Advertisment

குறைபாடு என்று மற்றவர்கள் கூறியதை தனது அடையாளமாக மாற்றினார் Ramya

ஒரு ஃபிலிம் மேக்கராக, மாடலாக, ஊக்கவிக்கும் பேச்சாளராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார் ரம்யா. பலரை ஊக்குவித்து வரும் ரம்யாவின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
vitiligo model ramya

Image of Ramya

பல நிராகரிப்புகளை தாண்டியும், பல தடைகளை தாண்டியும் இன்று அவரைப் போல் உள்ளவர்களுக்காக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மட்டுமல்லாமல் பலரை ஊக்குவித்து வருகிறார் Vitiligo Model Ramya.

Advertisment

சிறுவயதில் இவருக்கு Vitiligo இருப்பதை கண்டறிந்தனர். அதாவது தோலில் melanin சத்து குறைவாக இருப்பதே Vitiligo என்று கூறுவர். அவர் பிறந்த போது இதைப் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலும் யாருக்கும் கிடையாது, ஏன் மருத்துவர்கள் கூட அதை எளிதில் கண்டறியவில்லை. குழந்தையாக இருக்கும் பொழுது உணவு எடுத்துக்கொள்ள ஆரம்பித்த போது அவர் தோளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் இவர்கள் ஒரு மருத்துவரை அணுகியுள்ளனர். ஆனால் அந்த மருத்துவர் இவருக்கு ஓவர் டோஸ் அளித்ததால் தோலில் ஏற்படும் மாற்றங்கள் அதிகரிக்க தொடங்கியது.

இப்படி சிறுவயதில் இருந்து இதற்காக பல மருத்துவரை இவர் அணுகி உள்ளார். பல சிகிச்சைகளையும் பெற்றுள்ளார். ஆனால் எந்த மருத்துவருக்கும் இதற்கான தீர்வு தெரியவில்லை. அனைவரும் இவரை வைத்து முயற்சிகள் தான் எடுத்தார்களே தவிர, நிரந்தரமான தீர்வு எதுவும் கொடுக்கவில்லை. 

vitiligo model ramya

Advertisment

இப்படி இருக்க இவருக்கு பள்ளி பருவமும் மகிழ்ச்சியாக அமையவில்லை. மற்றவர்களை விட வித்தியாசமாக இருப்பதால் பலர் இதை ஒரு தொற்று நோய் என்று நினைத்து இவருடன் பேசுவதை தவிர்த்தனர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்தும் நிறைய பாகுபாடுகளை அனுபவித்துள்ளார். அதனால் பள்ளி பருவத்தில் இவருக்கு நண்பர்கள் எவருமில்லை. ஒரு சின்ன பெண் இது போன்ற அனுபவங்களை சந்தித்ததால் அது அவருக்கு ஆழ்மனதில் பதிந்துள்ளது.

பள்ளி பருவம் ஒரு புறம் எப்படி இருக்க, Vitiligoவை சரி செய்து கொள்வதற்காக மருத்துவர்களிடம் சிகிச்சைகளை பெற்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருமுறை UV ஒளி மூலமாக சிகிச்சையை இவர் பெற்றார். இந்த சிகிச்சை பெறும் பொழுது உடம்பெல்லாம் பயங்கரமாக எரியும் என்றும் அதை அவர் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார். இப்படி அந்த சிகிச்சை பல நாட்களுக்கு சென்று கொண்டிருந்தது. அதே சமயத்தில் இவர் உடல் வலுவிழந்து இருப்பதையும் இவர் கண்டறிந்துள்ளார். அதனால் வேறொரு மருத்துவரிடம் சென்ற பொழுது அவர் இந்த சிகிச்சையினால் தான் உடம்பில் ஹீமோகுளோபின் மிகவும் குறைந்துள்ளது என்றும் இது உயிருக்கே கூட ஆபத்தாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். சிகிச்சை என்ற பெயரில் இது மாதிரியான மோசமான விஷயங்களை இவர் சந்தித்ததால் இனி இதற்காக எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுத்தார். இது மாற்ற முடியாத ஒன்று என்பதை புரிந்து கொண்டு, மருந்துகள் இவருக்கு எந்த விதத்திலும் பயனளிக்க போவதில்லை என்பதையும் உணர்ந்தார்.

பள்ளிப் பருவத்தில் மோசமான அனுபவங்களை எதிர்கொண்டு இருந்தாலும் கல்லூரியில் தன்னை மெருகேற்றிக் கொண்டார். அவரை கல்லூரியில் நன்கு மாடர்ன் ஆகவும், ஸ்டைலிஷ் ஆகவும் மாற்றிக் கொண்டார். அவரை அவரே நேசிக்க ஆரம்பித்த பிறகு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். மேலும் இவர் ஒரு முறை தனது பேஸ்புக் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு கீழே Vitiligoவை பற்றி எழுதியிருந்தார். அதற்கு மக்களிடமிருந்து நிறைய வரவேற்பு கிடைத்தது. அப்படித்தான் அதை பார்த்துவிட்டு ஒருவர் தனது பிராண்டுக்கு ரம்யாவை மாடலாக கேட்டுள்ளார். அதன் பிறகு தான் இவரின் மாடலின் பயணம் தொடங்கியுள்ளது. வெளிநாட்டில் Winnie Harlow என்பவர் vitiligo மாடலாக இருந்த வருகிறார் மற்றும் அவரது தோலை மிகவும் அழகாக நேர்மறையாக காட்டுவது ரம்யாவை பெரிய அளவில் ஊக்குவித்துள்ளது.

Advertisment

vitiligo model ramya

இவர் சிறு வயதில் இருக்கும் பொழுது vitiligo பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் பல நிராகரிப்புகளை இவர் கடந்து வந்துள்ளார். அதனால் இவரை போன்று மற்றவர்களும் நிராகரிப்புகளை எதிர் கொள்ளக்கூடாது என்று மக்களுக்கு இதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இவர் MAAYAAVEEZ என்ற ஒரு NGOயோவையும் ஆரம்பித்திருக்கிறார். ஒருமுறை child sex abuse பற்றிய சர்வேவை படித்த பொழுது அவருக்கும் அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கேட்க ஆட்கள் இல்லை என்ற தைரியத்தில் தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றும் அதை கேள்வி கேட்க ஆள் இருக்கிறது என்றால் இது போன்ற குழந்தைகளுக்கு எதிரான தீங்கினை செய்ய பயப்படுவார்கள் என்றும் அதற்காக MAAYAAVEEZ என்ற NGOவை ஆரம்பித்த குரல் கொடுத்து வருகிறார்.

Advertisment

வாழ்க்கையில் கஷ்டம் வரத்தான் செய்யும் ஆனால் அதை எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். முதலில் நம் முடிவுகளை நாம் மதிக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்கள் அதை மதிப்பார்கள். உங்கள் வாழ்க்கையை மற்றவர்களை ஆள விடாதீர்கள். இதற்காக மற்றவர்களை மதிக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. ஆனால் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதற்காக உங்களை நீங்களே வற்புறுத்திக் கொள்ளக் கூடாது என்றும் கூறுகிறார்.

 

Suggested Reading: Thaai Herbals என்ற தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் Archana

Advertisment

Suggested Reading: Amma samayal மீனாட்சியின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: பல கேலிகளை கடந்து வென்ற Sridevi (Sridevis Contour)

Suggested Reading: தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இலவச ஆலோசனை Nandhini - Entrepreneur

inspiring story Vitiligo Model Ramya
Advertisment