Advertisment

பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி

ஒருவர் நம்மை பிளாக்மெயில் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்றும் பாலியல் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும் வழக்கறிஞர் திலகவதி தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

author-image
Devayani
New Update
Thilo Rebel Advocate Thilagavathi

Images are used from Thilagavathi's Instagram Handle(thilo_rebel)

பல சூழ்நிலைகளில் அல்லது நஞ்சு வாய்ந்த உறவுகளில் பெண்கள் மாட்டிக்கொண்டு அதிலிருந்து எப்படி வெளிவருவது என தெரியாமல் இருக்கின்றனர். அதில் ஒன்றுதான் புகைப்படங்களை வைத்து பிளாக்மெயில் செய்வது. இப்படி நடக்கும் பொழுது ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் பாலியல் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் வழக்கறிஞர் திலகவதி விளக்கியுள்ளார்.

Advertisment

புகைப்படங்களை வைத்து யாராவது பிளாக்மெயில் செய்தால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் இது போன்ற மார்பிங்(morphing) செய்யும்பொழுது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் நம்முடைய தவறு கிடையாது. இதில் குற்ற உணர்ச்சியும், அசிங்கம் எதுவும் இல்லை. இந்த புகைப்படங்கள் வெளியில் சென்றாலும் அதற்காக அசிங்கப்பட போவது நாம் கிடையாது. ஏனென்றால் இரண்டு விதத்தில் தான் ஒரு பெண்ணுடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்வார்கள். ஒன்று அவர்களுக்கு தெரியாமல் சமூக வலைத்தளங்களில் இருந்து புகைப்படங்களை எடுத்து இதுபோன்று செய்வார்கள். அப்படி இல்லை என்றால் காதலர்களிடம் நம்பிக்கையின் அடிப்படையில் அனுப்பிய புகைப்படங்களை காதல் தோல்விக்கு பிறகு அல்லது நஞ்சு வாய்ந்த காதல் உறவாக இருக்கும் பொழுது அதை தவறாக பயன்படுத்துவார்கள். இது இரண்டிலுமே பெண்களின் தவறு கிடையாது. சமூக வலைத்தளங்களில் இருந்து இவர்களுக்கு தெரியாமல் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை அந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் தவறாக பயன்படுத்தியவர்கள் தான் அசிங்கப்பட வேண்டும். நாம் அதற்காக அவமானப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

இரண்டாவது, இது பெற்றோர்களுக்கு தெரிந்து விடுமோ, வீட்டில் ஏதாவது சொல்லுவார்களோ என்று பயப்பட வேண்டாம். வீட்டில் என்ன சொன்னாலும் பரவாயில்லை, இன்னொரு நபர் தொடர்ச்சியாக நம்மை பிளாக்மெயில் செய்கிறார்கள். நான் சொல்வதை நீ கேட்கவில்லை என்றால் இந்த புகைப்படங்களை நான் வெளியில் பகிர்ந்து விடுவேன், உனது பெற்றோர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று ஒரு வன்முறைக்குள் நம்மை தள்ளப் பார்க்கிறார்கள். இல்லையென்றால் அதை வைத்து நம்மிடம் பணம் கேட்கிறார்கள் என்றாலும் நாம் சைபர் கிரைமில்(cyber crime) அல்லது காவல்துறைக்கு சென்று அதை காண்பிடென்ஷியலாக(confidential) கையாள முடியும். 18 வயதிற்கு மேல் இருக்கிறீர்கள் என்றால் இதுபோன்று ஒரு த்ரெட்டனிங்(threatening) வருகிறது என்று கான்பிடென்ஷியலாக நீங்கள் இதை எடுத்துச் செல்லலாம். ஒருவர் என்னை பயமுறுத்துகிறார் என்று சொல்லி நீங்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்.

