Advertisment

Goli Soda Glass Studio ஆரம்பித்த Radhikaவின் வாழ்க்கை பயணம்

ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்று நம்பிய ஒரு வேலையை சிறப்பாக செய்வது மட்டும் இன்றி அதை வைத்து ஒரு தொழிலையும் ஆரம்பித்திருக்கிறார் ராதிகா க்ரிஷ். அவரின் வாழ்க்கை பயணத்தை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Radhika Krish goli soda glass studio founder

Image of Radhika

இந்த சமூகம் பெண்களுக்கு என நிறைய கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது. பெண்கள் இதை எல்லாம் கடந்து தங்களுக்கு பிடித்ததை செய்து வந்தாலும் அவர்களை அறியாமலேயே சில சமயம் இந்த சமூகத்தின் விதிகளை பின்பற்றுகின்றனர். அப்படி ராதிகா கிருஷ் எப்பவரும் தன்னை அறியாமலேயே பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறைக்குள் இருக்க ஆரம்பித்தார். பிறகு தனது வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறைகிறது என்பதை உணர்ந்து அவர் எடுத்த சில முயற்சிகளால் தற்பொழுது சென்னையில் கோலிசோடா கிளாஸ் ஸ்டுடியோவை ஆரம்பித்திருக்கிறார். இந்த தொழிலில் பெரும்பாலும் ஆண்களுக்கானது என்று அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் இந்த பாலின பாகுபாட்டை உடைக்கும்படி சென்னையில் முதல்முறையாக இவர் ஒரு கிளாஸ் ஸ்டுடியோவை திறந்து இருக்கிறார்.

Advertisment

சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து பள்ளி கல்வியை கஷ்டப்பட்டு படித்து முடித்து இருக்கிறார். இவர் 12ஆம் வகுப்பு முடித்த பிறகு தந்தைக்கு USAவில் வேலை கிடைத்ததால் குடும்பத்தோடு அங்கு மாறியுள்ளனர். அங்கு டிகிரி படித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே அவர் நோக்கமாக கொண்டிருந்தார்‌. அதேபோல் படித்து முடித்த உடனே அவருக்கு வேலையும் கிடைத்தது. வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஸ்ரீனி என்பவரை சந்தித்தார். பிறகு சில ஆண்டுகள் கழித்து இருவருக்கும் பிடித்திருந்ததால் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த உடனே ஸ்ரீனி வேலை செய்யும் இடத்திற்கு இவரும் சென்று விட்டார். அப்பொழுது ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார். முதல் குழந்தை பிறந்தவுடன் முழு நேரமாக வீட்டிலிருந்து குழந்தையை பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். இவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் இவருக்கு சொல்லவில்லை. வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு இவர் தானாகவே எடுத்தது.

goli soda glass studio products

Advertisment

சிறுவயதில் இருந்து நாம் அம்மா மற்றும் பாட்டியை பார்த்திருப்போம். அவர்கள் முழு நேரமாக வீட்டிலிருந்து நம்மை வளர்த்திருப்பார்கள். தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெண்ணின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்ற எண்ணம் நமக்குள் வந்து விடுகிறது. இப்படித்தான் ராதிகாவிற்கும் இந்த எண்ணம் வந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறைகிறது என்பதை உணர்ந்தார். அதன் பிறகு பக்கத்தில் ஒரு யுனிவர்சிட்டிக்கு சென்று அங்கு என்ன பாடங்கள் எடுக்கப்படுகிறது என்பதை பார்த்தார். அப்பொழுது தான் எதாச்சையாக கிளாஸ் ப்லோயிங் என்ற ஒரு கிளாசை பார்த்திருக்கிறார்.

மற்றதை விட இது வித்தியாசமாக இருந்ததால் இதை தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. பிறகு அதை முயற்சித்துப் பார்ப்போம் என்று ஒரு இன்ட்ரொடக்க்ஷன் கிளாஸில்(introduction class) சேர்ந்தார். அவருக்கு அது முதல் கிளாஸ் என்பதால் அவருக்கு அது சரியாக வரவில்லை. அதனால் அதை ஒழுங்காக கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணி பல வகுப்புகளில் கலந்து கொண்டார். அவர் கர்ப்பமாக இருந்த பொழுதும் அதை ஒரு தடையாக எண்ணாமல் தனக்கு அது மிகவும் பிடித்திருந்ததால் இதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த கலையில் தேர்ச்சி பெற்று அதில் டிகிரியும் வாங்கி விட்டார்.

