Advertisment

Life Coach Priya Dhandapaniயின் வாழ்க்கை பயணம்

தனது பல வருட தேடலை கண்டறிந்து தற்போது மற்றவர்களுக்கு வழிகாட்டியாக மாறி இருக்கிறார் Life Coach Priya Dhandapani. அவரின் வாழ்க்கை பயணம் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Life coach Priya Dhandapani

Image of Priya Priya Dhandapani

ஒன்பது வருடங்களாக இல்லத்தரசியாக இருந்த ஒரு பெண் தற்போது மற்ற பெண்களின் வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு வளர்ந்துள்ளார். பிரியா தண்டபாணி என்பவர் அவருடைய பல வருடங்களான தேடலை கண்டறிந்து தற்போது ஒரு லைப் கோச்சாக(Life Coach) மாறியிருக்கிறார். தனது வாழ்க்கையில் ஒரு வழிகாட்டி தேவை என்று நினைத்து ஒரு லைப் கோச்சிடம் அவர் சென்றிருந்தார். அதன் பிறகு தனக்கு பிடித்ததை அறிந்து கொண்டு, அவரே ஒரு லைப் கோச்சாக மாறியிருக்கிறார்.

Advertisment

ப்ரியா தண்டபாணி அவர்களுக்கு 21 வயதில் திருமணம் ஆனது. பிறகு இரண்டு குழந்தைகளும் பிறந்தது. எல்லா இல்லத்தரசிகளும் திருமணம் ஆகி குழந்தை பிறந்தவுடன் அவர்களுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது என்று எண்ணுவதுண்டு. அப்படித்தான் பிரியாவும் எண்ணி இருக்கிறார். ஆனால் அவரின் பல வாழ்க்கை சூழ்நிலைகள் அவருக்கு பணரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியது. அதனால் ஏன் மற்றொருவரை எல்லா விஷயத்திற்கும் சார்ந்திருக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார்.

life coach priya dhandapani

குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு தனக்கான தேடலை அவர் ஆரம்பித்தார். இவர் அவ்வப்போது அவரின் யோசனைகளை வீட்டில் சொல்லும் பொழுது உன்னால் எப்படி முடியும் என்று சொன்னார்கள். அதனால் அவருக்கும் தன்னால் எதுவும் முடியாது என்ற யோசனை வந்துவிட்டது. தேடல்கள் இருந்தாலும் இந்த யோசனை அவரை தடுத்துக் கொண்டிருந்தது. அவரால் முடியும் என்று நினைக்காத வரையில் அவர் வாழ்க்கையில் இதுவும் மாறவில்லை. அவர் எப்பொழுது தன்னால் முடியும் என்று நம்பி அதற்கான முதல் படியை எடுத்து வைத்தாரோ அப்பொழுதுதான் அவருக்கு பல கதவுகள் திறக்க ஆரம்பித்தது.

Advertisment

சிறுவயதில் இருந்த இவரை எல்லோரும் நல்லா பேசுறீங்க என்று சொல்வதை வைத்து இவர் ஒரு RJ ஆகலாம் என்று நினைத்து RJ Workshops செல்ல ஆரம்பித்தார். ஆனால், எந்த இடத்திற்கு வேலைக்காக சென்றாலும் இல்லத்தரசியாக இருந்தேன் என்று சொன்னாலே அவர்கள் இல்லத்தரசிகளால் மற்ற வேலை செய்ய முடியாது என்ற கண்ணோட்டத்துடன் பார்த்தார்கள். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பூஜா புனித் என்ற லைப் கோச்சிடம் சென்றிருக்கிறார்.

life coach Priya Dhandapani

அவருடைய லைப் கோச் பூஜா உன்னால் முடியும் என்ற வார்த்தையை கூறினார். வாழ்க்கையில் அதுவரையில் உன்னால் முடியாது என்ற சொற்களையே கேட்டு வளர்ந்த ஒரு பெண் முதல் முறையாக ஒருவர் உன்னால் முடியும் என்று சொன்னதை கேட்டபொழுது அவருக்கு புதிதாக ஒரு நம்பிக்கை வந்தது. அதன் பிறகு வாழ்க்கையில் அவர் எங்கு இருக்கிறார், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்பொழுதும் பூஜா தான் இவருக்கு வழிகாட்டி இருக்கிறார். சிறு வயதிலிருந்து பிரியாவிடம் அனைவரும் அவர்களின் கஷ்டத்தை பகிர்வது உண்டு. அதேபோல் பிரியா மற்றவர்கள் கூறுவதை பொறுமையாக கேட்கும் ஆற்றலும் பெற்றிருந்தார். அது மட்டும் இல்லாமல் நன்றாகவும், ஆறுதலாகவும் பேசுவார். அதனால் அதை கவனித்த பூஜா " நீ ஆரம்பத்திலிருந்தே ஒரு லைக் கோச்சாக தான் இருந்திருக்கிறாய்" என்று கூறினார். இதைக் கேட்ட பிறகு தான் பிரியா தனது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை வைத்து தான் ஒரு லைப் கோச் ஆக வேண்டும் என்று முடிவெடுத்தார்.

Advertisment

ஆனால் திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் வீட்டிலேயே இருந்த ஒரு பெண் லைஃப் கோச் ஆக படிக்க வேண்டும் என்ற போது வீட்டில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் பிரியா தனது கணவரிடம் படிப்பிற்காக 6 லட்சம் கடனாக கேட்டு, அவரை மெருகேற்றிக் கொள்வதற்காக நிறைய படிக்க ஆரம்பித்தார். எல்லாரும் வியக்கும் விதமாக எட்டு மாதத்திலேயே ஆறு லட்ச ரூபாய் கடனை அடைத்தார். தற்போது அவர் பணரீதியாக சுதந்திரமாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறார். 

பிரியாவின் ஆலோசனை:

உங்களுக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றால் நீங்கதான் போராட வேண்டும். வேற யாரும் உங்களுக்காக போராட மாட்டார்கள். உலகமே உங்களுக்கு உதவி செய்ய மறுத்தாலும் நீங்கள் உங்களுக்கு உதவி செய்து கொள்ள வேண்டும்.

Advertisment

 

Click Here to listen Priya Dhandapani's podcast: Homemaker to Life Coach

 

Advertisment

Suggested Reading: Celebrity Designer Abarnaவின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இலவச ஆலோசனை - Nandhini Entrepreneur

Suggested Reading: காதல் தோல்விக்கு பிறகு ஆரம்பித்த போட்டோகிராபி பயணம் - Anita Kamaraj

Suggested Reading: பெண்களும், புதிதாக குழந்தை பெற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை

Life Coach Life Coach Priya Dhandapani
Advertisment