Advertisment

Life Coach Priya Thahir பெண்களுக்கு கூறும் ஆலோசனை

Life Coach Priya Thahir பல பெண்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் SheThePeople இடம் Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டிற்காக அளித்த நேர்காணலில் அவரின் வாழ்க்கை பற்றியும் பெண்களுக்காக சில ஆலோசனையும் அளித்துள்ளார்.

author-image
Devayani
New Update
Priya Thahir life coach

Images are used from Priya Thahir's Instagram Handle

Life Coach Priya Thahir வாழ்க்கையில் பல தோல்விகளை கடந்து வந்துள்ளார். தற்பொழுது அவர் பல பெண்களுக்கு லைஃப் கோச்(life coach) ஆக இருந்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வருகிறார். பல தோல்விகளுக்குப் பிறகு தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி தற்பொழுது அவர் பல வெற்றிகளை பார்த்துள்ளார். மேலும் பல பெண்களுக்கு வாழ்க்கையில் அவர்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க உதவி இருக்கிறார். லைஃப் கோச் பிரியா தாகிர் SheThePeople தமிழுக்கு அளித்த நேர்காணலில் கூறிய சில விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

லைஃப் கோச்(Life Coach) என்றால் என்ன?

நமது நாட்டில் லைப் கோச்சிங் என்பது ஒரு புதிய கான்செப்ட் ஆகும். வெளிநாடுகளில் இது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நமது நாட்டில் நாம் ஏன் இன்னொருவரிடம் சென்று நமது பிரச்சனைகளை கூறி அதற்கான தீர்வு கேட்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

முதலில் கவுன்சிலிங்(counselling) மற்றும் கோச்சிங்(coaching) இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நான் சொல்கிறேன். கவுன்சிலிங் என்பது ஒருவருடைய கடந்த கால நிகழ்வுகளில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வருவது. பழைய கெட்ட நிகழ்வுகளில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வருவது கவுன்சிலிங். கோச்சிங் என்பது ஒருவருடைய எதிர்காலத்தை பற்றியது. எதிர்காலத்தில் அவர்களுக்கு உள்ள இலக்கு என்ன, அதை எப்படி அடைவது, அதற்காக என்ன விஷயங்களை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் இந்த மாதிரி விஷயங்களை தான் லைப் கோச்சிங் என்று கூறுவார்கள்.

Advertisment

லைப் கோச்சை ஏதாவது பிரச்சனை இருந்தால் தான் சந்திக்க வேண்டும் என்பது இல்லை. கொரோனாவிற்கு பிறகு இதற்கான தேவை அதிகமாக உள்ளது. ஏனென்றால் ஊரடங்கின்போது அனைவரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பெண்கள் வேலையையும், வீட்டையும் பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது. அப்படித்தான் எங்களிடம் நிறைய பெண்கள் வர ஆரம்பித்தனர்.

நம்ம ஊரில் ஒரு மூடநம்பிக்கை இருக்கிறது. பெண்கள் வேலையில் கவனம் செலுத்தினால் குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியாது என்றும் குடும்பத்தை பார்த்துக் கொண்டால் அவர்களின் வேலையை வெற்றிகரமாக பார்த்துக் கொள்ள முடியாது என்றும் மக்கள் நினைக்கின்றனர். இது போன்ற கருத்துக்களை உடைக்கும் வகையில் நாங்கள் பெண்களுக்கு உதவி வருகிறோம். நாம் street players ஆக இருக்க வேண்டும் என்றால் நமக்கு ஒரு கோச் தேவைப்பட மாட்டார். ஆனால், நான் சாம்பியன் ஆக வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக நமக்கு ஒரு கோச் தேவைப்படுவார்.

Priya Thahir life coach

Advertisment

உங்களிடம் ஆலோசனை கேட்டு வரும் பெண்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனை என்ன?

