருக்கிறேன் என்று நினைத்தால். பல சமயங்களில் மற்றவர்கள் அவள் வெளியே விளையாட சென்றாள் இன்னும் கலர் கம்மியாகிவிடுவாள் என்று வீட்டிலேயே இருக்க சொல்லுவர். இது மனதளவில் அவளை பாதித்தது" - சாய் பல்லவி
"திருமணம் முடிந்தால் ஆண்கள் அடுத்த நாளே வேலைக்கு சென்று விடுகின்றனர். ஆனால் பெண்களுக்கு மட்டும் அது ஏன் ஒரு இடைவெளியாக இருக்கிறது? திருமணம் ஒரு இடைவெளி அல்ல. திருமணத்திற்கு பிறகு உங்களை ஆதரிக்க ஒருவர் இருக்கிறார்கள் என்பதால் நீங்கள் முன்வைவிட நிறைய செய்ய வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும்" - நயன்தாரா
"பெண்கள் திரை உலகில் எல்லா வேலைகளையும் செய்கின்றனர். எழுதுவது, படம் பிடிப்பது, டைரக்ட் செய்வது இதுபோன்று கேமராவுக்கு முன்பும், பின்பும் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு திறமை இருக்கிறது, ஆனால் அந்த திறமைக்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எல்லா திறமைகளுக்கும் பாலின பாகுபாடு இன்றி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்" - ஐஸ்வர்யா ராய்
"பெண்கள் No என்று சொல்ல தொடங்க வேண்டும். பாதி பிரச்சனைகள் நாம் நமக்காக குரல் கொடுக்காமல் போவதால் நடக்கிறது. நாம் NO என்று சொல்லி நமது மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்" - வரலட்சுமி
"அவர் கூறினார் எனது பேங்க் அக்கவுண்டில் பணம் வேண்டும் என்று. ஏனென்றால், ஒருவேளை நான் சரியான ஆணை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் அந்த உறவிலிருந்து தலை நிமிர்ந்து வெளியேற வேண்டும். இதேபோன்று சுயமதிப்பு மற்றும் சுயமரியாதை கற்று தந்த என் தாய்க்கு நன்றி" - ஜோதிகா
"ஒருவர் மனதளவில் வீக்காக(weak) இருந்தால் இந்த துறையில் நிலைக்க முடியாது. இந்த துறையில் மட்டுமல்ல எல்லா துறையிலும் அப்படித்தான். ஒரு பெண் அவளின் முடிவுகளிலும், கருத்துக்களிலும் தைரியமாக இருக்க வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்த்து போராட வேண்டும்" - அமலா பால்