Advertisment

Anupama's Vriksham பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!

அனுபமா பெண்களுக்கு பலவிதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் பெண்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அவரின் வாழ்க்கை கதை இந்த செய்தி தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anupama with her family

Images are used for representational purpose only

ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு ஆதரவாக இருந்தால் சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அனுபமாவும் அவரது மாமியாரும் இருந்து வருகின்றனர். காலம் காலமாக மாமியார் மருமகள் உறவு என்பது சண்டை சச்சரவுகளை தான் கொண்டிருக்கும் என மக்கள் நம்பி வருகின்றனர். இவரைப் போன்றவர்கள் மூலம் மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கலாம் என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளும். 

Advertisment

எல்லா பெண்ணிற்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு கனவு இருக்கும். காலம் போக போக சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் இந்த ஆணாதிக்க பிடியில் மாட்டிக்கொண்டு அவர்களை அறியாமலேயே அதனை பின்பற்றுகின்றனர். அந்த நிலை தற்போது மாறி வருகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக தான் இவர்களின் உறவு இருக்கிறது.

திருப்பூரை சேர்ந்த அனுபமா 2008ல் திருமணம் முடிந்து தனது கணவருடன் சென்னை வந்தார். அவர் கர்ப்பமாக இருந்த போது கர்ப்பத்தை பற்றி நிறைய கேள்விகள் அவருக்கு இருந்தது. ஆனால் அந்த எந்த கேள்விகளுக்கும் அவருக்கு சரியான விடை கிடைக்கவில்லை. அவர் புகுந்த வீட்டில் யாரிடமும் பெரிய அளவில் பழக்கம் இல்லாததால் முதலில் தயக்கத்துடன் இருந்தார். குழந்தை பெற்ற ஆரம்ப காலத்தில் தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு தனிமையாக இருப்பது போல் அவர் உணர்ந்தார். பிறகு யாரிடமும் பெரிய அளவில் பழக்கம் இல்லாததால் பல சமயங்களில் தனது மாமியாருக்கும் அவருக்கும் இடையே மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்(misunderstanding)  ஏற்பட்டிருக்கிறது.

Anupama with MIL

Advertisment

ஆனால் இவர் ஒரு மகனை பெற்றெடுத்ததற்கு பின்பு, தனது மாமியாரின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள தொடங்கினார். அதேபோல் அவரின் மாமியாருக்கும் சில கனவுகள் இருந்ததாகவும் தெரிந்து கொண்டார். ஆனால் வீட்டை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் அவரின் மாமியார் அந்த கனவுகளை எல்லாம் தியாகம் செய்து முழு நேரம் வீட்டை பார்த்துக் கொள்ள தொடங்கி விட்டார் என்பதை தெரிந்து கொண்டார். அதன் பிறகு அனுபமாவின் கனவுக்காக அவரது மாமியாரும் ஆதரவளிக்க தொடங்கினார். அனுப்பமாவின் எல்லா முயற்சிகளிலும் அவருக்கு ஆதரவாக அவர் மாமியார் இருந்துள்ளார். பலமுறை தனது மாமியார் தான் அவரை ஊக்குவித்ததாகவும், அவர்தான் “நீ சென்று உனது  கனவுகளுக்காக உழைக்க தொடங்கு, நான் வீட்டை பார்த்துக் கொள்கிறேன்” என்று ஆதரவை தந்துள்ளார்.

தனது கர்ப்ப காலத்தில் நிறைய சந்தேகங்கள் இருந்ததை அடுத்து அதைப் பற்றி ஆன்லைனில் படிக்க தொடங்கினார். அதில் பல விஷயங்களை அவர் தெரிந்து கொண்டார். அதன் பிறகு அந்த விஷயங்களை அவரை சுற்றி உள்ளவர்களுக்கு அறிவுரையாக கூறினார். அவருக்கு இதன் மேல் இருந்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்காக நிறைய சர்டிபிகேட் கோர்ஸ்களை(Certificate Course) அவர் படித்துள்ளார். குறிப்பாக Child Birth Educator, Pregnancy Fitness Educator, Lactation Educator மற்றும் Birth Doula போன்ற சான்றிதழ்களை அவர் பெற்றுள்ளார். இதில் அவர் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் கற்றுக் கொண்ட விஷயங்கள் Vriksham என்று ஒரு தளத்தை உருவாக்க அவருக்கு பயனுள்ளதாக இருந்தது. 