goli soda glass studio products

Advertisment

பிறகு அந்த இடத்திலேயே மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம் என சேர்ந்துள்ளார். சில காரணங்களுக்காக 2015இல் குடும்பத்தோடு சென்னைக்கு வர முடிவெடுத்தனர். அப்பொழுது சென்னையில் எந்த ஒரு கிளாஸ் ஸ்டுடியோஸ்சும் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். அதனால் தாமே ஒரு கிளாஸ் ஸ்டுடியோ ஆரம்பித்து மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. ஆனால் அதில் ஒரு சிக்கலாக அதை செய்வதற்கான பொருட்கள் இங்கே கிடைக்கவில்லை. அதை வாங்குவதற்காக வேறு இடங்களுக்கு சென்றார்.

அது ஆண்கள் நிறைந்திருக்கும் ஒரு தொழில் என்பதால் இவர் முதலில் தேவையான பொருட்களை கேட்ட பொழுது அனைவரும் இவருக்கு இங்கு என்ன வேலை, இவருக்கு இதெல்லாம் செய்ய தெரியுமா? என்று சந்தேகமாக பார்த்தனர். பிறகு அவரை செய்து காண்பிக்க சொல்லி அவருக்கு உண்மையாக இந்த தொழில் தெரிந்து இருக்கிறதா என்பதை பார்த்த பிறகு தான் அவருக்கு பொருட்களையே வழங்கியுள்ளனர். இதுபோன்ற ஆண்கள் நிறைந்திருக்கும் ஒரு தொழிலில் தான் பெண்ணாளும் இதை செய்ய முடியும் என்பதை நிரூபிப்பது இவருக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஆரம்பத்தில் சென்னையில் இது புதிதான தொழில் என்பதால் இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லை. அதன் பிறகு சமூக வலைதளங்களின் மூலம் இவர் செய்வதை பதிவிட்ட பிறகு மக்கள் இதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தனர். பிறகு வீட்டில் இருக்கும் கண்ணாடி பாட்டில்களை வைத்து அதை அழகான பொருளாக மாற்றிய வீடியோக்களை மக்கள் பார்த்து இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என இவர் நடத்திய workshopஇல் சேர ஆரம்பித்தனர். அப்படி ஆரம்பித்த இந்த தொழில் தற்போது பல பெரிய ப்ராஜெக்ட்களை அவர் செய்து வருகிறார்.

Advertisment

goli soda glass studio chennai

மேலும், இவர் ஜோஷ் டாக்கில் பேசியபோது பெண்களுக்கு தானாகவே விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது. ஏனென்றால், சிறுவயதில் இருந்து நாம் அப்படி தான் வளர்ந்து வருகிறோம். திருமணத்திற்கு பிறகு கணவர் இருக்கும் இடத்திற்கு மாற வேண்டும், குழந்தை பிறந்த பிறகு வேலையை விட வேண்டும் போன்ற பல விஷயங்களில் நம்மை நாமே தாழ்த்தி எடை போடுகிறோம். 

ஆனால், நான் உங்களை சுயநலமாக இருக்க சொல்லுவேன். உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். மற்றவர்கள் உங்களுக்காக மாறிக் கொள்வார்கள். ஒரு பெண் அவளுக்கு பிடித்ததை செய்து சந்தோஷமாக இருந்தால் மட்டுமே அந்த குடும்பத்தையும், குழந்தையையும் அவள் சந்தோஷமாக பார்த்துக் கொள்ள முடியும். வேலையில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்த பிறகு மீண்டும் வேலை செய்வதற்கு தயக்கமாக தான் இருக்கும். ஆனால், அந்த முதல் அடியை நாம் எடுத்து வைத்தால் பிறகு நாம் நினைக்கும் விஷயங்களை நாம் செய்து முடிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார்.

Advertisment

 

Suggested Reading: சண்முக பிரியா Unique Threads Sarees தொடங்கிய கதை

Suggested Reading: Celebrity Designer Abarnaவின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: Life Coach Priya Thahir பெண்களுக்கு கூறும் ஆலோசனை

Suggested Reading: உடலுறவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் டாக்டர் நிவேதிதா

entrepreneur inspiring story Goli Soda Glass Studio Radhika
Advertisment