Advertisment

ஆனால், என்ன செய்ய கூடாது என்றால் அந்த விஷயத்திற்கு அடிபணிந்து நமக்கு அசிங்கமாகிவிடும், அவமானமாகிவிடும் என்று எண்ணி திரும்பத் திரும்ப அந்த வன்முறையில் நீங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது. நமக்கு இதில் அசிங்கம் கிடையாது. ஊர் என்ன சொல்லும், உலகம் என்ன சொல்லும், அவன் என்ன சொல்லுவான் என்று நினைத்து நம் வாழ்க்கையை முடித்துக் கொள்ள கூடாது. இதனால் ஒரு பயனும் கிடையாது‌. இது நமது வாழ்க்கை. அவமானம், அசிங்கம் போன்ற விஷயங்கள் நமது உடலில் கிடையாது. உடல் அவ்வளவு புனிதமாக்கப்பட்ட வேண்டிய பொருள் அல்ல என்று பெண்கள் முடிவு செய்ய வேண்டும்.

sex education

பாலியல் கல்வியின் முக்கியத்துவம்:

Advertisment

இன்றைய காலகட்டத்தில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் நிறைய நடக்கிறது. இதை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் தான் நாம் ஒரு ஆர்வத்தில் தெரிந்து கொள்ளும் அரைகுறையான விஷயங்கள் நிறைய குற்றங்களுக்கு வழி வகுக்கிறது. குழந்தையிலிருந்து பயாலஜியில்(biology) இருக்கும் விஷயங்களை கூட எந்த ஆசிரியரும் ஒழுங்காக எடுப்பது கிடையாது. இதனால் பாலியல் பற்றியும் பாலியல் கல்வி பற்றிய புரிதல்களும் நம் சமூகத்தில் தவறாக உள்ளது.

பாலியல் கல்வி என்றால் நம் உடலை பற்றி முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். இது வந்து ஒரு ஆணின் உடல், இது ஒரு பெண்ணின் உடல், ஆண் பெண்ணை தாண்டி வேறு என்னென்ன பாலினங்கள் இருக்கிறதோ அவர்களைப் பற்றின புரிதல்கள் என அனைத்து அடிப்படையான விஷயங்களையும் அதில் கற்றுக் கொடுக்க வேண்டும். வளர் இளம் பருவத்தில் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். உணர்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களில் இருந்து உடலில் தோன்றக்கூடிய மாற்றங்கள் வரை அனைத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு குழந்தை பெறுதல் என்றால் என்ன இது அனைத்தையும் நாம் ஒழுங்காக புரிதலோடு பாடத்திட்டத்தில் கற்றுக் கொண்டால் வெளியில் சென்று தவறான விஷயங்களை கற்றுக் கொள்ளும் அவசியம் நேராது.

இப்படி இல்லாததால் தான் நிறைய டீன் பிரக்னன்சிஸ்(teen pregnancy) நடக்கிறது. இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலினம் பற்றிய புரிதல்கள் இல்லாமல் காதலில் விழுந்து கடைசியில் பெண்கள் தான் கர்ப்பம் ஆகிறார்கள். ஒரு கட்டம் வரை அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு தெரியாது. அதன் பிறகு அவர்களால் அதை கலைக்கவும் முடியாது. அப்பொழுது 14, 15 வயதில் இருக்கக்கூடிய ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர். இது போன்ற எடுத்துக்காட்டுகள் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது என்பது நமக்கு தெரியும். இப்படி ஒரு விஷயத்தை ஒரு குழந்தை செய்து வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வதற்கு பதிலாக அவர்களுக்கு புரியும்படி வயதிற்கு ஏற்ப பள்ளியில் பாலியல் கல்வி கொண்டு வந்தால் இந்த மாதிரி நிறைய பாலியல் குற்றத்தில் பாதிக்கப்படும் குழந்தைகளுடைய வாழ்க்கையை மோசமாக மாறுவதில் இருந்து நம்மால் தடுக்க முடியும்.

Advertisment

Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில்(podcast) இது போன்ற பல பயனுள்ள தகவல்களை வழக்கறிஞர் திலகவதி பகிர்ந்துள்ளார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: Women should know these basic rights - Advocate Thilagavathi | Personal Safety Trainer

Advertisment

Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni(Kannammas content)

Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் Kannammas content

Suggested Reading: இந்த நான்கு விஷயங்களும் ஒரு பெண்ணை குணமற்றவளாக மாற்றாது

Advertisment

Suggested Reading: பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்

thilo rebel Advocate Thilagavathi blackmail sex education
Advertisment