Advertisment

Amma samayal மீனாட்சியின் வாழ்க்கை பயணம்

சிறுவயதில் இருந்து உழைத்த மீனாட்சிக்கு அவரின் 50 வயதுக்கு மேல் தான் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. அவரின் வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
amma samayal

Images are used from Amma Samayal's Instagram handle

YouTube பெரிதாக வளர்வதற்கு முன்பே தனக்கென ஒரு YouTube சேனல் ஆரம்பித்து தற்பொழுது பலர் விரும்பும் சேனலாக இருக்கிறது மீனாட்சியின் Ammas Samayal YouTubeசேனல். ஆனால் இந்த சேனலின் உரிமையாளர் மீனாட்சியின் வாழ்க்கையில் இது எளிதாக நடக்கவில்லை. இந்த ஒரு சேனல் ஆரம்பிப்பதற்கு முன்பு பல வருட கஷ்டங்களும், முயற்சிகளும் இருக்கின்றன.

Advertisment

மீனாட்சி வெறும் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். சிறுவயதிலிருந்தே வீட்டில் கஷ்டம் என்பதால் அவர் வேலைக்கு செல்வதுண்டு. காலையில் வீடுகளுக்கு சென்று பாத்திரங்கள் கழுவி விட்டு பள்ளிக்கு சென்று மீண்டும் பள்ளி முடிந்தவுடன் அதே வீட்டுக்கு சென்று பாத்திரங்களை கழுவி விட்டு வருவார். இதனாலும், வறுமையின் காரணத்தினாலும் அவரால் ஏழாம் வகுப்பிற்கு மேல் படிப்பை தொடர முடியவில்லை. குடும்பத்தில் கஷ்டம் என்பதால் வீட்டில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மீனாட்சிக்கு 16 வயதில் திருமணம் ஆனது. அவரின் கணவர் அப்பொழுது சென்னையில் மெக்கானிக்காக வேலை பார்த்ததால், அவரும் அவரின் கணவரும் சென்னைக்கு வந்தனர். சென்னை வந்த பிறகும் அவர் பல தொழில்களை நடத்தலாம் என முயற்சி செய்துள்ளார். முதலில் ஒரு ஊறுகாய் தொழிலை நடத்தினர். அப்பொழுது இந்த ஆன்லைன் வசதிகள் எதுவும் பெரிதாக இல்லை. அதனால், தினமும் ஒரு ஏரியாவை தேர்ந்தெடுத்து வீட்டுக்கு வீடு சென்று ஊறுகாயை விற்று வந்தார். ஆனால் அது சில நாட்களில் நஷ்டம் அடைந்தது.

amma samayal

Advertisment

அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த பிறகு வீட்டு பக்கத்தில் வேலைக்காக தங்கி இருக்கும் இளைஞர்களுக்கு சமைத்து கொடுத்துக் கொண்டிருந்தார். காலையில் 5 மணிக்கு எழுந்து அந்த இளைஞர்களுக்காக சமைத்து வைத்து விட்டு, வேலைகளை பார்த்துவிட்டு மற்ற வீடுகளுக்கும் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி சிறுவயதில் இருந்து அவர் உழைத்துக் கொண்டே இருந்தார்.

மீனாட்சிக்கு 50 வயது இருக்கும்பொழுது அவரின் மூத்த மகன் YouTube சேனல் ஆரம்பிக்கலாம் என தனது யோசனையை கூறினார். அப்பொழுது YouTubeல் நல்ல பணம் சம்பாதிக்க முடியும் என்று அவருக்கு தெரியாது. இருப்பினும் அதை முயற்சித்து பார்க்கலாம் என தனது மூத்த மகன் சத்யநாராயணனின் உதவியோடு அவர் ஆரம்பித்தார். எதிர்பாராத விதமாக சேனல் ஆரம்பித்த நான்கு மாதத்தில் அவருடைய மூத்த மகன் ஒரு விபத்தில் தவறிவிட்டார். அதன் பிறகு முழுவதுமாக உடைந்து போன மீனாட்சி தனது மகனின் மூல ஆரம்பித்த இந்த YouTube சேனலை பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என்று எண்ணி அதற்காக உழைக்க ஆரம்பித்தார்.

amma samayal

Advertisment

மீனாட்சியின் இளைய மகளான ரமேஷ் சேனலை நடத்துவதற்காக அவரின் பேங்க் வேலையை விட்டுவிட்டு முழு நேரம் அம்மாவிற்கு உதவியாக இருந்தார். ஆரம்பித்த எட்டு மாதங்களுக்கு பிறகு தான் அவர்களுக்கு YouTubeல் இருந்து முதல் வருமானம் வந்தது. அதன் பிறகு தான் YouTubeஇல் ஓரளவுக்கு நன்றாக பணம் சம்பாதிக்க முடியும் என்பது அவருக்கு தெரிய வந்தது.

50 வயதில் ஒரு YouTube சேனல் ஆரம்பித்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார். ஆனால் இந்த வெற்றியை பார்ப்பதற்கு முன்பு அவர் பல தோல்விகளை சந்தித்துள்ளார். YouTube சேனல் மட்டுமில்லாமல் அவர் மசாலாக்கலையும் ஆன்லைனின் மூலம் விற்பனை செய்து வருகிறார். இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் அவை விற்கப்படுகிறது. அதன்பிறகு ஒரு மளிகை கடையை திறந்துள்ளார். இதையெல்லாம் செய்வதற்கு அவர் பல கஷ்டங்களுடன் உறவினர்களால் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டு உள்ளார். 

youtube amma samayal

Advertisment

பெண்களுக்கு  ஆலோசனை:

"பெண்கள் கண்டிப்பாக சம்பாதிக்க வேண்டும். ஒருத்தர் கையை மட்டும் எதிர்பார்த்து இருக்கும்பொழுது நாம் கூனிக்குறுகி இருக்கிற மாதிரி இருக்கும்". சிறுவயதில் இருந்தே தனக்கான ஒரு வருமானம் வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தற்பொழுது 56 வயதில் அவருடைய மகன்களின் மூலம் ஆரம்பித்து சேனலினால் நிறைய பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்று வருகிறார்.

இளைஞர்களுக்கு ஆலோசனை:

Advertisment

ஒரு தாய் குழந்தைக்காக நிறைய தியாகம் செய்கிறாள். ஆனால் அவள் வீட்டில் மதிக்கப்படுகிறாளா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே, மீனாட்சி அவர்கள் அனைத்து இளைஞர்களிடமும், அவர்களின் தாயிடம் சிறிது நேரம் பேசி அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் வாழ்க்கையில் சாதிக்க உறுதுணையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறார்.

 

Suggested Reading: Hema's Kitchenஇன் YouTube பயணம் தொடங்கிய கதை

Advertisment

Suggested Reading: தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இலவச ஆலோசனை - Nandhini Entrepreneur

Suggested Reading: பல கேலிகளை கடந்து வென்ற Sridevi (Sridevis Contour)

Suggested Reading: Goli Soda Glass Studio ஆரம்பித்த Radhikaவின் வாழ்க்கை பயணம்

cooking recipes amma samayal
Advertisment