Advertisment

குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?

குக் வித் கோமாளி கனியின் வாழ்க்கையை பற்றியும் மற்றும் அவரின் வாழ்க்கையில் அவருக்கு பெரிய உதவியாக இருந்த ஒன்றை பற்றியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
cwc

கார்த்திகா என்கின்ற கனி(Kani) குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவருக்கு நெருக்கமானவர்கள் இவரை கனி என்று அழைக்கின்றனர். அவரின் தந்தை அகத்தியன் மற்றும் கணவர் திரு இருவருமே இயக்குனர்கள் ஆவார்கள். சிறுவயதில் இருந்து கனி பல பிரச்சினைகளை கடந்து வந்துள்ளார். 

Advertisment

அப்பொழுதெல்லாம் அவருக்கு அந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவர எது உதவியது என்பதை Sha Boo Three என்ற YouTube சேனலில் RJ Sha கனியின் வாழ்க்கை பற்றிய ஒரு வீடியோவில் பதிவிட்டிருப்பார்.

கனிக்கு சிறுவயதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அந்த பிரச்சனைகளில் மற்றும் கவலைகளில் இருந்து வெளிவர அவருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டுமே உதவியது. கனி சிறுவயதில் இருக்கும் போது ஒரு நாய்க்குட்டியை வளர்த்துள்ளார். அந்த நாய்க்குட்டி வீட்டை விட்டு சென்ற பிறகு மிகவும் வருத்தப்பட்டு மன அழுத்தத்தில் இருந்தார். அப்போது அவர் தந்தை அவருக்கு சில புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொன்னார். அவர் புத்தகங்களை படித்த போது அந்த கவலை கொஞ்சம் கொஞ்சமாக போய்விட்டது.

kani

Advertisment

அதேபோல் சிறுவயதில் இருந்து தமிழ் மீடியத்தில் படித்ததால் அவர் கல்லூரிக்கு சென்ற பிறகு ஆங்கிலத்தை கண்டாலே அவருக்கு ஒரு பயம் ஏற்பட்டது. இதனாலேயே அவருக்கு 22 அரியர்களும் வந்தது. படித்துக் கொண்டிருந்தபோது ஒரு முறை அம்மை நோயால் அவர் வீட்டில் இருப்பது போல நாட்கள் வந்தது. அப்பொழுதும் அவர் நிறைய புத்தகங்களை படித்துள்ளார். அப்பொழுதுதான் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற புத்தகங்களை படித்துள்ளார். இந்த புத்தகங்களை படித்த பிறகு அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்தது. அதன் பிறகு அந்த 22 அரியர்களையும் அவர் கிளியர்(clear) செய்துள்ளார்.

அதேபோல் அவர் மக்கள் டிவியில் தொகுப்பாளராக வேலை செய்தபோது அவர் படித்த புத்தகங்கள் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. மீண்டும் லாக் டவுனில் பணரீதியாக சில கஷ்டங்கள் வந்தபோது, அவருக்கு கதை சொல்ல பிடிக்கும் என்பதால் அதற்காக ஒரு YouTube சேனலை ஆரம்பித்தார். அதிலும் புத்தகங்கள் தான் அவருக்கு உதவியாக இருந்தது. இப்படி எல்லா சமயங்களிலும் அவருக்கு புத்தகங்கள் தான் கை கொடுத்திருக்கிறது.

அதன் பிறகுதான் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதில் மிக அருமையாக சமைத்து, நல்ல கமெண்ட்களையும் அவர் பெற்றார். மேலும் அவரின் இயல்பான குணம் மக்களுக்கு பிடித்திருந்தது. அதனாலேயே அவர் பலரால் கனி அக்கா என்று அழைக்கப்படுகிறார். அவரின் கடின உழைப்பால் குக் வித் கோமாளி சீசன் 2வின் டைட்டிலையும் அவர் வென்றார். 

Advertisment

winner

மேலும் தியேட்டர் டி(Theatre D) என்ற YouTube சேனல் மூலம் அவர் தனது சமையல் செய்முறைகளையும், பொன்னியின் செல்வன் கதையையும் தற்போது மக்களுக்கு சொல்லி வருகிறார். இவர் பொன்னியின் செல்வன் கதை சொல்வதை கேட்பதற்காகவே பலர் அந்த சேனலை சப்ஸ்கிரைப்(648K subscribers) செய்துள்ளனர். மிகவும் எளிமையான முறையில் அனைவருக்கும் புரியும்படி ஒவ்வொரு விஷயத்தையும் அவர் தெளிவாக கூறி வருகிறார். சிலருக்கு புத்தகம் படிக்க பிடித்தாலும் அதில் உள்ள பல விஷயங்கள் புரியாமல் போக வாய்ப்பு உள்ளது. இவர் கதை சொல்வதை கேட்டால் அந்த சந்தேகங்களும் தீர்ந்து விடும். அவ்வளவு எளிமையாக ஒவ்வொரு விஷயத்திற்கும் அதன் அர்த்தத்தோடு மக்கள் கேட்க விரும்பும் விதத்தில் அவர் பொன்னியின் செல்வன் கதையை சொல்லி வருகிறார்.

கனியின் குணம்:

கனி அனைத்து விஷயங்களையும் பாசிட்டிவாக(positive) எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர். மேலும் அவருக்கு அவர் சோகமாக இருந்தால் பிடிக்காது என்பதால் அவரை சோகப்படுத்தும் விஷயத்தில் இருந்து அவர் விலகியே இருப்பார் என்பதை ஒரு நேர்காணலில் அவர் கூறினார்.

Advertisment

இது மட்டும் இன்றி அவர் எண்ணற்ற திறமைகளை அவர் கொண்டுள்ளார். அவருக்கு இரு மகள்கள் உள்ளார்கள். கல்லூரியில் 22 அரியர்கள்  வைத்திருந்த ஒரு பெண் ஒரு பிரபலமான நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அதன் பட்டத்தையும் வென்றிருக்கிறார். இவரின் வாழ்க்கை கதை பலருக்கு ஒரு ஊக்கமாக இருந்து வருகிறது. மேலும் அவர் சில திரைப்படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக(costume designer) வேலை செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Suggested Reading: Dhee பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

Advertisment

Suggested Reading: Home Cooking Show வெற்றியின் காரணம் - Hema Subramanian

Suggested Reading: Amma samayal மீனாட்சியின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: குறைபாடு என்று மற்றவர்கள் கூறியதை தனது அடையாளமாக மாற்றினார் Ramya

kani kani cwc
Advertisment