Digital Marketing பற்றி தமிழில் கற்று தருகிறார் Sangeetha S Abishek

Devayani
01 Feb 2023
Digital Marketing பற்றி தமிழில் கற்று தருகிறார் Sangeetha S Abishek

இன்று இருக்கும் காலகட்டத்தில் எல்லா தொழில்களும் ஆன்லைனில் இருப்பது அவசியமாகிறது. அது மக்களுக்கும், தொழில் நடத்துபவர்களுக்கும் பல வகைகளில் நன்மை அளிக்கிறது. பலர் வெறும் சமூக வலைத்தளங்களை மட்டுமே வைத்து பல தொழில் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில்(digital marketing) தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அனைத்து தொழிலுக்கும் தேவைப்படுகின்றனர். 

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி தெரிந்தவர்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. அதனால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு Sangeetha S Abishek என்ற YouTube சேனல் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. Sangeetha S Abishek என்பவர் தனது YouTube சேனலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி தமிழில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். 

தற்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி நிறைய நம்மால் YouTube மற்றும் கூகுளில் தேடி கற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதில் பலர் ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். நாம் ஏதோ ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் எனில் நமது தாய் மொழியில் கற்றுக் கொண்டால் அது மற்ற மொழிகளில் கற்றுக் கொள்வதை விட நன்கு தெளிவாக புரியும். Sangeetha S Abishek அவர்கள் YouTube சேனலில் தமிழில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி பதிவிடும் வீடியோக்களை பார்க்கும் பொழுது தமிழை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கிறது.

Learn digital marketing in tamil

யார் இந்த Sangeetha S Abishek?

இவர் சென்னையை சேர்ந்த டிஜிட்டல் மார்க்கெட்டர்(Digital Marketer) மற்றும் ஏஜென்சி ஓனர் ஆவார். இவர் பல பிராண்டுகளுடன் வேலை செய்துள்ளார். குறிப்பாக பியூட்டி(beauty), ஃபேஷன்(fashion), டெக்ஸ்டைல்(textile), ஜுவல்லரி போன்ற பிராண்டுகளுக்கு இவரின் வேலைகள் குறிப்பிடத்தக்கது. இவர் B Schoolல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுத்தரும் ஒரு professor ஆகவும் திகழ்கிறார். 

இவர் ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியில் வேலை செய்துள்ளார். அங்கு வேலை ஒழுங்காக நடக்காததை பார்த்து, இங்கு இருந்தால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது என்பதால் அதிலிருந்து விலகி வேறு ஒரு கம்பெனியில் மார்க்கெட்டிங் ஹெட்டாக(Marketing Head) பணியாற்றியுள்ளார். அதிலிருந்து கிடைத்த தைரியத்தையும், நம்பிக்கையும் வைத்து தானே புதிதாக SODME என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியை தொடங்கியுள்ளார்‌. SODME என்றால் School of Digital Marketing Excellence. 

SODME Digital Marketing Agency Founder

இவர் பல மேடைகளுக்கு பேச்சாளராக அழைக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக பிசினஸ் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சம்பந்தமான மேடைகளில் இவர் ஒரு பேச்சாளராக உள்ளார். தற்போது அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி பிராண்டுகளுக்கு உதவுவது மட்டுமில்லாமல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்களுக்கு workshop மற்றும் courseகளை எடுத்து வருகிறார்.

தனது YouTube சேனல் மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங்(Digital Marketing) பற்றி நிதானமாக அனைவருக்கும் புரியும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி கற்றுக்கொள்ள நினைப்பார்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். 

FB Ads in Tamil

இவர் Facebook Ads, Instagram Marketing, Content Creation, LinkedIn போன்ற அனைத்து விஷயங்களையும் தனது YouTube சேனலில் பதிவிட்டு வருகிறார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணராக இருக்கும் இவர் ஒரு தொழிலுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டராக என்னென்ன செய்ய வேண்டும் என்பது முதல் நேர்முகத் தேர்வுகளில் எப்படி தேர்ச்சி பெறுவது வரை அனைத்தையும் தனது YouTube சேனலில் பதிவிட்டுள்ளார்.

முன்பு கூறியது போலவே அனைத்து தொழிலும் டிஜிட்டலில் தனக்கான ஒரு இடத்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் இந்த நேரத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் தேவைப்படுகின்றனர். அதனால், அதற்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது.

Sangeetha S Abishek அவர்களின் YouTube சேனலில் டிஜிட்டல் மார்க்கெட்டிங்(Digital Marketing) பற்றி கூறுவதோடு மட்டுமல்லாமல் அதன் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்றும் யாருக்கு இந்த வேலை சரியாக இருக்கும் என்றும் பல தகவல்களை தனது YouTube சேனலில் பதிவிட்டு வருகிறார்.

Instagram marketing in tamil

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றால் என்ன என்பது முதல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்தால் எந்தெந்த வேலைகளுக்கு செல்லலாம் என்பது வரை அனைத்தையும் தமிழில் மக்களுக்கு புரியும் வகையில் பதிவிட்டு வருகிறார்.

இவர் ஆரம்பித்த இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி பல பிராண்டுகளுக்கு உதவி உள்ளது. மற்றும் பல வெற்றி கதைகளையும் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

உங்களுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing)பற்றி தமிழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் Sangeetha S Abishek என்ற பெயரில் உள்ள இவரது YouTube சேனலை நீங்கள் பார்க்கலாம். நிச்சயம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு இது உதவியாக இருக்கும்.


Suggested Reading: ஊக்கமளிக்கும் ஐந்து பெண் தொழில் முனைவர்கள்

Suggested Reading: Home Cooking Show வெற்றியின் காரணம் - Hema Subramanian

Suggested Reading: Anupama's Vriksham பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!⁠⁠⁠⁠⁠⁠⁠

அடுத்த கட்டுரை