/stp-tamil/media/media_files/KTgeofhnr7oKKxAlz7hm.png)
Image of Anita Kamaraj
Thuglife Thalaivi என்ற Podcastஇல் அனிதா காமராஜ் அவரின் வாழ்க்கை பயணத்தை பற்றி பகிர்ந்துள்ளார். அது மட்டும் இன்றி இளைஞர்களுக்கும், புதிதாக போட்டோகிராபி தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் சில டிப்ஸ்களையும் அவர் வழங்கியுள்ளார். அவருடன் நடந்த நேர்காணலில் இருந்து சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டோகிராபி மீது ஆர்வம் எப்படி வந்தது?
சிறுவயதில் இருந்த எனக்கு புகைப்படங்கள் எடுக்க பிடிக்கும். ஆனால் அதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. கல்லூரி படிக்கும் பொழுது நான் ஒரு மோசமான நிலையை கடக்க வேண்டி இருந்தது. அதிலிருந்து வெளி வருவதற்காக நான் புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். அப்பொழுது எனக்கு அட்டென்ஷன் கிடைத்தது. எனக்கு அந்த விஷயம் பிடித்திருந்தது. எதிர்மறையான விஷயத்தில் இருந்து வெளிவர போட்டோகிராபி எனக்கு உதவியது. அப்பொழுது தான் நான் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ள முடிவு செய்தேன். மக்களுக்கும் எனது புகைப்படங்கள் பிடிக்கிறது என்பதால் நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்று நம்பினேன். ஆனால், அப்பொழுதும் முழு நேரமாக போட்டோகிராபி பண்ணவில்லை. கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக தான் இதை நான் கவனத்தோடு முழு நேரமாக செய்து கொண்டிருக்கிறேன்.
டிஜிட்டல் மீடியா உங்களுக்கு எப்படி உதவியது?
நான் ஆரம்பித்த காலத்தில் Instagram சிறிதாக தான் இருந்தது. அப்பொழுது Facebook தான் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் பேஸ்புக்கில் பதிவிட்டால் பெரிதாக மக்களை சென்றடையுமா என்பது தெரியவில்லை. ஆனால், சமூக வலைதளத்தினால் இப்பொழுது பல மக்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. அதன் மூலமாக தான் எனக்கு ஆர்டர்களும் வருகிறது.
உங்கள் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை?
நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு பிரேக் அப் நடந்தது. அது என்னுடைய முதல் காதல் என்பதால் எனக்கு அது வித்தியாசமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. நான் சிறு வயதிலிருந்து ஓவர் வெயிட்டாக இருப்பதால் நம்மை ஏற்றுக் கொள்ளும் ஒரு நபர் இல்லாமல் போய்விட்டார் என்ற உணர்வு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒருவேளை அந்த பிரேக்கப் நடக்கவில்லை என்றால் நான் போட்டோகிராபி செய்திருக்கவே மாட்டேன்.
நீங்கள் முழு நேரமாக போட்டோகிராபராக இருக்கப் போகிறேன் என்று கூறிய போது வந்த கருத்துக்கள் என்ன?
இன்றும் பலர் இதை ஒரு தொழிலாக ஏற்றுக் கொள்வதில்லை. சாதாரணமாகவே மீடியா என்றால் நிறைய கஷ்டங்கள் இருக்கும் என்ற எண்ணும் இருக்கிறது. இவ்வளவு படித்துவிட்டு எதுக்கு போட்டோகிராபி பண்ற போற? போன்ற கேள்விகளை நான் சந்தித்தேன். நெருங்கிய உறவினர்களும் இப்படித்தான் நினைக்கின்றனர். இதை அவர்கள் ஒரு தொழிலாக பார்க்க தவறிகின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் இதுவும் ஒரு வேலை தான் என்று அவர்கள் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
நீங்கள் வாழ்க்கையில் சோர்வாக இருக்கும் போதெல்லாம் எப்படி உங்களை ஊக்குவித்துக் கொள்வீர்கள்?
இப்படி சொல்லலாமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், என் வேலை தான் என்னை விவரிக்கிறது. எனது கவனம் முழுக்க வேலையில் தான் இருக்கும். உதாரணத்திற்கு, ஒரு நாள் எனக்கு மோசமான நாளாக இருக்கிறது என்றால் என்னை யாராவது வா நம்ம ஷூட் பண்ணலாம் என்று அழைத்து, நான் அந்த கேமராவை எடுத்து புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தால் அந்த இரண்டு மணி நேரம் எந்த கவலையும் இல்லாமல் நான் இருப்பேன். இது ஒரு அழகான உணர்வு. நிறைய பேர் நான் எப்பொழுதும் வேலை செய்து கொண்டே இருக்கிறேன் என்று கூறுவார்கள். ஆனால், அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் எனக்கு ஒரு சிகிச்சையாகவும் இருந்து வருகிறது.
பணரீதியாக சுதந்திரமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
அதுதான் ரொம்ப முக்கியம். அப்பொழுது தான் உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்களுக்கு வேண்டியதை யாரையும் சார்ந்து இல்லாமல் நீங்களே செய்து கொள்ளலாம். அது மகிழ்ச்சியை தாண்டி ஒரு சுதந்திரம். யாரையும் சார்ந்து இல்லாமல் இருப்பது ஒரு சுதந்திரம், கண்டிப்பாக அனைவரும் அதை அனுபவிக்க வேண்டும். ஒரு முறை அதை அனுபவித்து விட்டால் மீண்டும் திருப்பி செல்ல கூடாது என்பதை புரிந்து கொள்வார்கள்.
இது மட்டும் இன்றி மேலும் பல தகவல்களையும், போட்டோகிராபியை தொழிலாக செய்ய வேண்டும் என்பவர்களுக்கு சில டிப்ஸ்களையும் Thuglife Thalaivi என்ற Podcastஇல் அனிதா காமராஜ் பகிர்ந்துள்ளார். அதனைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.