Anupama Vriksham Students

Advertisment

2017 இவர் ஆன்லைனில் மூலம் பெண்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கினார். இதையெல்லாம் பெண்களுக்கு மட்டும் கற்றுத் தராமல் கணவர்களையும் அவர்கள் உடன் வந்து கற்றுக் கொள்ளுமாறு அவர் அறிவுரை கூறுகிறார். குழந்தையை பெற்றெடுப்பதும், வளர்ப்பதும் தாயின் கடமை மட்டுமல்ல அதில் தந்தைகளுக்கும் சமமான பங்கு உள்ளது என்பதை மக்களுக்கு புரிய வைத்து வருகிறார். ஆரம்பத்தில் கணவர்கள் கொஞ்சம் தயங்கியதாகவும் ஆனால் அந்த நிலை இப்பொழுது மாறி வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.

அதுமட்டுமின்றி இவர் தனது சமூக வலைத்தளங்களின் மூலம் பெண் சமத்துவதற்காகவும், ஆணாதிக்கத்தை ஒழிக்கவும் குரல் கொடுத்து வருகிறார். இவர் #voiceitout என்ற hashtag மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாகுபாடுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டி, அது தவறு என்றும் புரிய வைத்து வருகிறார்.

அனைவருக்கும் தடைகள், பிரச்சனைகள் என்பது இருக்கும். ஆனால், பெண்கள் என்று வரும்போது அது ஆண்களை விட அதிகமாகவே இருக்கும். இந்த சமூகத்தில் அல்லது சாதாரணமாக வீட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாட்டையும் தனது வீடியோக்களின் மூலம் பதிவிட்டு வருகிறார். சிறுவயதில் இருந்து பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், திருமணத்திற்கு பிறகு மற்றும் குழந்தை பெற்ற பிறகு அவர்களுக்கு சமூகத்தால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தனது வீடியோக்களின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Anupama with her family

Advertisment

இவர் கூறும் செய்திகளும், இது போன்ற பதிவிடும் வீடியோக்களும் பல பெண்களுக்கு அவர்கள் வாழ்க்கையுடன் தொடர்பு கொள்ள முடிகிறது என்பதால் அனுபமாவிற்கு அவர்கள் தொடர்ந்து ஆதரவை அளித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் தற்போது 8.5 லட்சம் ஃபாலோவஸ்க்கு(followers) மேல் அவருக்கு இருக்கின்றனர். மேலும் அவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு மற்றும் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் அதைப் பற்றிய பாடங்களை எடுத்துள்ளார்.

இவரது இந்த பணிக்காக She, JFW போன்ற பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். JFWவில் விருது வாங்கும் பொழுது அவர் தனது வெற்றிக்கான காரணம் தனது மாமியார் என்றும் அவர் தன்னை ஆதரித்து வருவது தான் அவர் முன்னேறுவதற்கான முக்கிய காரணம் என்றும் கூறி, பெண்கள் மற்ற பெண்களை ஆதரித்தால் இந்த சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிட்டார். அதற்காக பல லட்சம் பெண்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. வீட்டில் உங்களுடன் இருக்கும் சக பெண்களை நீங்கள் ஆதரித்தாலே சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என்பதை மக்களுக்கு விளக்கினார். மேலும், கர்ப்ப காலத்தில் மற்றும் குழந்தை பெற்றெடுக்கும் போது கணவன் ஒரு பெண்ணுடன் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், அது ஒரு பெண்ணிற்கு எவ்வளவு ஆதரவு தரும் என்பதையும் அவர் விளக்கினார்.

Advertisment

Suggested Reading: தீபா அக்கா (Deepa CWC) சிரிப்புக்கு பின்னாடி இவ்வளவு சோகமா?

Suggested Reading: யார் இந்த Bigg Boss 6 ஷிவின் கணேசன்(Shivin)?

Suggested Reading: தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி சிமு(Srimathi Chimu)

Advertisment

Suggested Reading: பணிபுரியும் பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் கணவர்கள் 

pergnancy tips pregnancy Vriksham Anupama Vriksham
Advertisment