SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் வழக்கறிஞர் திலகவதி(thilo_rebel) பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights) பற்றி பகிர்ந்து கொண்டார்.
பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்:
பெண்களுக்கு கருவில் இருக்கும் பொழுதிலிருந்து இறக்கும் வரை தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய சட்டங்கள் இருக்கிறது. ஆனால், இந்த சட்டங்கள் எல்லாம் இருப்பதே தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் வன்முறை, harassment போன்ற விஷயங்களுக்கு நாம் தள்ளப்படுகிறோம். உதாரணத்திற்கு நான் ஏன் பிறப்பதற்கு முன்பிருந்து சொல்கிறேன் என்றால் ஒரு குழந்தையோட பாலினத்தை கண்டுபிடித்து அது பிறப்பதற்கு முன்பே கருவை கலைக்கிறார்கள். அதனால் இங்கிருந்தே நமக்கு சட்டங்கள் ஆரம்பிக்கிறது. இந்த மாதிரியான சட்டங்கள் ஏன் வந்தது என்றால் அது பெண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் தான் எல்லாரும் கருவை கலைக்கிறார்கள். அதனால் பெண்கள் கருவில் இருக்கும் பொழுதே அவர்களுக்கான சட்டங்கள் ஆரம்பிக்கிறது.
குழந்தை திருமணம்:
குழந்தை பிறந்து அந்த குழந்தை வளரும் பொழுது குழந்தை திருமணம் தடை சட்டம் நமக்கு இருக்கிறது. ஏனென்றால், குழந்தை திருமணம் பெண்களுக்கு தான் அதிகமாக நடக்கிறது. உங்கள் வீட்டில் இது போன்ற விஷயங்கள் நடக்கிறது என்றாலும் அல்லது உங்கள் உறவினர்கள் மத்தியில் இது போன்ற விஷயங்கள் நடக்கிறது என்றாலும் உங்களால் அதை உடனடியாக நிறுத்த முடியும். Child helpline அல்லது 1098 அழைக்கலாம் அல்லது காவல்துறையிடம் இதைப் பற்றி சொல்லி நடவடிக்கை எடுக்கலாம். இந்த மாதிரியான உரிமைகள் உங்களுக்கு இருக்கிறது.
வரதட்சணை கொடுமை:
அதன் பிறகு சரியான வயதில் நீங்கள் திருமணம் செய்து கொள்கிறீர்கள் என்றாலும் வரதட்சணை வாங்காமல் இருப்பதற்காக சட்டங்களும் இருக்கிறது. வரதட்சணை கேட்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான சட்டம். ஆனால் தற்பொழுது அதை பெரிதாக யாரும் மதிப்பதில்லை. அதை கொடுப்பதுதான் கவுரவமாக நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் யாருமே எதற்காகவும் வரதட்சணை கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.
குடும்ப வன்முறை:
திருமணத்திற்கு பிறகு பெண்களுக்காக குடும்ப வன்முறை சட்டங்கள் இருக்கிறது. நாம் திருமணம் செய்து கொள்ள போகும் கணவர் மற்றும் அவர்களின் வீட்டார் யாரும் நம்மை வன்முறைக்கு உள்ளாக்க கூடாது. உடல், மனம், பணரீதியான எந்த வன்முறையும் ஒரு பெண் மீது நிகழ்த்தக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. இது போன்ற வன்கொடுமைகளை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்றால் ஒவ்வொரு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் ஆபீஸ்லயும் protection ஆபீஸர் என்று பெண்களுக்காக ஒருவர் இருப்பார். அவர்களிடம் சென்று நாம் இதற்கான தக்க நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த சட்டத்தில் உள்ள முக்கியமான உரிமை என்னவென்றால் ஒரு பெண் தற்போது திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்கிறார் என்றால் இந்த வன்முறைகளுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே போ, உங்க அம்மா வீட்டுக்கு போ என்று எளிமையாக சொல்லுவார்கள். அப்படி சொல்வதற்கே முதலில் யாருக்கும் உரிமை இல்லை. இந்த சட்டம் உங்கள் கணவர் வீட்டில் அல்லது மாமியார் வீட்டில் இருப்பதற்கான முழு உரிமையை உங்களுக்கு தருகிறது. உங்களை வெளியே போ என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதேபோல் உங்களுக்கான மெயின்டனன்ஸையும் அவர்கள் தர வேண்டும். அவர்களுடைய உணவு, உடை, சுத்தமான இடம் என அனைத்தையும் கணவர் கொடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறார். இந்த உரிமை இந்த சட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதுபோன்ற வன்முறைகளை அனுபவிக்கும் பொழுது உங்களுக்கு மனதளவில் சிக்கல்கள் இருக்கிறது என்றால் அதற்கான கவுன்சிலிங் போன்ற விஷயங்களை அரசாங்கம் இலவசமாக கொடுக்க வேண்டும். அதேபோல் அரசாங்கமே உங்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கான இடத்தையும் தர வேண்டும். நீங்கள் குடும்ப வன்முறையில் தவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உடனடியாக உங்களை அதிலிருந்து காப்பாற்றி இதுபோன்ற அடிப்படை விஷயங்களை செய்து கொடுப்பது இந்த சட்டத்தில் உள்ளது.
வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:
இப்பொழுது நீங்கள் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருக்கிறீர்கள் என்றால் பணியிடங்களில் சீண்டல்கள் அல்லது harrasment நடந்தால் உதாரணத்திற்கு கண்ணடிப்பது, சிக்னல் கொடுப்பது, அசிங்கமாக பேசுவது, பாட்டு பாடுவது இதெல்லாம் கூட இதில் அடங்கும். ஒரு ரேப் நடந்தால் தான் புகார் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. இது போன்ற விஷயங்கள் நடந்தாலும் அது harrasment தான். இப்படி உங்களுக்கு பிடிக்காத விதத்தில், uncomfortable ஆக இருக்கும் படி யாராவது பேசினார்கள் என்றால் உடனடியாக பணிபுரியும் பெண்களுக்கு மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான சட்டத்தின் கீழே ICC என்ற ஒரு கமிட்டி இருக்கும். அதில் நீங்கள் புகார் கொடுக்கலாம். முதலில் உங்கள் இருவரையும் ஒரே பணியிடத்தில் வைத்திருக்க மாட்டார்கள். அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள், விசாரிப்பார்கள், குற்றம் அவர்கள் மீது நிரூபிக்கப்பட்டால் அந்த நபரை வேலையை விட்டு எடுப்பதில் இருந்து ப்ரோமோஷன் தடை செய்வது போன்ற அனைத்து விதமான உரிமைகளும் அந்த ICCக்கு இருக்கிறது. இந்த சட்டத்தை பயன்படுத்தி பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது.
இதுபோன்று ரோட்டில் நடக்கும் பொழுது, பேருந்து செல்லும் பொழுது நடக்கும் harrasment நடந்தால் என்ன செய்ய வேண்டும், காவல்துறையினர் பெண்களை எப்படி நடத்த வேண்டும் போன்ற பல பயனுள்ள தகவல்களை Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில்(podcast) திலகவதி பகிர்ந்துள்ளார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
Click Here: Women should know these basic rights - Advocate Thilagavathi | Personal Safety Trainer
Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni(Kannammas content)
Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் Kannammas content
Suggested Reading: இந்த நான்கு விஷயங்களும் ஒரு பெண்ணை குணமற்றவளாக மாற்றாது
Suggested Reading: பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்