பொதுவான பிரச்சனையை 40 வயதை அடைந்த பெரும்பாலான பெண்கள் சந்திக்கின்றனர். 45 வயதை கடந்தவர்கள் மெனோபாஸை(menopause) அடைகின்றனர். 80 சதவீத பெண்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் "நான் எனது குடும்பத்திற்காக எல்லாமே செய்தேன். என்னுடைய வேலை, பழக்க வழக்கங்கள் என நிறைய விஷயங்களை எனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவும், குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காகவும் விட்டுக் கொடுத்தேன். ஆனால், இன்று நான் தனிமையில் இருப்பது போல உணர்கிறேன். எனக்கென யாரும் இல்லாதது போல் இருக்கிறது. அனைவரும் அவர்களின் வாழ்க்கையில் பிஸியாக இருக்கின்றனர்".

குழந்தைகளை வளர்ப்பது போன்ற பொறுப்புகள் எல்லாம் இந்த வயதில் முடிவடைவதால் நாம் ரிலாக்ஸாக இருக்கும் பொழுது தான் நமது வாழ்க்கை எப்படி இருந்தது என திரும்பி பார்க்கிறோம். பொதுவாக அனைவரும் அவர்களின் வாழ்க்கையை திரும்பி பார்க்கும் பொழுது, நான் என்ன செய்து இருக்கிறேன் என்று யோசிக்கும் போது, எனக்காக நான் எதுவுமே செய்யவில்லை என்று கூறுகின்றனர். இதை பணரீதியாக சுதந்திரம் இல்லாத பெண்கள் தான் கூறுகிறார்களா என்று பார்த்தால், குடும்பத்தில் பணரீதியாக பிரச்சனை இல்லாதவர்களும் தனக்கான ஒரு அடையாளம் இல்லை என வருத்தப்படுகிறார்கள். 

Advertisment

Priya Thahir life coach

பெண்கள் பணரீதியாக சுதந்திரமாக இருப்பது எவ்வளவு முக்கியம்?

தனக்கென ஒரு வேலை, தனக்கென ஒரு சம்பளம் இருப்பது பண ரீதியான சுதந்திரம் அல்ல. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், பண ரீதியாக சுதந்திரமாக இருக்கும் பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நமது அம்மா, பாட்டி காலங்களில் இருந்து நிறைய பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். ஆனால் பணத்தை அவர்கள் கையாளுகிறார்களா? இன்றும் கூட என்னிடம் வரும் பெண்கள் பணம் சம்பாதித்தாலும் அவர்களின் பணத்தை குடும்பத்தில் வேறு யாரோ தான் கையால்கிறார்கள் என்று கூறுகின்றனர். பணம் சம்பாதிப்பதை விட அதை எப்படி கையாள்வது என்பதை பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

Advertisment

ஆண்களும், பெண்களும் குடும்பத்திற்காக தான் சம்பாதிக்கிறார்கள் என்றாலும் அதில் ஒரு பங்கை இன்வெஸ்ட்மென்ட் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். இன்று அனைத்தையும் கற்றுக் கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கின்றனர். இணையதளத்தில் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். கஷ்டமான சூழ்நிலைகள் வரும் பொழுது அதற்காக வருத்தப்படாமல் அதற்காக முன்பே தயாராக இருக்க வேண்டும். இதற்கு பணரீதியான சுதந்திரத்தை விட எமோஷனல் இண்டிபெண்டன்ஸ்(emotional independence) முக்கியமாக இருக்கிறது. பெண்கள் எமோஷனலாக இன்டிபென்டென்ட்டாக இருக்கும் பொழுது தான் எல்லா விஷயங்களிலும் சுதந்திரமாக யோசிக்க முடியும். 

Priya Thahir அவரின் வாழ்க்கை பயணம், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் பெண்களுக்காக நிறைய பயனுள்ள குறிப்புகளை Thuglife Thalaivi என்ற podcastஇல் அவர் பகிர்ந்துள்ளார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: Life Coach Priya Thahir's interview

Advertisment

 

 

Suggested Reading: Sew with Shama YouTubeஇல் எளிமையாக தைக்க கற்றுத் தருகிறார் Shama

Advertisment

Suggested Reading: ஊட்டச்சத்து நிபுணர் தர்ஷினியின் பயணம்(dietition dharshini)

Suggested Reading: Life Coach Priya Dhandapani வாழ்க்கை பயணம்

Suggested Reading: Some More Foods என்ற தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் தீபா

 

Life Coach Priya Thahir
Advertisment